மாவட்டச் செய்திகள்

தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை ஒழிப்பு உறுதி மொழி!


விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மூலம் புகையிலை, பான் மசாலா, குட்கா ஒழிப்பு – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.


உணவு வணிகராகிய நான், தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருளாக கொண்ட குட்கா, பான் மசாலா, மற்றும் மெல்லும் புகையிலை பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது வாய்புண், குடல்புண் மற்றும் புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும் எனவும் இறுதியாக உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டேன்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருட்களாக கொண்ட குட்கா, பான் மசாலா மற்றும் வேறு எந்த சுவைக்கும் பொருட்களை தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்து செல்லவோ, விநியோகிக்கவோ, சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்டேன் எனவும் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் நலன் காத்திட நானும் எனது நிறுவனத்தை சார்ந்த பணியாளர்களும் ஒத்துழைத்து உணவு வணிகம் புரிவோம் என உளமார உறுதி கூறுகிறேன் என்ற உறுதிமொழியினை வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தலைமையில் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் த.இரா.மங்களராமசுப்ரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்விராஜ்.,இ.ஆ.ப., மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button