தமிழக அரசு உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் ஆட்சியர்கள் வழங்கும் 30 நாட்கள் அனுமதியை வைத்து முறைகேடு!
விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளம், கண்மாய்களில் வண்டல மண் இலவசமாக எடுத்து கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் அனுமதியை வைத்து முறைகேடு!
அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
மண்பாண்டத் தொழில் செய்வோா், செங்கல் சூளை வைத்திருப்போா், நிலங்களை மேம்படுத்த வண்டல் மண் எடுக்கும் விவசாயிகள், சாலை மேம்பாடு செய்வோா் ஆகியோா் மண் எடுக்க சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது..
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்சசித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் மண்,வண்டல் மண், களிமண்,கிராவல் ஆகியவற்றை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கன மீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவைப்படும் களிமண் 60 கன மீட்டரும், செங்கல் சூளை போன்ற மற்ற தேவைகளுக்கு மண் அகற்ற அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்
இந்த உத்தரவில் , மண், கிராவல் ஆகியவை 30 கன மீட்டருக்கு மிகாமல் எடுத்துக் கொள்ள, இருபது நாட்களுக்கு மிகாமல் அனுமதி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளம், கண்மாய்களில் வண்டல மண் இலவசமாக எடுத்து கொள்ள, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று, நில உரிமை சான்று, அங்கீகரிக்கப்பட்ட ஆயவகங்களின் மண்பரிசோதனை அறிக்கை பெற்று, கலெக்டரிடம் நேரில் மனு செய்து, அனுமதி பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் வழங்கிய 30 நாட்களுக்கு வழங்கிய அனுமதியை வைத்துக்கொண்டு முறைகேடாக சவுடு மண் எடுக்க , நூறு அடி ஆழம் வரை தோண்டி மணல் அள்ளப் படுகிறது. விவசாயம் சார்ந்த மண் மேட்டை சமன் செய்வது, பள்ளத்தை மேடாக்குவது போன்ற பணிகளுக்கான அனுமதி முறைகேடாக பயன்படுத்தி அதிக ஆழத்தில் மணல் எடுத்து விற்கின்றனர்.மண்ணை அளவுக்கு அதிகமாக சட்டவிரோதமாக எடுத்து வியாபார ரீதியாக பயன்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
மாவட்ட ஆட்சியாளர் மண் அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கிய இடங்களில் சவுடு மண், உவரி மண் எடுப்பதற்கான அனுமதியை வைத்து முறைகேடாக ஆற்று மணல் எடுத்து விற்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் குறைதீர்க்கும் தினத்தில் சமூக ஆர்வலர்கள் முறையிட்டும் மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அளவுக்கு அதிகமாக ஆழமாகவும் அருகில் உள்ள நிலங்களிலும் ஜேசிபி போன்ற இயந்திரங்கள் மூலம் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக காவல் மண் எடுத்து விற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு பல புகார்கள் வந்துள்ள நிலையில் தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் வழங்க உள்ள அனுமதியை எந்த நபர்கள் பெறுகிறார்கள் அவர்களுக்கும் ஆளுங்கட்சி முக்கிய பள்ளிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அந்தந்த நபர்கள் வசிக்கும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் வட்டாட்சியாளர் அவர்கள் அறிக்கை ஒன்றை தயார் செய்து மாவட்ட ஆட்சியர் இடம் வழங்கிய பின்பு தான் அந்த நபருக்கு 30 நாள் மண் அல்ல அனுமதி வழங்க வேண்டும் . ஏனென்றால் அனுமதி பெற்றுக்கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர்களிடம் கைகோர்த்துக்கொண்டு சட்ட விரோதமாக முறைகேடாக மண்ணை அள்ளி பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து 100 சதவீதம் முறைகேடு நடக்கும் என்பது தான் நிதர்சனம்.