மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி

செயலற்று கோமாவில் இருக்கும்  சேலம் ஆவின் மேலாளர் அலுவலகம்! மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை கிடப்பில் போட்டு கருணையில்லாத  சேலம் ஆவின் பொது மேலாளர் மீது நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

கருணை இல்லாமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து கொச்சைப்படுத்தும்  சேலம் ஆவின் பொது மேலாளர் கலைவாணி!?

மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக மானிய உதவியுடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் .மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25 ஆயிரம், ஆவின் பொருள்கள் கொள்முதல் செய்ய மானியமாக ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும்

சேலம் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அதன் விவரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்
விருப்பமுள்ளோர் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மாற்றுத் திறனாளிகள்  (மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சேலம் )என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்
தனியார் தொழில் வளாகங்கள்,  மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் இடவசதி அளித்து அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய உதவலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒருவருடம்( 12 மாதம்) நிறைவடைய இருக்கும் நிலையில் மக்களுக்கான பல திட்டங்களை  முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றிய வந்து கொண்டுள்ள நிலையில்

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் கூறியதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் பேசியபோது பொது மக்கள் நம் அனைவரையும் நம்பி இந்த ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.ஆகையால் அவர்களுடைய நம்பிக்கையை சிதைக்கும் விதத்தில் யாரும் செயல்படக் கூடாது என்றும் மாறாக செயல்பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு மாறாக  ஆட்சிக்கும் கட்சிக்கும் இருக்கும் நற்பெயரைக் களங்கப் படுத்தும் நோக்கில் சேலம் ஆவின் மேலாளர் அலுவலகம் செயலற்று இருப்பதாக  பல குற்றச்சாட்டுகள் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

தற்போது சேலம் ஆவின் மேலாளராக பணியில் இருக்கும் கலைவாணி அவர்கள் கடந்த வருடம் (02/ 07/2021 )பொறுப்பேற்றுக் கொண்டார்.


இதற்கு முன், தமிழ்நாடு மூலிகைப்பண்ணை, மூலிகை மருத்துவ கழக பொது மேலாளராக சென்னையில் கலைவாணி பணிபுரிந்தார். அங்கிருந்து இடமாற்றப்பட்டு, சேலத்தில் பொறுப்பேற்றார்.
ஆனால்  பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகியும் இவருடைய செயல்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

எது எப்படியோ மாவட்ட ஆட்சியாளர் கூறியதை நம்பி ஆவின் பூத் வைப்பதற்கு தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து உள்ள நிலையில் சேலம் ஆவின் பொது மேலாளர் கலைவாணி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை பல மாதங்களாக கிடப்பில் போட்டு மாநகராட்சியில் தடையில்லா சான்றிதழ் வாங்கி வந்தால்தான் நாங்கள் அனுமதி கொடுப்போம் என்று கூறி வருகிறார். ஆனால் மாநகராட்சி ஆவினில் அனுமதி பெற்று வாருங்கள் நாங்கள் தடையில்லா சான்றிதழ் கொடுக்கிறோம் என்று அவர்கள் இப்படி மாறி மாறி மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பு செய்வதோடு மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் செயல்படுவதாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக சேலம் ஆவின் பொதுமேலாளர் கலைவாணி அவர்களிடம் விளக்கம் கேட்க தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்ட போதும் ஒருமுறைகூட  எடுத்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் தொலைபேசியில் ஆவின் பொதுமேலாளர் கலைவாணிக்கு தொடர்பு கொண்டாலும் அவர் எடுத்து பேசாமல் கல்நெஞ்சம் படைத்த அவர் போல் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தற்போது பல அரசு துறைகளில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கேட்டு விண்ணப்பித்தால் அதிகாரிகள் பொதுமக்களை பலநாட்கள் இழுத்தடித்து காலம் தாமதித்து லஞ்சம் கொடுத்தால்தான் முடித்து தருவதாகவும் அரசு அலுவலகங்களில்  லஞ்ச முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் பல அரசு அலுவலங்களில் உள்ள அதிகாரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்கவோ முடியாது மறக்கவும் முடியாது.

தற்போது சேலம் ஆவின் மேலாளர்  அலுவலகத்தில் லஞ்சம் ஊழல் முறைகேடு நடைபெறுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. ஆகவே தயவு செய்து ஆவின் பொதுமேலாளர் கலைவாணி அவர்கள் இந்த சந்தேகத்தை எல்லாம் தீர்க்கும் வகையில்  பல மாதங்களாக தங்கள் மேஜையில் காத்திருக்கும்  மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தை பரிசீலித்து உடனே அவர்களுக்கு ஆவின் பூத் வைப்பதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் .என்பதுதான் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்கள் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆகும்.
சேலம் ஆவின் மேலாளர் அலுவலகம் செயல்பாடுகள் பற்றி தமிழக முதல்வர் மற்றும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதனுடைய தொடர்ச்சி இந்த மாத ரிப்போர்ட்டர் விஷன் இதில் வெளிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button