சூலூர் விமான மையம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான மையத்தில் பாதிப்பா!?
கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூலூர் விமான மையத்தில் பாதிப்பா!?
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் பகுதியில் புல எண்: 116 விஜயலட்சுமி புளு மெட்டல்ஷ் கல்குவாரி இயங்கி வந்து தற்பொழுது அனுமதி முடிந்து ஒரு மாதம் ஆகிய நிலையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த வெடி மருந்தானது கடந்த 15.11.2023 மாலை சுமார் 5:00 மணி அளவில் கடுமையான சத்தத்துடன் வெடித்து அங்கிருந்த RC கட்டிடமானது தரைமட்டமானது மேலும் சுமார் 3 கி.மீ முதல் 5 கி.மீ வரை நில அதிர்வு ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் பல்வேறு கட்டிடங்களில் விரிசல்கள், ஜன்னல் கண்ணாடி உடைப்பு போன்ற நிகழ்வுகள் அரங்கேறி இருக்கிறது.
மக்கள் வீட்டிலிருந்து முந்தியடித்துக் கொண்டு பதற்றத்தில் வெளியேறி இருக்கின்றனர். வாகனத்தில் சென்றவர்கள் சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்து வாகனத்தை நிறுத்திவிட்டு பிறகு சென்று இருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் தற்போது அதிர்ச்சிகரமான செய்தியாக அருகில் 2.5 கி.மீ தொலைவில் உள்ள இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூலூர் விமான மையத்தில் பாதிப்பு ஏற்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விசாரணை முடுக்கிவிடப்படுமா ?
சட்ட விரோத வெடி மருந்து நடமாட்டம் தடை செய்யப்படுமா?
பயங்கரவாதிகளிடம் சட்ட விரோத வெடி மருந்து சிக்கினால் நாடு தாங்குமா?