டாஸ்மாக் பார் நடத்த ஒன்றைக் கோடி வரை கேட்கும் திமுக மாவட்ட செயலாளர்கள்!??
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்கள் வரும் அக்டோபர் நவம்பர் மாதம் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிதாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்கள் ஒப்பந்தம் விட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் பார்களை ஆளும் அதிமுக கட்சியினர் எடுத்து நடத்தி வந்துள்ள நிலையில் தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மார்க் பார் ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் மீண்டும் டாஸ்மாக் பார்களை ஒப்பந்த அடிப்படையில் விடும் ஏற்பாடுகள் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டாஸ்மாக் பார்களை எடுக்க அதிமுக நிர்வாகிகளும் திமுக நிர்வாகிகளும் போட்டி போட்டுக் கொண்டு தற்போதே குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாக தகவல். இந்த நிலையில்தான் திருப்பூர் மாவட்டத்தில் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுபான கூடங்களுக்கு (டாஸ்மாக் பார்) டென்டர் விடாமல் எடுத்துக்கொள்ள ஒரு கோடியே ஐம்பது லட்சம் வரை நிர்ணயம் செய்து (மாவட்டச் செயலாளரும் மாணவரணி செயலாளரும்) வசூல் வேட்டையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக சவுந்தரபாண்டியன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியாற்றி வந்தார் . இந்த நிலையில் அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக இருந்த தாஜூதீன் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த சூழலில் அமைச்சர் பெயரைச் சொல்லி பார் உரிமையாளர்களிடம் திமுக மாவட்ட செயலாளர் பத்மநாதன் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவரும் பார் உரிமையாளர்களிடம் பினாமியாக ஆட்களை வைத்து பேரம் பேசி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் உள்ளது இதில் பார் நடத்தும் உரிமையாளர்களிடம் தினமும் 20 ,30 ஆயிரம் என சொல்லி முதல் தவணையாக 1 லட்சத்து 75 ஆயிரம் தர வேண்டும் எனவும்
அமைச்சர் செந்தில் பாலாஜி பெயரைச்சொல்லி வசூல் செய்து வருகின்றனர் என பார் உரிமையாளர்கள் புழம்பி வருவதாக தகவல் வந்துள்ளது.
திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காங்கயம் அவிநாசி ஊத்துக்குளி பல்லடம் உடுமலை பேட்டை போன்ற புறநகர் பகுதியில் செயல்படும் மதுபான கூடங்களுக்கு மொத்தமாக திமுக வடக்கு மாவட்ட செயலாளலர் பத்மநாதனிடம் 1.5 கோடி கொடுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவர் ஏலம் எடுத்து ஆனந்தன் என்பவருக்கு சாதகமாக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ஆட்களை நியமித்து அந்தந்த பகுதிகளில் செயல்படும் மதுபானம் கூடங்களில் வசூல் செய்து வருகின்றனர் என்றும் இதில் ஒரு பகுதியாக ஊத்துக்குளி பகுதியில் சுமார் 13 மதுபானக் கூடங்கள் உள்ளது இதற்கு மொத்தமாக 12 லட்சம் தொகையை 1991 மதுபான கூடம் நடத்தும் சோமசுந்தரம் என்பவர் ஆனந்தன் என்பவரிடம் இந்த தொகையை கொடுத்து மொத்தமாக ஏலம் எடுத்துள்ளார் என்றும் அதேபோன்று அவிநாசி பகுதியில் சுமார் 22 மதுபானக் கூடங்கள் உள்ளது அதற்கும் தங்கராஜ் என்பவர் ஆனந்தனிடம் 40 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் என்றும் தற்போது மதுபான கூட்டம் நடத்தும் உரிமையாளர்களிடம் முதல் தவணையாக ஒரு லட்சத்து 75 ஆயிரம் தினமும் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென ஊத்துக்குளி பகுதி சோமசுந்தரம் அவிநாசி பகுதி நாகராஜ் என்பவர்கள் பார் உரிமையாளர்
களிடம் மிரட்டி பேரம் பேசி வருகிறார்கள் என்றும் ஊத்துக்குளி பகுதி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று காங்கேயம் தாராபுரம் பல்லடம் போன்ற பகுதிகளில் இதுபோன்று ஒவ்வொரு பகுதிக்கும் ரவுடி ஆட்களை நியமித்து பத்மநாதன் மற்றும் ஆனந்தன் இருவரும் சேர்ந்து அமைச்சருக்கு பணத்தை நாங்கள் கொடுத்தால் டெண்டர் எதுவும் இல்லாமேயே பார் எடுத்து தரும் வரை நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் பகிரங்கமாக மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் பத்மநாதன் மற்றும் ஆனந்தன் இருவரும் சேர்ந்து வசூல் செய்து வருகின்றனர் என்ற தகவல்கள் வந்துள்ளது.
ஒப்பந்தம்முறை இல்லாமல் இப்படி முறைகேடாக பார்களை ஒதுக்கினால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் இதை கருத்தில் கொண்டு அந்த துறை சார்ந்த அமைச்சரும் தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் விரிவான செய்தி விரைவில் ?