தந்தையை மகனே கூலிப்படை வைத்து கொலை செய்த பரபரப்பு சம்பவம்!
தலைமறைவாக இருந்த கூலிப்படை கும்பலை தட்டி தூக்கிய சங்ககிரி தனிப்படை காவல்துறையினர்!

சேலம் மாவட்டம்
சங்ககிரி நகர் திருச்செங்கோடு பிரதான சாலையில் ஸ்டேட் பேங்க் அருகே

நியூட்ரிஷன் உடல் குறைக்கும் பவுடர் விற்கும் வியாபாரம் செய்பவர் ராஜேந்திரன் . இவர் சுமார் 20 வருடங்களாக மனைவி மகன் மகளை பிரிந்து தனியாக வீடு எடுத்து நியூட்ரிஷன் உடல் குறைப்பு பவுடர் விற்பனை செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
மனைவி
ராணி மகன் அரவிந்த் மகள் கார்த்திகா ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எழுதி கொடுக்குமாறு ராஜேந்திரன் மனைவி மற்றும் மகன் மகள்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்கள்.
இந்த நிலையில் ராஜேந்திரனின் மகன் அரவிந்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது அம்மா பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது ராஜேந்திரன் பெண் வீட்டாரிடம் என் மகனுக்கு எந்த சொத்தும் இல்லை சொத்தில் பங்கும் கொடுக்க மாட்டேன் என கூறிவந்த நிலையில் பெண் வீட்டார்கள் ராஜேந்திரன் மகனுக்கு பெண் கொடுப்பதற்கு தயங்கி வந்த நிலையில் திருமணத்துக்கு தொடர்ந்து தடையாக ராஜேந்திரனை கொலை செய்ய முடிவு செய்த மகன் அரவிந்த் கூட்டுறவு வங்கியில் வாகன ஓட்டுனராக பணியில் இருக்கும் தன்னுடைய நண்பர் மனோஜிடம் தந்தையை கொலை செய்ய வேண்டும் என கூறியுள்ளார் அதற்கு மனோஜ் 4 லட்ச ரூபாய் கொடுத்தால் கூலிப்படையை வைத்து கொலை செய்யலாம் என கூறியுள்ளார் அதற்கு ஒத்துக்கொண்ட அரவிந்த் மனோஜ் மூலம் கூலிப்படைக்கு மூன்று லட்சம் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டதாகவும்

30/03/2025 இன்று இரவு அரவிந்தன் அப்பா ராஜேந்திரன் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த கூலிப்படையினர் ராஜேந்திரன் கை மற்றும் உடல் முழுவதும் அறிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.. காலையில் ராஜேந்திரன் வீட்டில் வேலை செய்யும் பழனியம்மாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அவரது மகனுக்கு சங்ககிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.உடனே சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி அந்த நிலையில் ராஜேந்திரனை கொலை செய்த கூலிப்படையினர் ஏழு பேர்
.விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் ஒரு விடுதியில் பதுங்கி இருப்பது சங்ககிரி தனிப்படை காவல்துறையினருக்குதெரியவந்தது. உடனே சங்ககிரி தனிப்படை காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் போலீசார் உதவியுடன் அந்த விடுதிக்கு சென்று,

அறையில் பதுங்கியிருந்த 7பேரை துப்பாக்கி முனையில் சங்ககிரி தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்து சங்ககிரிக்கு அழைத்து வந்து விசாரணை செய்தபோது ராஜேந்திரனை கொலை செய்த கூலிப்படை கொலையாளிகள் சேலம் சங்ககிரி கஸ்தூரிபட்டியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சசிகுமார் (21), தப்பக்குட்டை பாஸ்கர் மகன் கவுதமன் (21), பள்ளிப்பாளையம் அருந்ததியர் தெரு பழனிச்சாமி மகன் கவுதமன் (21), கஸ்தூரிபட்டி மணி மகன் கார்த்திகேயன் (23), தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளைவு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சதீஷ்குமார் (25), வரப்பளங்கரை மாரப்பன் மகன் பாரதி (18), காரிப்பட்டி மாரிமுத்து மகன் மணிகண்டன் (22), திருச்செங்கோடு கொல்லப்பாளையம் மாதேஸ்வரன் மகன் லோகபிரகாஷ் (21) என்பது தெரியவந்தது.
சொத்தை விரித்து கொடுக்காமல் இருந்த காரணத்தினால் ராஜேந்திரனை மகனும் மற்றும் மனைவி ஆகியோர் இரண்டு பேரும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்துள்ளதாகவும், கூலிப்படைகளை வைத்து கொலை செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனின் மனைவி மகன் இரண்டு பேரையும் சங்ககிரி தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகனே தந்தையே கூலிப்படையை வைத்து கொலை செய்த சம்பவம் சங்ககிரி பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




