காவல் செய்திகள்

சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர் அதிரடி உத்தரவு!No entry யில் செல்லும் வாகனங்களுக்கு 1200 ரூபாய் அபதாரம் ! (special drives for this week)
வாரத்தில் ஆறு நாட்கள் இரவு நேரங்களில் சிறப்பு வசூல் !
போக்குவரத்து காவல்துறையினருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மோதல் போக்கு உருவாகும் ஆபத்து!?
மன அழுத்தத்தில் போக்குவரத்து காவல்துறையினர்!!நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

No entry யில் செல்லும் வாகனங்களுக்கு 1200 ரூபாய் அபதாரம் !
special drives for this week
வாகன ஓட்டிகளிடம் 5/09/2022 சென்னை போக்குவரத்து காவல்துறையினர்
வாரத்தில் ஆறு நாட்கள் இரவு நேரங்களில் சிறப்பு வசூல் செய்ய வேண்டிய குறிப்பாணையை அனுப்பியுள்ள சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்.

காவல் கூடுதல் ஆணையர் குறிப்பாணை!

1. திங்கட்கிழமை 5/09/2022
Wrong side drive
(தவறான பாதையில் வாகனம் ஓட்டிச் செல்வது)

2. செவ்வாய்க்கிழமை
. Special checkpoint & no number plate 6/09/2022
(சிறப்பு சோதனைச் சாவடி. நம்பர் பிளேட் இல்லாத வாகனம்)

3 புதன்கிழமை
.special zonne 7/09/2022
(சிறப்பு மண்டலம் பகுதி)

4. வியாழக்கிழமை
special checkpoint & drinking drive (DD)
சிறப்பு சோதனைச் சாவடி இரவு (8 மணி முதல் 12மணி வரை)
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்

5. வெள்ளிக்கிழமை
Wrong side drive
(தவறான பாதையில் வாகனம் ஓட்டிச் செல்வது)

6. சனிக்கிழமை
/09/2022
Special checkpoint & drinking drive (DD)
(சிறப்பு சோதனைச் சாவடி இரவு (8 மணி முதல் 12மணி வரை)
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்)
இப்படி ஆறு நாட்களும் ஆறு விதமாக வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்ய குறிப்பானை அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறையினர்

604 வழக்குகளை முடிக்காத போக்குவரத்து காவல்துறையினர் மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும். சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர்.

no entry) ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்களுக்கு 1200 ரூபாய் அபராதம்!

இதைவிட மற்றொரு குறிப்பாணை 6/09/22 அன்று காவல்துறை ஆணையாளர் தெற்கு மாவட்டம் அலுவலகத்திலிருந்து அனுப்பி உள்ளது தான் அதிர்ச்சி தக்கதாக இருந்தது..
அது என்ன வென்றால் கடந்த 2021 /2022 ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து தெற்கு மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் அல்லாமல் மற்ற வாகனங்களில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய 604 வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் அந்த வழக்குகளை விரைவாக முடிக்க 25/0622 அன்று குறிப்பாக அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் குறிபானை அனுப்பப்பட்டு 60 நாட்கள் ஆகியும் தற்போது வரை drinking drive ( DD) வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாலும் அது சம்பந்தமாக பலமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாகவும் மட்டுமில்லாமல் வாக்கி டாக்கி (வான் தந்தி )மூலம் தெரிவித்தும் உயர் அதிகாரிகளின் உத்தரவை உதாசீனப்படுத்துதல் மட்டும் இல்லாமல் அஜாக்கிரதையாக இருப்பதாகவும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் இந்த குறிப்பை வந்த மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உதவி ஆணையாளர்கள் இதனை உறுதி செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் இந்த குறிப்பாணையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குறிப்பானை பெறுபவர்கள் குறிப்பாக காவல் உதவி ஆணையாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மற்றும் அமலாக்கப் பிரிவு போக்குவரத்து சென்னை தெற்கு மாவட்டம்.
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நல்லறவு என்பதே இல்லைஎன்று இருந்து வந்த நிலையில்
2021 மே மாதம் முதல் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட நாளிலிருந்து திமுக ஆட்சியில் பொதுமக்களிடம் காவலர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காவல் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் தெரிவித்து வரும் நேரத்தில் தற்போது உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு வார விடுமுறை ஒரு நாள் எடுத்துக் கொள்வதற்கு ஆணை வெளியிட்ட நிலையில் மற்ற ஆறு நாட்களுக்கு போக்குவரத்து காவல்துறையினருக்கு நெருக்கடி என்று சொல்வதை விட மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்படும் அளவிற்கு சென்னை கூடுதல் காவல் ஆணையர் பொதுமக்களிடம் சிறப்பு கட்டாய வசூல் செய்ய( no entry) ஒரு வழிப்பாதையில் செல்லும் வாகனங்கள் மீது 1200 ரூபாய் அபதாரம் விதிக்க ஆணை பிறப்பித்துள்ள நிலையில் ஒரு சில வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் ஒரு வழிப்பாதையில் வரும்பொழுது போக்குவரத்து காவல்துறையினருக்கு பயந்து வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் செல்வதால் விபத்துக்கள் நடக்கும் அபாயமும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் பொது மக்களுக்கும் காவல்துறையினர் இருக்கும் நல்லுறவு இந்த அதிரடி உத்தரவால் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பல போக்குவரத்து காவல்துறையினருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல்
சாதாரணமாக நாள் ஒன்றுக்கு ஒரு காவல் நிலையத்தில் காலையிலிருந்து இரவு வரை குறைந்தது 100 வழக்குகள் போக்குவரத்து காவல்துறையினர் பதிவு செய்ய வேண்டும் அந்த வழக்குகளில் எந்த ஒரு வாகன ஓட்டுனர்களிடமிருந்தும் பாக்கி இல்லாமல் உடனே பணம் வசூல் செய்து விட வேண்டும் என்றும் நிபந்தனை இருக்கும் நிலையில் தற்போது புதிதாக
வாரத்தில் ஆறு நாட்கள் இரவு நேரங்களில் ஆறு விதமான சிறப்பு கட்டாய வசூல் ஒரு காவல் நிலையத்தில் சுமார் 100 to 150 வழக்குகள் ஒரு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் 50 வழக்குகள் கட்டாயம் போடவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது இந்த ஆட்சியின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் நிலை உருவாகும்! அதுமட்டுமில்லாமல்
தற்போது உள்ள திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயர் பொது மக்களிடம் குறைந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது.
ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித ஒரு மோதல் போக்கு உண்டாகாத வகையில் காவல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button