தலை மறைவாக இருந்த நடிகை மகாலட்சுமி கணவர் 25 கோடி பணம் மோசடியில் கைது! பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகஅதிர்ச்சி தகவல்!
தலைமறைவாக இருந்த நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!
போலி ஆவணங்களை வைத்து பல நபர்களிடம் 25 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக அதற்கு தகவல்!
மோசடி செய்த பணத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பொருளாளராக போட்டியிட்டு பல கோடி ரூபாய் செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா (மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட்) சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரில் கடந்த 2020. ஆண்டு.லிப்ரா ப்ரொடக்ஸன் பிரைவேட் லிமிடெட்., நிறுவனத்தைச் சேர்ந்த நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகரன் அறிமுகமானார்.
அப்போது நகராட்சி திடக் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க உள்ளதாகவும் அத் திட்டத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும் அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி மேற்படி திட்டம் தொடங்க இருப்பதாக
அந்தத் திட்டத்தின் போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்ப வைத்து 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்து
பவர் ப்ராஜெக்ட் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தொடங்காமல் வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும் எனவே கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் கொடுத்திருந்தார் .
புகாரை தொடர்ந்து புலன் விசாரணை செய்யப்பட்டு வந்தது.
புலன் விசாரனையில் போலி ஆவணங்களை வைத்து திடக்கழிவு மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக போலி ஆவணங்களை வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து பண மோசடி செய்த நபர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர்.ஐ.பி.எஸ். உத்தரவில் மத்திய குற்றப்பிரிவு (இடிஎப் )காவல் உதவி ஆணையாளர் ஜான் விக்டர் தலைமையில் காவல்துறையினர் மோசடி வழக்கில் தலைமறைவாக
இருந்த ரவீந்திரனை
த/பெ.சந்திரசேகரன்.
சென்னையில் அசோக் நகர் 19வது அவென்யூ
2B, 28 எண்18,கிரீன் பீஸ், மே பெறி அபார்ட்மெண்ட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டு
சென்னை மத்திய குற்றப்பிரிவு & சிபிசிஐடி.,எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திடக்கழிவு திட்டம் தயாரிக்க மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி மோசடி செய்திருப்பதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மோசடி செய்த பணத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயலாளராக போட்டியிட்டு பல கோடி ரூபாய் செலவு செய்ததாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது!