தப்பி சென்ற சிறுத்தை அதே இடத்தில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்ததாக சொல்வது தேனி வனச்சரக காவலர்கள் அரங்கேற்றிய நாடகம்!? தாக்கிய சிறுத்தையை வனச்சரக காவலர்கள் அடித்துக்கொன்று விட்டு மின் வேலியில் அதே இடத்தில் போட்டு விட்டதாக சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு!?நடந்தது என்ன!??
தேனியில் வனத்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி சென்ற சிறுத்தை அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!
நடந்தது என்ன!?
சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது வீடியோ எடுத்த பதிவை மறைக்கும் வனத்துறை காவலர்கள்! சிறுத்தை மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்திருந்தால் சிறுத்தை புலி வாயில் ரத்தம் எப்படி இருந்திருக்கும்! சிறுத்தையை புதைக்கும் முன்பு பனை ஓலையை வைத்து சிறுத்தையை எரித்து அதன் பின்பு புதைத்ததின் மர்மம் என்ன! சிறுத்தை புலி இறந்த இடத்தில் இருந்த ரத்தக்கரை வனக்காவலர்களால் அளிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ரவீந்திரநாத் மேலாளர் தங்கவேல் ஆடு மேய்க்கும் அலெக்ஸ் பாண்டியனை வனத்துறையில் ஆஜராகும் படி தொலைபேசி எண் மிரட்டியது எதற்காக!?அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமல் மௌனம் காக்கும் வனத்துறை அதிகாரிகள்!
தேனி மாவட்டம், பெரியகுளத்தையடுத்த கைலாசநாதர் மலைக்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோம்பை சொர்க்கம் லட்சுமிபுரத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த 27-ந்தேதி அன்று சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்த தாக தகவல் தெரிந்து வனத்துறையினர் அந்த சிறுத்தையை மீட்க முயற்சித்த போது அந்த சிறுத்தை உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனை தாக்கிவிட்டு காட்டுக்குள் தப்பிச் சென்று விட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன் பின்பு 28 ஆம் தேதி மறுபடியும் அதே இடத்தில்
சோலார் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சிறுத்தை இறந்து கிடந்ததாகவும் இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு உள்ளதாகவும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் விசாரணை மேற்கொண்டதில் மின் வேலி அமைத்திருந்த இடம் ஓ பன்னீர்செல்வம் மகன் ப.ரவீந்திரநாத்திற்கு MPக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் என்றும் ரவீந்திரநாத் மேலாளர் ஆடு மேய்க்கும் தொழிலாளி அலெக்ஸ் பாண்டியனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகம்படி மிரட்டி உள்ளதாகவும் அந்த ஆடியோ பதிவை வனத்துறை அதிகாரிகளிடம் ஆடு மேய்க்கும் தொழிலாளி சங்கத்தின் வழக்கறிஞர் கொடுத்ததற்குப் பின்பு 30 ஆம் தேதி ஓபிஎஸ் ரவீந்திரநாத்தின் மேலாளர் தங்கவேல் ,ராஜவேல் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஆட்டுக்கிடையில் அடுத்தடுத்து ஆடுகளை சிறுத்தை அடித்து சென்றுள்ளது. அந்த தகவலை வனத்துறைக்கு உடனடியாக கொடுத்து இருந்தால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டுபிடித்து இருக்கலாம். அதன் மூலம் வேலியில் சிக்கிய சிறுத்தையை மீட்டு அதன் உயிரை காப்பாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. தகவல் கொடுக்காமல் மறைத்ததால் சிறுத்தை உயிரிழக்க ஒருவிதத்தில் காரணமாக இருப்பதால்
ஆட்டு மந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் பேர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆடு மேய்க்கும் தொழிலாளி மீது வனத்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பாக 500க்கும் மேற்பட்டோர் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் நடந்தது என்ன!?
வனத்துறையினர் அரங்கேற்றியது நாடகமா !?என்பதை விவரிக்கிறது நமது ரிப்போர்டர் விஷன் பத்திரிக்கை குழு!
இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது அதிர்ச்சித் தகவலை தெரிவித்தனர். மின் வேலியில் சிக்கி சிறுத்தை இறந்ததாக வனத்துறையினர் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அப்பகுதி பொதுமக்கள் திடிக்கிடும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
அப்படி என்றால் எப்படி சிறுத்தை இறந்தது என்று விரிவாக விசாரித்த போது பெரியகுளம் கோம்பை மலைப்பகுதியில் அடிவாரத்தில் மின் வேலியில் சிக்கி இருந்ததாகவும் சிறுத்தையை உதவி வனத்துறை காவலர் மகேந்திரன் காப்பாற்ற முயன்ற போது சிறுத்தை மகேந்திரனை தாக்கியதில் மகேந்திரனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு சிறுத்தை தாக்கி காயம் அடைந்த மகேந்திரன் ஆத்திரத்தில் தன்னுடன் வந்திருந்த மூன்று வன காவலர்களுடன் சேர்ந்து சிறுத்தையை அடித்து கொன்று வேறொரு இடத்துக்கு சிறுத்தையை கொண்டு சென்று மறைத்து வைத்துவிட்டு சிறுத்தை தப்பி விட்டதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அதன் பின்னர் மறுநாள் அதே சிறுத்தை அதே இடத்தில் மின் வேலியில் சிக்கி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
சிறுத்தை இறந்ததற்கு முக்கியமான காரணம் அமைத்திருந்த மின் வேலியில் அதிகமான மின்சாரம் இருந்ததே சிறுத்தை இறந்ததற்கு காரணம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வனத்துறையினர் நாடகத்தை அரங்கேற்றி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
சிறுத்தை இறந்ததற்கான உண்மையை கண்டுபிடிக்க நேர்மையான வனத்துறை உயர் அதிகாரிகளை தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) குருசாமி கூறுவது போல உண்மையிலேயே ரவீந்திரநாத் நிலங்களைச் சுற்றி அமைத்திருந்த சோலார் மின் வேலி மின்சாரம் தாக்கிதான் சிறுத்தை புலி இறந்திருந்தால் வனத்துறையினர் கைது செய்ய வேண்டிய முதல் நபர் தோட்டத்தின் உரிமையாளரைத் தான் கைது செய்திருக்க வேண்டும் .
அதை விட்டு விட்டு வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து விலை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த நபரை 10 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பலமாக தாக்கியதுடன் அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர் .
இது குறித்து மனித உரிமை ஆணையம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்போம் என்றும் கைது செய்யப்பட்டு உள்ள அப்பாவி அலெக்ஸ் பாண்டியன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்றால்
தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை இறந்ததற்கு காரணம் வனத்துறை காவலர்களா!?
மின் வேலியா!?
பொறுத்திருந்து பார்ப்போம்