தவணை கட்டியும் தனியார் ஏஜெண்ட் மூலம்
இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக வாடிப்பட்டி சிவ கிருஷ்ணா டிவிஎஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார்
தவணை கட்டியும் தனியார் ஏஜெண்ட் மூலம்
இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வாடிப்பட்டி சிவ கிருஷ்ணா டிவிஎஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார்!
கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் பலரும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்றே வாங்குவதை பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட தொகையை செலுத்தி வாகனங்களை வங்கிய பிறகு மாதம் தோறும் ஒரு தொகையை நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வசூலித்து வருகின்றன. சில நேரங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உரிய நேரத்தில் இஎம்ஐ கட்ட தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் கூட ஈடுபடுகின்றன.
பெரும்பாலும் முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனியார் ஏஜெண்ட் மூலமாகவே இதுபோல வாகன பறிமுதல் நடப்பதாக சொல்லப்படும் நிலையில்,
இஎம்ஐ கட்டவில்லை என தனியார் ஏஜெண்ட் மூலமாக வாகனங்களை பறிமுதல் செய்வது சட்ட விரோதம் அதேபோல் அடிப்படை வாழ்வு உரிமைக்கு எதிரானது எனவும் கடுமையாக தெரிவித்தது. மேலும், EMI கட்ட தவறினாலும் கூட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏஜெண்ட்கள் மூலமாக வாகனங்களை தனியார் பறிமுதல் செய்யக்கூடாது எனவும் இதுபோன்ற மீட்பு ஏஜெண்ட்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தும் அந்த உத்தரவுகளை எல்லாம் காட்டில் பறக்கவிட்டு
தவணை பணத்தை வசூல் செய்து விட்டு வாகனத்தை ஏஜெண்ட்கள் மூலமாக பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தை கொடுக்க மறுக்கும்
வாடிப்பட்டி
சிவ கிருஷ்ணா டிவிஎஸ் ஷோரூம் நிர்வாகத்தின் மீது வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா பாண்டியராஜபுரம் குரங்கு தோப்பு கிராமத்தில் வத்து வருபவர்
முத்தழகு த/பெ மாயன் மூப்பனார்
இவர் வாடிப்பட்டி சிவ கிருஷ்ணா டிவிஎஸ் ஷோரூம் இல் மார்ச் மாதம் டிவிஎஸ் எக்ஸ்எல்(TN-59DY1931) பைக் மாதத் தவணையில் எடுத்துள்ளார். ஏப்ரல் ,மே இரண்டு மாத தவணைத் தொகையை கட்டியுளார். ஆனால் அதற்கான ரசீது கொடுக்கவில்லை எனவும் ஜூன் மாத தவணை கட்டுவதற்கு முன்பு கடந்த சனிக்கிழமை 29/06/2024 இரண்டு சக்கர வாகனத்தை சிவா கிருஷ்ணா டிவிஎஸ் நிர்வாக ஊழியர்கள் எடுத்து சென்றுவிட்டனர்.
பின்பு முத்தழகு சிவ கிருஷ்ணா ஷோரூம்க்கு சென்று அங்கிருந்த மேலாளர் இடம் நான் இரண்டு மாதங்களாக இரண்டு தவணையும் சரியாக கட்டி விட்டேன் அப்படி இருந்தும் என் வண்டியை ஏன் எடுத்துச் சென்றீர்கள் அதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு நீங்க ஏப்ரல் மாசம் மட்டும் ஒரு தவணை கட்டி இருக்கீங்க மே ஜூன் மாதம் கட்டவில்லை,
அதனால் தான் வண்டியை தூக்கிட்டோம் என்று ஷோரூமில் உள்ளவர்கள் பதில் சொல்லியிருக்காங்க அதன் பின் மே மாசம் ரெண்டு தவணையாக (2000 +2000) கட்டினேன்
அதுக்கு ரசீது கொடுக்கவில்லை என்று சொன்னதுக்கு பணம் கட்ட முடியாத வக்கத்த பயலுக்கு எதுக்குடா வண்டி என்று அநாகரிகமாக திட்டியதும் இல்லாமல் அவரை வெளியே சிவ கிருஷ்ணா ஷோரூம் இல் உள்ள டிவிஎஸ் வசூல் தரர்கள் நீ எங்கு வேண்டுமானாலும் புகார் கொடு என்றும் எங்களை ஒன்று யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டும் தேனியில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் இதனால் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்த முத்தழகு தன்னை தகாத வார்த்தையால் பேசி அநாகரீகமாக நடந்து கொண்டதாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் மன உலைச்சலுடன் புகார் கொடுத்துள்ளேன் என்றும் காவல் நிலையத்தில் நேர்மையான முறையில் விசாரணை செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் வாடிப்பட்டி பகுதியில் உள்ள இரண்டு சக்கர வாகன விற்பனை நிறுவனங்கள் மீது இருந்த நம்பிக்கையை இழந்து அச்சத்தில் இருப்பதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எது எப்படியோ ரிசர்வ் வங்கி நிபதனைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல்
தவணை முறையில் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யும் பைனான்ஸ் நிறுவனங்களின் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் தயங்காமல் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற தொடர் அத்துமீறல்களில் ஈடுபட மாட்டார்கள் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். பொறுத்திருந்து பார்ப்போம்
சிவ கிருஷ்ணா டிவிஎஸ் நிறுவனத்தின் மீது வாடிப்பட்டி காவல் நிலையத்தின் நடவடிக்கையை!