சென்னை டி நகர் பாண்டி பஜாரில் காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த 25க்கும் மேற்பட்ட கார் கண்ணாடிகளை உடைத்து வாகன ஓட்டுநர்களை கொலை மிரட்டல் விட்ட போதை ஆசாமிகள்!
சென்னை டி நகர் 25 கார் கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவர்களை வாகன ஓட்டுனர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்!
சென்னை டி நகர் வாணி மகால் அருகேஅருகே நள்ளிரவில் இரண்டு சக்கர வாகனத்தில் போதையில் வந்த இருவரை டி நகர் போக்குவரத்து காவல்துறையினர் நிறுத்தி அபதாரம் விதித்ததால்
ஆத்திரமடைந்த போதை சாமிகள்
டிநகரில் பாண்டி பஜார் ஜி என் செட்டி சாலையில் நின்றிருந்த 25 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் உடைத்து ரகளை ஈடுபட்ட போதை ஆசாமிகளை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ட்ராவல்ஸ் கார் ஓட்டுனர்கள். தற்போது பாண்டி பஜார் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
எது எப்படியோ காவல் நிலையம் எதிரில் நின்றிருந்த கார் கண்ணாடிகளை போதையா சாமிகள் உடைத்து விட்டு வாகன ஓட்டுனர்களைபார்த்து எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என்று கொலை மிரட்டல் விட்டு சென்றதாகவும் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டுநர்கள் உடனே கண்ட்ரோல் ரூம் 100 க்கு போன் செய்து தகவலை அதன் பின்னர் கார் கண்ணாடிகளை உடைத்த போதை ஆசாமிகள் பணங்கள் பார்க் பாண்டி பஜார் காவல் நிலையம் அருகே நின்றிருந்தவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு இதுவரை காவல் நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று வாடகை கார் ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். 25க்கும் மேற்பட்ட கார் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வருகின்றனர். கார் கண்ணாடிகளை உடைத்த இரண்டு நபர்களில் ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பரமக்குறிச்சி முந்திரி தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராகுல் வளவன் 22 மற்றொருவர் சென்னை டி நகர் உஸ்மான் சாலையை சேர்ந்த தர்மின் ராஜ் வயது26 . தற்போது இவர்கள் இரண்டு பேரும் மீதும் பாண்டி பஜார் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்பு சிறையில் அடைத்துள்ளனர்.