சோழவந்தான் பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 04/0323 அன்று நடைபெற்றது.
பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து
பன்னி முட்டி முனியாண்டி கோவில் மண்டலஅபிஷேகம் இன்று 20/04/23 நடைபெற்றது.
இக்கோவிலில் மகா இதையொட்டி மண்டலபூஜை தினசரி நடைபெற்று வந்தது.சிறப்பு மண்டல அபிஷேகம் ஆனந்த் என்ற கற்பூர பட்டர் தலைமையில் யாக பூஜை இன்று காலை நடந்தது இதைத் தொடர்ந்து பன்னி முட்டி முனியாண்டி சுவாமி மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மண்டல அபிஷேகம் நடைபெற்றது. சண்முகபூசாரி பூஜை செய்து பிரசாதம் வழங்கினார் இவ்விழாவை முன்னிட்டு அன்னதானம்வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னாள் சேர்மன் எம் கே முருகேசன் காடுபட்டி திரௌபதி அம்மன் கோவில் பூசாரி பாலு முதலியார் முதலியார் கோட்டை கிராம தலைவர் ஜெயக்கொடி உள்பட பக்தர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.