சென்னை மாநகராட்சி தேர்தல் அம்பத்தூர் 89வது வார்டில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு 5000 முதல் 10000 வரை பணம் பட்டுவாடா படு ஜோராக நடப்பதாக அதிர்ச்சித் தகவல்!?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் தற்போது அதிமுக &திமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் பல இடங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதற்கு அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அதிமுக கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முக்கியமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் 79 இல் இருந்து 92 வரை 13-வார்டு களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் வேட்பாளர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டது அம்பத்தூர் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது .

முன்னாள் எம்எல்ஏ அதிமுகவின் மாவட்டச் செயலாளரான அலெக்சாண்டர் தற்போது அம்பத்தூர் 89வது வார்டில் வேட்பாளராக களமிறங்குகிறார். இவரை எதிர்த்து அம்பத்தூர் தெற்குப் பகுதி செயலாளர் எம் இ சேகர் வேட்பாளராக களத்தில் உள்ளார். ஆனால் அதிமுக அம்பத்தூர் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் தற்போது ஒரு வார்டு கவுன்சிலராக வெற்றி பெற வேண்டும் என்று அதற்காக பல கோடிகளை செலவு செய்து வருவதாக தகவல் வருகிறது. ஒரு வாக்காளருக்கு குறைந்தது ஐந்தாயிரம் ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் மகளிர்களுக்கு சேலை ஆண்களுக்கு வேஷ்டி வழங்கி உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு நடந்த சட்டமன்ற தேர்தலில் அலெக்சாண்டர் தோல்வியடைந்ததால் தற்போது மாவட்ட கவுன்சிலர் ஆக நின்று வெற்றி பெற்று கட்சியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாநகராட்சித் தேர்தலில் தற்போது தீவிர பிரச்சாரம் மற்றும் பண பலத்துடன் களம் இறங்கியுள்ளதாக தகவல் இவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் M E.சேகர் அவர்கள் தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போவது இல்லை என்றும் அவர் மக்களை நம்பியே களமிறங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. எது எப்படியோ மாநகராட்சித் தேர்தல் நேர்மையான முறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதை காவல்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
