தமிழக அரசு முத்திரை மற்றும் தமிழக முதல்வர் படத்துடன் போலி பட்டா !40 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி! அதிர்ச்சித் தகவல்!
மோசடி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கோவை மாநகராட்சி காவல் ஆணையர்!?

தமிழக அரசு முத்திரை மற்றும் தமிழக முதல்வர் படத்துடன் 40க்கும் மேற்பட்டவர்களிடம் போலி பட்டா கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி! அதிர்ச்சித் தகவல்!
மோசடி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கோவை மாநகராட்சி காவல் ஆணையர்!?
கோவை மாநகரிலுள்ள சிங்காநல்லூர் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தற்போது சுமார் 178 கோடி மதிப்பில் கோவை வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பஸ்கள் நிறுத்தும் அளவுக்கு இடவசதி செய்யப்பட உள்ளது. மேலும், இதில் வணிக வளாகம், உணவு விடுதி, பயணிகள் காத்திருப்புக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றது.

பேருந்து நிலையம்

இதை பயன்படுத்தி கோவை வெள்ளலூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டுமனை வழங்க உள்ளதாக கோவை இருகூர் காமாட்சி புரத்தில் வசித்து வரும் வினோத், சாரதாமணி, சூலூரை சேர்ந்த மணி மற்றும் மணிகண்டன் ஆகியோர்கள் சட்ட விரோதமாக பணம் வசூல் செய்து மோசடி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கவுண்டம்பாளையம், கோல்டு வின்ஸ், மலுமிச்சம்பட்டி, ஒண்டிபுதூர், ஆவாரம்பாளையம், சித்தாபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிட மக்களை ஏமாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நிலம் கொடுப்பதாக ஒவ்வொரு நபரிடமும் 50,000, முதல் ஒரு லட்சம், இரண்டு லட்சம் என 400-க்கும் மேற்பட்டவர்களிடம் வசூல் செய்துள்ளனர்.
மேலும், மோசடியாளர்கள் பணம் பெற்றதற்கான ஆதாரமாக முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் தமிழக அரசின் முத்திரையுடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயர் அடங்கிய போலியான டோக்கன் கொடுத்துள்ளனர்.
அதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் ஆதித்தமிழர் நல மையம் என்ற பெயரில் போலியான பட்டா கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், பணத்தைப் பெற்றுக் கொண்டு இடத்தை தராமல் மோசடி செய்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு நடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
மேலும், இந்த புகார் மனுவில் 40-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதற்கு உள்ளான சான்றிதழ்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்த இந்த நபர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தவர்கள் மற்றும் பண மோசடி செய்த நபர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரதீப்ககுமார் IPS பணி மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது கோவை மாநகர காவல் ஆணையர் ஆக பாலகிருஷ்ணன் IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் அவர்களை நியமித்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதற்கு காவல்துறைக்கு பொதுமக்களும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மாநகர போலீசாருக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். போலீசார் அனைவரும் நடந்தே சென்று ரோந்து பணிகளை மேற்கொள்வது அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே தற்போது போலி பட்டா வழங்குவதாக சாமானிய ஏழை எளிய பொதுமக்களிடம் ஆசை வார்த்தை காட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர்களை நேர்மையான மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்வார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்!!