தனியார் பேருந்து ஓட்டுனர்களின் அலட்சியப் போக்கால் தொடர் விபத்து உயிர் பலி! தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா!
பேருந்துகள் ஓட்டுனர்கள் அதிவேகமாக செல்வதால் கட்டுப்பாடை இழந்து தொடர் விபத்துக்களால் நடக்கும் உயிர் பலியை தடுக்க தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்குமா!
போடி – தேனி நெடுஞ்சாலையில், சாலைக்காளியம்மன் கோவில் அருகே,அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம் . விபத்தில் காயம் அடைந்த மற்றொருவரைமேல்சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.தனியார் பேருந்து மோதியதால் கல்லூரி மாணவர்கள் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
தேனியில்ருந்து போடிநாயக்கனூருக்கு செல்லும்போது, விபத்து ஏற்படுத்திவிட்டு, மீண்டும் பயணிகளுடன், போடிநாயக்கனூரிலிருந்து தேனிக்கு திரும்பச் சென்ற தனியார் பேருந்தை சம்பவ இடத்திலிருந்த போலீசாரால், போடிநாயக்கனூர் புறநகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை அரசு அலுவலகங்கள் தனியார் அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இந்த நேரங்களில் தனியார் பேருந்துகள் போட்டி போட்டு பயணிகளை ஏற்றி செல்ல முன்னாள் செல்லும் பேருந்துகளை முந்திக்கொண்டு அதி வேகமாக இயக்குவதால் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்படுகிறது இந்த விபத்தால் பல உயிர்கள் பலியாகி வருவது தொடர் அவல நிலையாக உள்ளது.
இப்படி தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதற்கு என்ன காரணம் என்று களத்தில் விசாரித்தால் அதிக வசூல் செய்யும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு 10% படி பணம் வழங்குவதால் ஓட்டுனர்களுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் வசூலை அதிகமாக கொண்டு வர வற்புறுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சாலைவிபத்துக்களை தவிர்த்திடவும், குறைத்திடவும், போதிய, முறையான, முழுமையான நடவடிக்கை எடுத்திட தேனி மாவட்ட போக்குவரத்து காவல்துறை முன்வர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையினை முன்வைக்கின்றனர். இனிமேலாவது உயிர்ப்பலி ஆகாமல் தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் சாலை தடுப்புகளை அமைத்து கட்டுப்பாடு இல்லாமல் அதி வேகமாக செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்