மாவட்டச் செய்திகள்

மணிப்பூரில் இருந்து ரயிலில் தப்பி வந்து பசி பட்டினியுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு வீடு கொடுத்து உதவிக்கரம் நீட்டியதாக கூறிய மோசடி நபரை நேரில் அழைத்து பாராட்டிய சென்னை மாவட்ட ஆட்சியரின் அவல நிலை!?

சென்னை செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த மூர்த்தி  தம்பி பெயர் கண்ணன்(வயது61 ).

மூர்த்தி அவருடைய சகோதரர் கண்ணன்

மூர்த்தி ரெட்டில்ஸ் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார் . பர்மா உணவகம் நடத்தி வருகிறார்.

அதேபோல் மூர்த்தியின் சகோதரி அருகில் வசித்து வருகிறார் அவருடைய தம்பி கண்ணன் ஏழு வயதில் மணிப்பூர் மாநிலத்திற்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து மணிப்பூர் மாநிலத்து பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கண்ணன் தன்னுடைய பெயரை ஜோசப் காம் கேன் தாங் என மாற்றிக் கொண்டார். இவருக்கு தற்போது வயது 54. மனைவி மூன்று பெண்  இரண்டு ஆண்கள் உள்ளனர்.

மணிப்பூரிலிருந்து தன் குடும்பத்துடன் தப்பி ஓடி வந்ததாக கூறிய கண்ணன் என்ற ஜோசப்

கடந்த 80 நாட்களாக மணிப்பூரில் கலவரம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் ஜோசப் தன்னுடைய குடும்பத்துடன் மணிப்பூரில் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு அவர் வைத்திருந்த ஆட்டோ மற்றும் பயணிகள் ஏற்றிச்செல்லும் வாகனம் இரண்டிலும் தன் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள சர்ச்சுக்கு சென்று தங்கியுள்ளார். மறுநாள் தான் வைத்திருந்த இரண்டு வாகனங்களையும்  ஒரு நபரிடம் விற்று சுமார் 50,000 வரை பணம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து பேருந்து வழியாக ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் நிலையிலிருந்து சென்னையில் உள்ள தன்னுடைய உடன் பிறந்த சகோதரர் மூர்த்திக்கு போன் செய்த ஜோசப் நான் என் குடும்பத்துடன் சென்னைக்கு வந்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். அதுபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜோசப் தன் குடும்பத்துடன் வந்த போது ரயில் நிலையத்தில் காத்திருந்த அவருடைய சகோதரர் மூர்த்தி அவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  இதுதான் நடந்த உண்மை. ஆனால் இந்த உண்மையை அனைத்தையும் மறைத்து ஒட்டுமொத்த அதிகாரிகளையும் தன் வசம் திசை திருப்பி நாடகத்தை அரங்கேற்றி உள்ளார் மூர்த்தி.

அரங்கேற்றிய நாடகத்தின் பின்னணி!மணிப்பூரிலிருந்து மூர்த்தியின் தம்பி கண்ணன் ஜோசப் வந்து சில நாட்களுக்குப் பின்பு மூர்த்தி  தன்னுடைய தம்பி குடும்பத்துடன் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் 27/07/2023 மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் என் பெயர் ஜோசப் என்றும் நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்றும் பல வருடங்களுக்கு முன்பு மணிப்பூருக்கு சென்று அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது அங்கேயே குடும்பத்துடன் வசிக்கிறேன். எங்கள் குடும்பத்தில் நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் இருக்கிறோம்.தற்போது மணிப்பூரில் இரண்டு சமுதாயத்தினர் இடையே கலவரம் நடப்பதால் நாங்கள் வசித்த வீட்டில் தீ வைத்து கொளுத்தி விட்டு எங்களை அடித்து விரட்டி விட்டதாகவும் நாங்கள் காடு மலை கடந்து பல நாட்களாக பசி பட்டினியுடன் ரயில் மூலம் தப்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு  வந்த இடத்தில் குடும்பத்துடன் என்ன செய்வது தெரியாமல் இருந்தபோது ரெட்டில்ஸ் சேர்ந்த மூர்த்தி என்ற நல் உள்ளம் கொண்ட ஒருவர் எங்களை அழைத்துக் கொண்டு உணவு கொடுத்து அவரது வீட்டிற்கு அருகே 3000 ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து அனைத்து வசதிகளையும் எங்களுக்கு செய்து கொடுத்தார் என்றும் தற்போது நாங்கள் ஒன்பது பேர் எங்கள் குடும்பத்தில் இருப்பதாகவும் எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் இருந்தது. அந்தக் கோரிக்கை மனுவை பார்த்த அதிகாரிகள் உடனே சென்னை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.

மூர்த்தியை அழைத்து சென்னை மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்த போது

அதிகாரிகளை ஏமாற்றி நாடகம் நடத்தி வருகிறார் ஜோசப் அண்ணன் மூர்த்தி என்று தெரியாத சென்னை மாவட்ட ஆட்சியர் எந்த விசாரணையும் நடத்தாமல் உடனே மூர்த்தி அவரை அழைத்து மணிப்பூரிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு உதவி செய்ததற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர். அதன் பின்பு திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் கொடுத்து ஜோசப் குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும்படி அதிரடி உத்தரவு சென்னை ஆட்சியர் பிறப்பித்ததாகவும் அதன் அடிப்படையில் திருவள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஜோசப் குடியிருந்த வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாகவும் இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு தெரிய வர உடனே அவர்களால் முடிந்த அரிசி பருப்பு போன்ற அனைத்து உணவுப் பொருட்கள் அனைத்தையும் ஜோசப் குடும்பத்திற்கு கொடுத்துள்ளனர். ஆனால் இது எல்லாமே ஜோசப் மற்றும் அண்ணன் மூர்த்தி இரண்டு பேரும் சேர்ந்து அரசு அதிகாரிகளை ஏமாற்றி நடத்திய நாடகம் என்ற உண்மையை ஜோசப் அவரது சகோதரர் மூர்த்தி இருவருமே ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். எது எப்படியோ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்கள் வந்து குவிந்த வண்ணம் இருப்பது தான் நிதர்சனம். இந்தக் கோரிக்கை மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவார்கள் அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி தீர்வு காணப்படுவது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்து சதவீதம் கூட இருக்காது அதுதான் உண்மை. ஆனால் மணிப்பூரிலிருந்து குடும்பத்துடன் தப்பி வந்ததாகவும் எனக்கு ரயில் நிலையத்தில் ஒருவர் உதவி கரம் நீட்டி அடைக்கலம் கொடுத்தார் என்றும் எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் தனிப் பிரிவில் கோரிக்கை மனு கொடுத்த போது அந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர் ஆனால் மாவட்ட ஆட்சியர் மணிப்பூரில் இருந்து வந்த குடும்பத்துடன் வந்த நபர்கள் யார் என்றும் இவர்கள் மணிப்பூரில் இருந்து எப்போது வந்தார்கள் என்றும் அவர்களுடைய பின்புலம் என்ன என்று வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து விசாரணை மேற்கொள்ளாமல் ஆர்வக்கோளாறு காரணமாக உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி கண் மூடித் தனமாக அரசு உதவிகளை செய்துள்ளது தான் வேதனையாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உதவிகளை செய்ய வேண்டாம் என்று எந்த சமூக ஆர்வலர்களும் சொல்லவில்லை. ஆனால் மணிப்பூரில் இருந்து குடும்பத்துடன் வந்தவருடைய சகோதரர் அவருடைய சகோதரி சென்னையில் நல்ல வசதியாக இருப்பதாகவும் அவர்கள் இவர்களை அழைத்து வைத்துக்கொண்டு தவறான செய்திகளை அரசாங்கத்திற்கு கொடுத்து அரசு உதவிகளை பெறுவதால் இதுபோன்று வேறு நபர்கள் அரசாங்கத்தை ஏமாற்றி அரசு உதவிகளை பெறுவதற்கு வழிவகுக்கும் .ஆகையால் மணிப்பூர் கலவரத்தால் மத்திய அரசை தற்போது தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில் இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில நபர்கள் அரசை ஏமாற்றி அரசு நலத்திட்டங்களை மோசடியாக பெற்றுவிடலாம் என்ற ஒரு கூட்டம் தற்போது சென்னையில் இறங்கியுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. ஆகவே எந்த மாநிலத்தில் இருந்தும் தமிழகத்திற்கு குடும்பத்துடன் வரும் நபர்களை அகதிகள் முகாமில் தங்க வைத்து அவர்கள் முகவரி வசிப்பிடம் அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button