காவல் செய்திகள்

சென்னை காவல்துறை உயர் அதிகாரிகளின் டார்ச்சர்!?! மன அழுத்தத்தால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் நெஞ்சு வலியால் மருத்துவ மனையில் அனுமதி!??
நலம் விசாரித்த காவல் துணை ஆணையர்!

டி நகர்போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் . இதை அறிந்த மாம்பழம் துணை காவல் ஆணையர் சக்திவேல் உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சையில் இருக்கும் போக்குவரத்து காவலாக பெருமாள் அவர்கள் மனைவியிடம் நலம் விசாரித்ததுடன் காவல் அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார்.

போக்குவரத்துக் காவல் ஆய்வாளரை காவல்துறை ஆணையர் சக்திவேல் நேரில் சென்று நலம் விசாரித்த போது

அப்போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் அவர்கள் மனைவி காவல் துணை ஆணையர் சக்திவேல் இடம் எனது கணவர் ஓய்வில்லாமல் இரவு பகலாக பணியில் இருப்பதால் மன உளைச்சலால் மன அழுத்தம் ஏற்பட்டு என் கணவருக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதாக கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.


நாம் இது சம்பந்தமாக சில போக்குவரத்து காவலர்களிடம் விசாரித்த பொழுது சில தினங்களுக்கு முன்பு சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி. சரத்கர் ஒரு குறிப்பு ஆணை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அந்த அறிக்கையில் ஒரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் குறைந்தது நாளொன்றுக்கு 100 வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். அதுவும் 50 வழக்குகள் 1200 ரூபாய் வீதம் வசூல் செய்ய வேண்டும் என்றும் அந்த குறிப்பில் இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த குறிப்பானை வெளிவந்த பின்னர் பெரம்பூரில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் 1200 ரூபாய் அபதாரம் கட்ட வற்புறுத்தியதாகவும் அப்போது ஓட்டுநருக்கு காவல் உதவி ஆய்வாளருக்கு முதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது.


ஆனால் சென்னை கூடுதல் காவல் ஆணையர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தினம் தோறும் போக்குவரத்து காவலர்களுக்கு வழக்குகள் போட அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
வேலை அழுத்தம் காரணமாகவே மாம்பழம் போக்குவரத்து காவல் ஆய்வாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் சென்னை மாநகரிலுள்ள போக்குவரத்துக் காவல் ஆய்வாளர்கள் வேலை அழுத்தத்தின் காரணமாக எத்தனை பேருக்கு இது போல் நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற தெரியவில்லை என்று போக்குவரத்து காவலர்கள் வேதனையை தெரிவித்துள்ளனர்.
இது எப்படியோ இரவும் பகலும் ஓய்வில்லாமல் இருக்கும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு வாரம் ஒரு முறை ஓய்வு கொடுத்தால் மட்டுமே மன அழுத்தத்திலிருந்து விடுபடுவார்கள் என்று ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கென சில விதிமுறைகளும் உள்ளன.வாகனங்களை எவ்வாறு நிறுத்துவது எனத் தொடங்கி எந்தெந்த ஆவணங்களைத் தணிக்கை செய்வது, வாகன ஓட்டிகளை எவ்வாறு அணுகுவது, தடுப்பரண்களை எங்கு வைப்பது என்பதுவரை போக்குவரத்து காவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து கேட்டோம்.
பொதுவாக வாகன தணிக்கையில் ஈடுபடும்போது `commercial vehicles’ எனப்படும் வணிகசார் வாகனங்கள் மற்றும் சொந்த பயன்பாட்டுக்கான பொதுமக்களின் வாகனங்கள் என இருவேறு விதமான வாகனங்களைப் பரிசோதிப்பதுண்டு. இருசக்கர வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கார்களை சோதனை செய்யும்போது வாகனத்தின் ஆவணங்களான `RC book’ எனப்படும் வாகனம் பதிவு செய்யப்பட்டதற்கான நகல், காப்பீடு சான்றிதழ் மற்றும் வாகன ஓட்டுனரின் உரிமம் (Driving License) ஆகிவற்றை முக்கியமாகக் கேட்போம். இதுவே வணிகசார் வாகனங்களான லாரி மற்றும் பல்வேறு வகையான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அவ்வண்டியின் Permit-ஐ மிக முக்கியமாகப் பரிசோதிப்போம். இவற்றோடு சேர்த்து மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழையும் (pollution control certificate) நாங்கள் பரிசோதிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் இதை நாங்கள் கேட்பதில்லை” என்றார்.
தணிக்கை செய்யப்போகும் வாகனங்களை நிறுத்துவதிலும் குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றுவதாகக் கூறுகிறாரகள்.வாகன தணிக்கையில் ஈடுபடும் எங்களது செக் பாயின்டுகளை நாங்கள் பெரும்பாலும் போக்குவரத்து சிக்னல்கள் அருகிலேயே அமைப்போம். விதிமீறல்கள் ஏதேனும் அரங்கேறினால் எங்களால் விரைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைக் கருத்தில்கொண்டே அவ்வாறு அமைக்கிறோம். மேலும், ஏதேனும் ஸ்பெஷல் செக் பாயின்டுகள் அமைத்து சோதனை மேற்கொண்டால் குறிப்பிட்ட தொலைவு முன்பாகவே தடுப்பரண்கள் அமைத்து வாகனங்களின் வேகத்தைக் குறைத்த பின்தான் அவர்களை நிறுத்துவோம். ஏதேனும் எதிர்பாராத சமயங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. டிபார்ட்மென்டில் யாரேனும் ஒருவர் இருவர் இதுபோன்று செயல்களைச் செய்கிறார்கள். ஆனால், இதுபோல செய்வது முற்றிலும் தவறான ஒன்று. இவ்வாறு வண்டியை நிறுத்துவது வாகன ஓட்டிகளுக்கும் சரி, போலீஸாருக்கும் சரி எந்த நொடியிலும் ஆபத்தை விளைவிக்கும்” என்றார்.

“ `Barricade’ எனப்படும் தடுப்பரண்களை சாலைகளில் வைப்பதில் எங்களுக்கு எந்தவிதமான விதிகளும் இல்லை. ஒரு இடத்தின் தேவைக்கேற்ப அதாவது, விபத்துப் பகுதியில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இருக்கலாம் அல்லது அதிக மக்கள் மற்றும் வாகன நெரிசல் கொண்ட பகுதிகளில் போக்குவரத்தை சரி செய்வதற்காக இருக்கலாம். அந்தந்தப் பகுதிகளின் போக்குவரத்து அதிகாரிகள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சாலைகளின் சீரான போக்குவரத்துக்காக அவர்களின் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தே தடுப்பரண்கள் வைக்கப்படும்.”

பரிசோதனையில் ஈடுபடும் போக்குவரத்துக் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் அவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது போன்ற பல வீடியோக்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் பார்த்திருப்போம். அது போன்ற சமயங்களில் போலீஸாரின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, “இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஒரு அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்ற ரீதியில் எங்களால் வழக்கு தொடுக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்வதில்லை.

என்னதான் எல்லா ஆவணங்களையும் சரியாக வைத்திருந்தாலும் “அந்த சிக்னல்ல டிராஃபிக் போலீஸ் நிப்பாங்க, இந்தப் பக்கம் வண்டிய விடு” எனச் சொல்பவர்கள் நம்மில் ஏராளம். வாகனங்களைத் தணிக்கை செய்து போக்குவரத்தை சரி செய்வதைப் பணியாகக் கொண்ட போக்குவரத்து காவலர்களுக்கு நாம் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம்.


நாங்கள் தணிக்கை செய்யும் அனைத்து வாகன ஓட்டிகளுமே ஏதேனும் ஒரு வேளையில் அவசரமாகப் போய்க் கொண்டிருப்பார்கள். அந்தச் சமயத்தில் நாங்கள் அவர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டால் நிச்சயம் கோபம் வரத்தான் செய்யும். அதனால் அவர்களை முடிந்தவரை சமாதானம் செய்ய முயல்வோம். ஸ்பாட்டில் இருக்கும் அதிகாரிகள் அல்லது ஏதேனும் உயரதிகாரிகளை அழைத்து அவர்களின் தவற்றை உணரவைத்து அனுப்பிவிடுவோம்” என்று நேர்மையான காவல் துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button