சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால்
சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?

சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு யார் காரணம்!? அதன் பின்னணி என்ன!?

மே 25 ஆம் தேதி திடீரென்று சென்னை மாவட்ட ஆட்சியராக உள்ள விஜயாராணி IAS பதிலாக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இணை செயலாளராக இருக்கும் அமிர்த ஜோதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மத்தியில் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணியிடம் மாற்றம் பற்றி பல ஊடகங்கள் பல விதமான கருத்துக்கள் பகிர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் திடுக்கிடும் தகவல் தற்போது வந்துள்ளது.
மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
மே, 25ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மற்றும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் சுமார் அரை மணி நேரம் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோப்புகளை சரிசெய்து அதனுடைய விளக்கத்தை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் செல்ல காரணம் என்ன என்பது இதுவரை சொல்லப் படவில்லை.
அப்படி முதல்வர் செல்வதற்கு முன்பு வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு கண்டிப்பாக தகவல் கொடுக்கப் பட்டிருக்கும்.
அப்படி தகவல் வந்தவுடன் சென்னை மாவட்ட ஆட்சியர்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஆனால் சென்னை மாவட்ட ஆட்சியர்க்கு உட்பட்ட கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முதல்வர் ஆய்வு மேற்கொள்ள வருவதை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்காமல் இருந்ததற்கு சென்னை மாவட்ட ஆட்சியரை பழிவாங்கும் நோக்கத்தில் நடந்தது என்றும் தகவல் வந்துள்ளது.
பல வருடங்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சென்னையில் உள்ள சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க முன்னணி தனியார் நிறுவனங்கள் திமுக ஆட்சி வந்த உடன் போட்டி போட்டு தற்போது எழிலகத்தில் உள்ள வருவாய் துறை நிர்வாகத்திடம் அனுகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

(1) அதில் முக்கியமான ஒரு இடம் சென்னை அடையார் பகுதியில் 13ஏக்கர் நிலம் தான் . அந்த இடம் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று தகவல் வந்துள்ளது. அந்த இடத்தில் HCL சிவ நாடார் நிறுவனம் உயர்தர இண்டர் நேசனல் பள்ளி கட்டுவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அந்த இடம் பல வருடங்களாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தெரிகிறது. அந்த இடத்திற்கு பட்டா வழங்க எழிலகத்தில் உள்ள வருவாய் துறை ஆணையர் இடம் அணுகியுள்ளனர் .சில மாதங்களுக்கு முன்பு கிண்டி வருவாய் துறை கோட்டாச்சியர் மற்றும் வட்ட்ச்சியர் அந்த இடத்தை இடத்தை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அந்த 13 ஏக்கர் நிலம் சென்னை வரைபடத்தில் இல்லை என்றும் அந்த இடத்திறகு HCL நிறுவனம் பத்திர பதிவு மட்டுமே செய்து வைத்துள்ளனர் என்றும் அந்த இடத்திற்கு எப்படி பட்டா வழங்க முடியும் என்று கிண்டி வருவாய் துறை கோட்டாட்சியர் மறுத்ததால் சில மாதங்களுக்கு முன்பு அவர் அதிரடி பணியிட மாற்றம் செய்யப் பட்டதாக தகவல் வந்துள்ளது.
அதன் பின்பு சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி அவர்களிடம் பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில் பட்டா வழங்க மறுத்து விட்டார் என்றும் தகவல் வந்துள்ளது.
(2) இது மட்டுமில்லாமல் அதே அடையார் பகுதியில் உள்ள 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆறு ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கக் கேட்டு நாகபட்டினம் மாவட்ட பிஜேபி கட்சியின் மூத்த நிர்வாகி வாணிஶ்ரீ என்பவர் வருவாய் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துளளார். அந்த இடமும் பல வருடங்களாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த இடத்திற்கும் பட்டா வழங்க கிண்டி வருவாய்க் கோட்டாட்சியர் மருத்துள்ளதாகவும் அதன் பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயராணி அவர்களிடம் பட்டா வழங்க பரிந்துரைக்க பட்டதாகவும் அந்த இடத்திற்கும் பட்டா வழங்க மறுத்து விட்டார் என்றும் தகவல் வந்துள்ளது.

(3) மாதாவரத்திற்கும் மணலிக்கும் இடையே உள்ள
பிஎஸ்என்எல்( BSNL) க்கு சொந்தமான 40ஏக்கர் இடத்தை டாடா தனியார் நிறுவனத்திற்கு நில மாற்றம் செய்ய சில வருடங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்க பட்டததாகவும் அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு நில மாற்றம் செய்ய முடியாது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்பு அந்த இடத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட்டு கொண்டுவந்து தனியார் நிறுவனத்திற்கு நில மாற்றம் செய்ய எழிலகத்தில் உள்ள வருவாய் துறை நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கும் சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த விஜயராணி பட்டா வழங்க மறுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இது போன்று சோழிங்கநல்லூரில் வட்டாட்சியர் உட்பட்டா ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் நீர்நிலை ஆக்கிரமித்து 5000 குடும்பங்கள் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த பொது நல வழக்கு கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர்க்கு நீதி மன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்றும் அதில்
அங்கு கூடியிருந்த குடியிருப்புகளை உடனே அப்புறப்படுத்தி மாற்று இடம் உடனே வழங்க சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை கோட்டாட்சியர் ,வட்டாட்சியர் அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில் தமிழக அரசையும் நீதிமன்றம் எச்சரித்ததாக தகவல் வந்துள்ளது.!
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாத இடங்களுக்கு பட்டா வழங்க மறுத்த நேர்மையான சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி அவர்களை
எழிலகத்தில் உள்ள வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மற்றும் முதல்வர் தனிச் செயலாளர்களாக இருப்பவர்களில் உதயமான ஒருவர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியரை பழி வாங்கும் நோக்கத்தில் முதல்வர் ஆய்வு செய்த இடத்தில் ஆட்சியர் இல்லை என்ற ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி பணியிட மாற்றம் என்ற ஒரு நாடகத்தை நடத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த துறையில் நடக்கும் ஊழல் மற்றும் முறைகேடுகளை மறைப்பதற்காகவே வேறு அதிகாரிகள் மீது பழி போட்டு திசை திருப்பி விடுவதை வழக்கமாக வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தற்போது சென்னை மாவட்ட ஆட்சியாளர் மாற்றத்திற்கும் காரணம் வருவாய் துறை நிர்வாக ஆணையர் தான் என்கிறார்கள் எழிழகத்தில் இருக்கும் வருவாய்த் துறை அலுவலகத்தில் பணி செய்யும் சில நேர்மையான அதிகாரிகள்!
எது எப்படியோ தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆன நிலையில் ஊழல் முறைகேடு செய்து வந்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நேர்மையான அதிகாரியாக ஒரு வருடமாக பணி செய்து வந்த சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி IAS அவர்களை மாற்றியது ஊழல் முறைகேடு செய்யும் சில அதிகாரிகளுக்கு தற்காலிக சந்தோசத்தை ஏற்படுத்துமே தவிர நிரந்தரமாக இருக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது சம்பந்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட விஜயராணி ஐஏஎஸ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பணியிட மாற்றத்துக்கு அரசியல்வாதிகள் தலையீடு இருக்கிறதா என்று கேட்டதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றும்
நான் பணியில் சேர்ந்த போது சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நிலுவையில் இருந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் மனுக்கள் இருந்ததாகவும் அதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுதாரர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்த்து வைத்துள் ளதாகவும் இன்னும் 7000 மனுக்கள் மட்டுமே பாக்கி உள்ளதாகவும் இன்னும் ஒரு மூன்று மாதம் பணியில் இருந்தால் அந்த 7 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்த்து வைப்பேன் என்றும் நான் பணியில் இருந்த வரை நேர்மையாக இருந்தேன் என்றும் பணியிடமாற்றம் செய்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று விஜயராணி IAS அவர்கள் தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் உள்ள வருவாய் துறை நிர்வாக அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி விரைவில் தமிழக முதல்வருக்கு தெரியவரும் என்றும் அரசன் அன்று கொள்வான் …
தெய்வம் நின்று கொள்ளும்..
தற்போது தெய்வமாக இருக்கும் தமிழக முதல்வர் நடந்த உண்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பார் என்று எழிலகத்தில் உள்ள நேர்மையான அதிகாரிகளின் ஆதங்கமாகும்.