காவல் செய்திகள்

10 லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்து  சென்ற கூலிப்படை கும்பலுக்கு உடந்தையாக செயல்படும் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை  அதிகாரிகள்! அதிர்ச்சி வீடியோ காட்சி !  ஐ ஜி மற்றும் டிஜிபி நடவடிக்கை எடுப்பார்களா!?

தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் துணையுடன் ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்துச்செல்லும் கூலிப்படை கும்பல் !

சென்னை தொழிலதிபரை கழுத்தில் கத்தியை வைத்து கண்ணைக் கட்டி காரில் கடத்திச் சென்று நகை பணம் காரை பறித்துச் சென்ற கூலிப் படை! 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு கைது செய்யாமல் துணை போகும் தேவகோட்டை காவல் உட்கோட்ட காவல்துறையினர் !?அதிர்ச்சி தகவல்!
நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐஜி!?


கடந்த ஆண்டு 2.1.2023 ஆம் தேதி சென்னை அயப்பாக்கம்  வசிப்பவர் அன்னராஜ் மகன் கார்த்திகேயன் வயது 41/23 என்பவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உட்கோட்டம் ஆறாவயல் காவல் நிலையத்தில்

புகார் ஒன்று கொடுத்துள்ளார் அதில் பெயர் தெரிந்த நான்கு பேர் பெயர் தெரியாத நான்கு பேர் கடத்திச் சென்று நகை பணம் மற்றும் காரை பறித்துச் சென்றதாக புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் மீது காவல் நிலையத்தில் மனு எண் முதல் தகவல் அறிக்கை மட்டும் CSR (2/2023) மட்டுமே பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில் ஹிஜ்வு அக்ரோ பிரைவேட் லிமிடெட் (HIJAU agro private limited) என்ற நிறுவனத்தில் 50 லட்சம் வரை முதலீடு செய்திருந்தோம் அந்த வகையில் என் மூலமாக அறிமுகமாகி தேவகோட்டை சேர்ந்த

கிருஷ்ணன் மகன் திருமுகம் வயது 46 ஆசை மணி மனைவி திலகவதி வயது 45 சத்தியமன் மகன் பாலமுருகன் வயது 40 பாலமுருகன் மனைவி அபிநய சுந்தரி வயது 31 ராஜேந்திரன் மகன் செல்வமணி வயது 31 மேற்படி நிறுவனத்தில் 33 லட்சம் முதலீடு செய்து  15 சதவீத வட்டி வீதம்  58 லட்சம் வரை பெற்றுள்ளதாக தெரிகிறது.
அந்த நிறுவனம்  முதலீடு செய்து பணத்தை ஏமாற்றி மோசடி செய்து அந்த நிறுவனத்தின் நிறுவனத் தலைமறைவாக இருப்பதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்துள்ளோம்
. அதன் பின்பு அந்த நிறுவனத்தின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்ததில் 5000 கோடி வரை மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் நிறுவனரை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 24 /12/ 2022 தஞ்சாவூரில் மனைவி குழந்தைகளுடன் இருந்தபோது அன்று மதியம் தேவகோட்டை சேர்ந்த பாலமுருகன் என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலீடு செய்த பணம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தேவகோட்டை முள்ளிக் குண்டு பைபாஸ் ரோடு அருகே வனிதா பேக்கரிக்கு அழைத்தார். அதை நம்பி T N.13 .P.3344 என்னுடைய ஸ்கோடா காரில்

அவர்கள் கூறிய தேவகோட்டை இடத்திற்கு சென்று மாலை 6 மணிக்கு வரை காத்திருந்தேன். ஆறு மணிக்கு மேல் செல்வமணி காரில் தன்.தன்.(TN 38.CC.2252 )மாருதி சுசிகி கார் .

செலவமணியுடன்  தெரிந்த நான்கு பேர் மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் வந்தனர்.அதில் ஒரு ரவுடி கூலிப்படை தலைவன் மற்றும் கூலிப்படை தலைவனின் கூட்டாளிகள் மூன்று பேர் வந்து இறங்கினர்.
அதன் பின்பு என்னுடைய ஸ்கோடா காரை செல்வமணி எடுத்துக்கொண்டு என்னை அடித்து துன்புறுத்தி அசிங்கமாக பேசி கழுத்தில் கத்தியை வைத்து அவர்கள் வந்த வாடகை காரில் ஏற்றி அமர வைத்து முகத்தில் ஸ்பிரே அடித்து கண்ணைக் கட்டி சென்றனர். அதன் பின்பு என்னுடைய கழுத்தில் இருந்த தங்கச் செயின் மற்றும் மோதிரம் நான் வைத்திருந்த பணம் அனைத்தையும் வாங்கிக் கொண்டு செல் போனையும் வாங்கிக் கொண்டு நள்ளிரவில் தஞ்சாவூர் அருகே ஒரு இடத்தில் அடைத்து வைத்து மறுநாள் காலையில் சென்னைக்கு என்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று என் வீட்டில் பீரோவில் இருந்த ஏழு பவுன் தங்க நகை மற்றும் 23,000 பணத்தை எடுத்துக்கொண்டு மற்றும் என்னுடைய எம் ஜி கார் TN.12 AR.3344 மற்றும் காரின் ஆவணங்கள் எடுத்துக்கொண்டு வேறு நபர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு மறுபடியும் என்னை கண்ணை கட்டி காரில் ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் அருகே அழைத்து வந்து இரண்டு நாட்கள் வைத்து ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து பெற்றுக் கொண்டு 29/ 12/ 22 ஆம் தேதி இரவு அடையாளம் தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் உன் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்று விட்டார்கள்.

என் தந்தையிடம் கூறாமல் என் நண்பர் கார்த்திகேயன் மற்றும் என் மனைவி மாமியாரிடம் கூறியதும் அவர்கள் உடனே என்னுடைய அப்பாவிற்கு தகவல் கொடுத்து தஞ்சாவூருக்கு வர வைத்தனர். தஞ்சாவூரில் இறக்கி விட்டதால் தஞ்சாவூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தோம். ஆனால் அவர் கடத்திச் சென்ற இடம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல் உட்கோட்டத்தில் இருப்பதால் அங்கு உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன் பின்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காவல் உட்கோட்ட ஆறாவயல் காவல் நிலையத்திற்கு வந்து

31/12/2024 அன்று காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி அவர்களிடம் நடந்த சம்பவத்தை புகாராக கொடுத்து அதனுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பீரோவில் இருந்த நகை பணம் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள்

மற்றும் எடுத்துச் சென்ற காரின் புகைப்படம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய காரின் புகைப்படம் மற்றும் 40 லட்சம் மதிப்புள்ள இரண்டு காரின் ஆர் சி புக் ஒரு கோடி மதிப்புள்ள இடத்தின் பத்திரம் மற்றும் சொத்து ஆவணங்கள் என அனைத்து நகல்கள் இணைத்து புகார் கொடுத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உடனே புகார் மனுவுக்கு வழக்கு பதிவு செய்ய வில்லை.அதன் பின்னர் மூன்று நாட்களாக புகார் தாரரை அலைக்கழித்து எஃப் ஐ ஆர் போடாமல் CSR( மனு எண் 2/01/2023)மட்டும் தலைமைக் காவலர் ரமேஷ் போட்டு கொடுத்துள்ளார். தொழிதிபரை கடத்திச் சென்று பணம் நகை காரை பறித்து சென்ற கூலிப்படை கும்பலுக்கு உடந்தையாக முன்னாள் தேவகோட்டை நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருந்த ஆத்மநாதன்

திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருக்கும் ஆத்ம நாதன்

அதன் பின்பு டி எஸ் பி பிரகாஷ் உடனே ஆறா வயல் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி அவர்களுக்கு தொடர்புகொண்டு காரில் கடத்திச் சென்ற குற்றவாளிகளின் மீது உடனே வழக்குப் பதிவு செய்ய கூறியுள்ளார்.அதன் பின்பு ஆறா வயல் காவல் நிலையத்தில் 07/02/2023 அன்று PS.CR.no.12/2023 (FIR 364 A./384/506/(2). மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து 09 ஆம் தேதி புகார்தார் இடம் வழங்கியுள்ளனர்.

தற்போது திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளராக இருக்கிறார்.இவருக்கும் கடத்திச் சென்றதாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள ,திருமுகம் திலகவதி தில்லை நாதன் ஆகியோருக்கும் நல்ல நட்பு இருப்பதாகவும் இதனால் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முன்னாள் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு பிரகாஷ் மற்றும் ஸ்டாலின் ஆறாவயல் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி காவல் உதவி ஆய்வாளர் மருது மைக்கேல் சூசை அவர்களை தொடர்பு கொண்டு குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாகவும் அதனால் தான் புகார்தாரருக்கு சிஎஸ்ஆர் மட்டும் போட்டுக் கொடுத்ததாகவும் சிவகங்கை மாவட்ட உளவு காவல்துறை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது என தகவல் தெரிவித்தனர்.ஆனால் கார்த்திகேயன் தன்னை கடத்தி சென்று நகை பணம் காரை பறித்துக் கொண்டதாக கொடுத்த புகார் மனுவின் மீது ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஆறா வயல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளை பிடித்து விசாரணை நடத்த எந்த ஒரு மேல் நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தேவகோட்டை நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கர் திரு முகம் செல்வமணி திலகவதி பாலமுருகன் மற்றும் கூலிப்படை தலைவன் இவர்கள் அனைவருக்கும் உடந்தையாக செயல்பட்டு வந்து கொண்டு இருப்பதாகவும் இதற்கு மூலகாரணமாக செயல்பட்டு வரும் திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆத்மநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 27/12/2023

உள்துறை செயாளருக்கு கோரிக்கை புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதை விட அதிர்ச்சி என்ன வென்றால் பல லட்சம் கையூட்டாக பெற்று கொண்ட தேவை கோட்டை காவல் உட் கோட்ட காவல்துறை அதிகாரிகள் ப 88 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒரு புகாரை புகார்தாரருக்கு எதிராக கொடுக்கும்படி குற்றவாளி திருமுகத்திடம் எழுதி வாங்கிச் கொண்டு

தேவகோட்டை காவல் நிலையத்தில் சம்மன் அனுப்பியது

புகார்தாரர்க்கு 27/01 /2023அன்று  சம்மன் அனுப்பி 04/02/2023 அன்று விசாரணக்குஆஜராக அனுப்பி விட்டுள்ளார்.அதன்படி 04/02/2023 ஆம் தேதி ஆஜராகி தகுந்த ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளார் . அதன் பின்பு புகார்தார் கார்த்திகேயனை அனுப்பி விட்டு உள்ளனர்.என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு 06/02/2023 அன்று நேரில் சென்ற கார்த்திகேயன் அவரது தந்தை அண்ணராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் இடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பின்பு 7/2/2023 அன்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டு அதன் பின்பு தேவகோட்டை நகர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் சங்கர் தேவகோட்டை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் அழகர் இவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் கொடுத்த கார்த்திகேயனிடம் மட்டுமே விசாரணை செய்து விட்டு குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் ஒரு மாதமாமாக புகார்தாரரை மட்டும் விசாரணை என்ற பெயரில் மிரட்டி வந்ததாக உங்கள் மீது புகார் கொடுத்துள்ளதால் துறை ரீதியான விசாரண நடத்த வேண்டியதிருக்கும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

தற்போது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஐபிஎஸ் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்
07/02/2023 வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இதற்கிடையில் வழக்குப் பதிவு செய்யாமல் விசாரணை நடந்த போது MG கார் எங்கு இருக்கிறது என்று GPRS மூலம் கண்டுபிக்க வேண்டி புகார் தாரார் கேட்டதற்கு அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் குற்றவாளி களுக்கு ஆதரவாக செயல்ப்பட்டு வந்துள்ளார். அதன் பின்பு கார் எங்கு இருக்கிறது என்று புகார் தாரார் தானாகவே முயற்சி எடுத்து கார் சென்னை போரூர் சுங்கச் சாவடி அருகே செல்வதாக தெரிய வந்ததும்

தொழிலதிபரிடம் பறித்திச் சென்ற விலை உயர்ந்த சொகுசு எம் ஜி கார் சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது

உடனே அந்த இடத்திற்கு இரண்டு காரில் சென்று அந்த காரின் முன்னால் ஒரு காரும் பின்னால் ஒரு காரும் தொடர்ந்து சென்று போரூர் சுங்கச் சாவடி தாண்டியவுடன் உடனே MG காரில் சென்ற இருவரும் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதன்பின்பு காரை எடுத்து வந்து விட்டனர்.ஆனால் தற்போது ஒரு வருடம் மேல் ஆகியும் இதுவரை வழக்குப்பதிவு செய்தவர்கள்
மீது எந்த ஒரு விசாரணையும் மேல் நடவடிக்கையும் கைது செய்யாமல் மற்றொரு ஸ்கோடா கார் நகை பல லட்சம் மதிப்புள்ள இடத்தின் பத்திரம் மற்றும் காரின் ஆர் சி புக் மற்றும் எழுதி வாங்கிய ஆவணங்கள் நகைகள் எதையுமே பறிமுதல் செய்யாமல் இதற்கு முன்பு இருந்த டிஎஸ்பி பிரகாஷ் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி காவல் உதவி ஆய்வாளர் மருது மற்றும் மைக்கேல் சூசை தற்போது உள்ள சிவகங்கை மாவட்ட தேவகோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் ஆறா வயல் காவல் நிலைய (பொறுப்பு)காவல் ஆய்வாளர் சரவணன் காவல் உதவி ஆய்வாளர் பாண்டியன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மருது, மைக்கேல் சூசை, தலைமை காவலர் ரமேஷ் மற்றும் தேவகோட்டை காவல் ஆய்வாளர்கள் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவும் பெறப்பட்டுள்ளார்.ஆனால் நீதி மன்றம் உத்தரவையும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்க வில்லை என 22/11/2023 அன்று தற்போது உள்ள சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் அவர்களிடம் பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் அன்று புகார் கொடுத்துள்ளனர்.புகாரை பெற்றுக் கொண்டு டிஎஸ்பி பார்த்திபனக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்க எடுக்க கூறிவிட்டு புகார்தாரரை தேவகோட்டை டிஎஸ்பி யிடம் செல்லும் படி கூறுகிறார்.அதன்படி புகார்தாரர் கார்த்திகேயன் தந்தை அன்னராஜ் நேரில் சென்று டிஎஸ்பி யிடம் சென்று நடந்ததை விளக்கியுள்ளார்.அதன் பின்பு 30/11/2023 அன்று சரவணன் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாண்டியனை சந்திக்க கூறியுள்ளார்.உடனே 30/11/2023 அன்று நேரில் சந்தித்த அன்னராஜ் அவர்களிடம் உங்கள் மகனை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.அதன்படி 15/12/2023 அன்று ஆறா வயல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு கார்த்திகேயன் வந்துள்ளார்.அவரிடம் விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளர் சரவணனை பார்க்கும் படி கூறியுள்ளார். அதன் பின்பு தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.அங்கு ஆய்வாளர் வெளியில் இருப்பதாகவும் 17/12/2023 அன்று மாலை 6 மணிக்கு வரச்சொல்லி விசாரணை செய்துவிட்டு அனுப்பி விட்டுள்ளார்.

இந்த நிலையில் பாலமுருகன் மற்றும் செல்வமணி இரண்டு பேர் மட்டும் முன் ஜாமின் பெற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. மற்ற ஆறு பேர் மீது எந்தவித விசாரணையும் கைது நடவடிக்கையும் ஆறா வயல் காவல் நிலைய காவல் துறையினர் மற்றும் தேவகோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக காவல் கண்காணிப்பாளர் துணைக் காவல் கண்காணிப்பாளர். காவல் ஆய்வாளர் அவர்களுக்கு

புகார் கொடுத்தவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எது எப்படியோ ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கூலிப்படை ரவுடி களுக்கு ஆதரவாகவும் அவர்கள் செய்யும் சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக சிவகங்கை மாவட்ட காவல் நிலையங்களில் உள்ள காவல் ஆய்வாளர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் உதவி காவல் ஆய்வாளர்கள் செயல்பட்டு வருவதாக பல குற்றச்சாட்டுகள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த புகார் சம்பந்தமாக 10 லட்ச ரூபாய்க்கு மேல் கை யூட்டுப் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
எது எப்படியோ தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் கொலை கொள்ளை போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுப்பதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடித்து குற்றங்களை குறைக்க பல யுக்திகளை கடைப்பிடித்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணி செய்யும் ஒரு சில காவல் அதிகாரிகள் (கருப்பு ஆடுகள்) எந்த சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல் தங்களது சுயலாபத்திற்காக லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக செயல்படும் கூலிப்படை ரவுடிகளுக்கு துணை போவதால் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையில் செயல்படும் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை களைய நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என பெயர் பெற்ற

டிஜிபி ,தென்மண்டல ஐஜி ,சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் தென்மண்டல ஐஜி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம் புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ள நேர்மையான தென்மண்டல ஐஜியின் நடவடிக்கையை!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button