மாநகராட்சி

சென்னை அண்ணா நகரில் உள்ள (rose water restaurant) பிரபல உணவகத்திற்கு சீல்!கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் ,இரா  சமையலறையில் இருந்ததால் அதிர்ச்சி !

சென்னை அண்ணாநகர் நான்காவது பிரதான சாலையில் V பிளாக்கில் அமைந்துள்ளது ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்ட்..
ரோஸ் வாட்டர்  ரெஸ்டாரன்ட் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.இந்த உணவகம் ஆரம்பிக்கும் பொழுது அனைவரையும் கவரும் வகையில் நூதன முறையில் விளம்பரம் செய்யப்பட்டது. சென்னையில் அனைவராலும் பேசப்பட்ட ஒரு உணவகம் என்றும் இந்த உணவகம் சிறந்த விருது பெற்றுள்ளதாகவும் உணவகத்தில் சாப்பிடும் அமைப்பு மிகவும் நவீனமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த உணவகத்திற்கு 3.8 ஸ்டார்*கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விளம்பரம் செய்துள்ளனர்.


ஆனால் இந்த உணவகத்தில் சாப்பிட்ட பல பேர் தங்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த உணவகத்தில் உள்ள உணவை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து அண்ணாநகர் உணவு பாதுகாப்பு அதிகாரி ராமராஜ் அவர்கள் அதிரடியாக சோதனை இட்டதில் குளிரூட்டும் ( ஃப்ரீசரில்) வைத்திருந்த

சமைத்தது மற்றும் சமைக்காத சிக்கன் மட்டன் மீன் இறால் கெட்டுப் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் சமைத்து பல நாட்கள் ஆன சிக்கன் மட்டன் வகைகளை குளிரிட்டும் சாதனத்தில் வைத்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதிகாரிகள்.


இது சம்பந்தமாக சமையலறையில் உள்ள நபரிடம் கேட்டபோது நேற்று வாங்கியது என்று முன்னுக்குப் புறனாக பதில் அளித்தார் ஹோட்டல் மேலாளரை அழைத்து எப்பொழுது இதை சமைத்து உள்ளே வைத்துள்ளீர்கள் சிக்கன் மட்டன் எங்கு வாங்கினீர்கள் எப்போது வாங்கினீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதில் அவர்கள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தனர். உடனே அதிகாரிகள் அவர்களைப் பார்த்து இந்த உணவை நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு மௌனம் மட்டுமே அவரது பதிலாக இருந்தது. அதன் பின்னர் ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடையில் இருக்கும் அனைவரையும் வெளியேற்றிவிட்டு கடைக்கு சீல் வைத்தனர் அதன் பின்னர் உணவகத்தில் இருந்த மீன் மற்றும் இரா சிக்கன் அனைத்தையும் எடுத்து ஒரு குப்பை போடும் தொட்டியில் போட்டு கெமிக்கல் பவுடரை போட்டு கட்டி சோதனைக்கு எடுத்துச் சென்றனர்.


கடையை சீல் வைத்த பின்னர் அதிகாரிகள் கூறியது தற்போது 5000 ரூபாய் அவதாரம் கடையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றி கடைக்கு சீல் வைத்துள்ளோம்.அங்கு இருந்த உணவு வகைகளை எடுத்துக்கொண்டு சோதனையிட அனுப்பவுள்ளோம். சோதனைக்கு பின் கெட்டுப்போன உணவு என்று சான்றிதழ் வந்தால் கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளோம். அதுமட்டுமில்லாமல் இது போன்ற கெட்டுப்போன உணவுகளை சமைத்து விற்பவர்கள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இது எப்படியோ சென்னையில் தற்போது படித்த இளைஞர்கள் தங்களது உணவு வகைகளை ஆடம்பரம் என்று நினைத்து இதுபோன்று ஆடம்பரமான உணவகத்தில் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்து தங்கள் உடம்புகளை பாழாக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகையால் சென்னையில் ஆடம்பரமாக உள்ள உணவகங்களை யாரும் நம்பி குடும்பத்துடன் உணவு அருந்த செல்ல வேண்டாம் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒன்றே சாட்சியாக இருக்கும் என்பதே நிதர்சனம்.
அது மட்டும் இல்லாமல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மட்டுமே நடத்திவிட்டு அதன் பின்பு அபதாரம் விதித்து விட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து உணவங்களிலும் தினந்தோறும் சோதனை இட்டால் மட்டுமே உணவகங்கள் நடத்தும் உரிமையாளர்களுக்கு உணவுத் துறை அதிகாரி மீது பயம் இருக்கும் ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உணவு பாதுகாப்பு அதிக சோதனையை திருடி படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button