தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை விற்க தடை ! அதிரடி உத்தரவு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில் தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை தயாரிக்க தற்காலிகமாக தடை ! அதிரடி உத்தரவு மாவட்ட ஆட்சியர்!
சவர்மா சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு 14 வயது பள்ளி மாணவி சாவுக்கு காரணமாக இருந்த நாமக்கல் ஐவிண்ஸ் ஹோட்டல் உரிமையாளர் நவீன் குமார் சமையலாளர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர்கள் கைது நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ச. உமா உதரவு*
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்ட பின் அந்த உணவில் ஃபுட் பாய்சன் இருந்ததாக வாந்தி பேதி ஏற்பட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்
தனியாக அதே ஹோட்டலில் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 14 வயது பள்ளி மாணவி இன்று இறந்து விட்டதால் இது சம்பந்தமாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா இன்று உயிரிழந்த 14 வயது மாணவியின் இறப்புக்கு பின் குறிப்பிட்ட அந்த ஹோட்டலில் பணியாற்றிய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் , தவார் குமார் மற்றும் அந்த ஹோட்டலின் உரிமையாளர் நவீன் குமார் ஆகிய 3 போர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச.உமா உத்தரவிட்டார்
மேலும்
நாமக்கல் மாவட்டத்தில் கோழி கறி மூலமாக தயாரிக்கும் உணவு வகையிலான தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை தயாரிக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளார் இது சம்பந்தமாக இன்று நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்பு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்
உடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள் மொழி உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ ராமலிங்கம் ஆகியோர் இருந்தார்