உணவு பாதுகாப்பு

சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தரமற்ற சுகாதாரமற்ற கெட்டுப் போய் துர்நாற்றம் வீசும்  உணவு விற்பனை செய்யும்( TFS Chennai private limited)டிராவல் புட் சர்வீஸ் நிறுவனம்!
கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!

சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தரமற்ற சுகாதாரமற்ற கெட்டுப் போய் துர்நாற்றம் வீசும்  உணவு விற்பனை செய்யும்( TFS Chennai private limited)டிராவல் புட் சர்வீஸ் நிறுவனம்! அதிர்ச்சி தகவல்
கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!

சென்னை விமான நிலையம் டிராவல் புட் சர்வீஸ்


சென்னை விமான நிலையத்தில் இரண்டு நுழைவாயில்கள் உள்ளது ஒன்று உள்நாட்டு விமானத்தில்பயணிகள்  செல்லும் நுழைவாயில்  மற்றொன்று வெளிநாட்டு விமான பயணிகள் செல்லும் நுழைவாயில். சென்னை விமான நிலையத்தில் நாளொன்றுக்கு குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. நாளொன்றுக்கு குறைந்தது ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த விமான நிலையத்தில் உள்ளே ட்ராவல் புட் சர்வீஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பயணிகள் உணவருந்த அனுமதி பெற்றுள்ளது. இந்த நிறுவனம் விமான நிலையத்தில் உணவகம் வைப்பதற்கு பெரிய தொகை லஞ்சமாக கொடுத்து இந்த அனுமதியை பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது சென்னை விமான நிலையத்தில் வேறு எந்த நிறுவனமும் உணவு விடுதி வைக்க வேண்டும் என்று கனவில் நினைக்க முடியாது. ஏனென்றால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் மத்திய அமைச்சர்கள் ஆதரவுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆனால்  இந்த நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி விமான பயணிகள் விமானத்தில் பயணம் செய்யும் முன்பு உணவு அருந்தி செல்வது வழக்கம். ஆனால் அதற்காக விலை குறைவாக இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம் ஏனென்றால் உயர்தர உணவகத்தில் சாப்பிடுவதைவிட பத்து மடங்கு இங்கு அதிகமாக இருக்கும். வெளியில் காபி இருபது ரூபாய் என்றால் இருநூறு ரூபாய்க்கு இந்த டிராவல்ஸ் புட் சர்வீஸ் உணவகத்தில் விற்பனை செய்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு உணவிற்கும் 10 மடங்கு அதிகமாக வைத்து விற்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கெட்டுப்போய் துர்நாற்றம் வீசும் உணவை வழங்குவதாக பயணிகள்

அதுமட்டுமில்லாமல் விற்பனை செய்யும் உணவு வகைகள் அனைத்தும் தரமற்ற சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் 04/01/2023 அன்று மலேசியா செல்லும் பயணிகள் மூன்று பேர் இந்த உணவகத்தில் சாப்பிடுவதற்கு சென்றுள்ளார்கள். அப்போது மோமோஸ் என்ற உணவை வாங்கியுள்ளார்கள். அந்த தரமற்ற நிலையில் கெட்டுப் போய்  துர்நாற்றம் வீசி உள்ளது. இதை அறிந்த அந்தப் பயணிகள் அந்த உணவு வைத்திருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர் அங்கு பார்த்தால் அந்த உணவு கெட்டுப்போய் பல நாட்களாக இருப்பதாக அங்கு பணி செய்த ஊழியர்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக உணவகத்தின் மேலாளர் இடம் பயணிகள் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு அந்த மேலாளர் பயணிகளை தரை குறைவாக அநாகரிகமாக பேசி உள்ளார். அதன் பின்பு பயணிகளிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பி வழங்கி உள்ளனர்.இது சம்பந்தமாக அந்த பயணிகள் அந்த உணவை புகைப்படம் எடுத்து பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பி உள்ளனர். இப்படி சுகாதாரமற்ற கெட்டுப்போன உணவு பண்டங்களை விற்கும் உணவு விடுதிகளின் அனுமதியை ரத்து செய்யாமல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் இந்த உலகத்தில் சாப்பிட்டு செல்லும் விமான பயணிகள் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. ஆகவே சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை விமான நிலையத்தில் உள்ள டிராவல்ஸ் புட் சர்வீஸ் உணவகத்தை சோதனை செய்து தர மற்ற கெட்டுப்போன உணவுகளை விற்கும் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அனுமதியை ரத்து செய்தால் மட்டுமே விமான பயணிகள் அச்சம் இல்லாமல் உணவகத்தில் சாப்பிட்டு செல்ல முடியும் என்ற ஒரு நிலை உருவாகும் என்பதுதான் விமான பயணிகளின் கோரிக்கை ஆகும்..
இது மட்டுமல்லாமல் கெட்டுப்போன உணவை விற்பனை செய்ததாக சம்பந்தப்பட்ட விமான பயணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர் ஆகவே விமான பயணிகள் விமான நிலையத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிடும் முன்பு அந்த உணவு நன்றாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கி சாப்பிடுமாறு அந்த பயணிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கையை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button