டாஸ்மார்க் கடை திறந்திருக்கிறது என்பதற்காக அதிக அளவில் மது வாங்கி குடிக்க வேண்டாம். மது பிரியர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சு.அன்பான எச்சரிக்கை!

இன்று முதல் அக்கினி ( பகவான்)வெயில் ஆரம்பித்துள்ளது.
கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்கியது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் அபாயம் உள்ளது. ‘காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆகையால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .ஆகையால் மது அருந்துபவர்கள் மது அருந்துவதை குறைத்துக் கொள்ளவும். டாஸ்மார்க் கடை திறந்திருக்கு என்பதற்காக போய் வாங்கி குடிக்க வேண்டாம். இதனால் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை உங்கள் உயிர் தான் முக்கியம்.உங்கள் உயிரை பாதுகாக்க இந்த அரசுக்கு முதல்வருக்கும் எப்போதுமே அக்கறை உள்ளது என்பதால் இந்த அறிவுரை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.