தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் முறைகேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள்!

தமிழகத்தில்
மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.
இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின் வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம நிர்வாக அலுவலர்,
வருவாய் ஆய்வாளர்,
வட்டாட்சியர்,
மண்டல துணை வட்டாட்சியர்,
வருவாய்க் கோட்ட அதிகாரி,
மாவட்ட வருவாய் அலுவலர்,
மாவட்ட ஆட்சித் தலைவர்.
ஆகிய அனைத்து அதிகாரிகளும் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் வருவார்கள்.
தமிழக வருவாய்த்துறை, மற்றும் பத்திரப் பதிவு துறை & வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தொடர்ந்து லஞ்ச ஊழல் முறைகேடு அதிகமாகவே நடந்து வருகின்றன. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருகிறார்கள். முதல் இடத்தில் வருவாய்த்துறை இரண்டாவது இடத்தில் பத்திரப் பதிவுத்துறை மூன்றாவது இடத்தில் வட்டாரப் போக்குவரத்து துறை ஆகிய மூன்று துறைகளில் உள்ள அதிகாரிகள் தான் போட்டி போட்டுக் கொண்டு லஞ்சம் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை சுமார் 20 க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடித்து கைது செய்து அதன்பின்பு அவர்கள் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பூர் மாவட்டத்தில்
கிராம நிர்வாக அலுவலர் பிரபு (44) மற்றும் அவரது உதவியாளர் கவிதா (36) இருவரும் அவிநாசி முருகம்பாளையத்தை சேர்ந்த 42 வயது கார்த்திகேயன், இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலத்திற்கு சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக
ரூ.7 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து

பல்லடம் தாலுகாவுக்குட்பட்ட கே.அய்யம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி( வயது44 )
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவரிடம் 15,000 கேட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வேலூர், கே.வி. குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான

கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) கோபிநாத் பட்டா பெயர் மாற்றத்துக்கு ரூ. 10,000 லஞ்சம் கேட்டதற்காக விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தால் (டிவிஏசி) 18/03/2025
கைது செய்யப்பட்டார்.
22/03/2025 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில்
குடியாத்தம் கோட்டாட்சியர் பணியிடை நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது!
சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டாட்சியர் சுரேஷ் பட்டா பெயர் மாற்ற 15,000 லஞ்சம் கேட்டதாக 14/02/2025 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.