காவல் செய்திகள்

தாயை அவதூறாக பேசியதற்காக 75 வயது முதியவரை கத்தியால் குத்தி கொலை! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த பழனி தாலுகா காவல்துறையினர்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம் பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் (75 ) தனது மகள் பார்வதி (40 ) மற்றும் பார்வதியின் மகள்( 20 வயது ) ஆகியோர் தனியாக வசித்து வருகிறார்கள். அதே பகுதியில் வசிக்கும் உறவினரான மாசிலாமணி (28 ) என்ற இளைஞர் திடிரென மாரியப்பன் வீட்டில் நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 75 வயது முதியவர் மாரியப்பன் குத்தியதில் முதியவர் மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தடுக்க சென்ற மகள் பார்வதியையும் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த மகள் பார்வதி சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு வந்த தகவலின்படி பழனி டிஎஸ்பி தன ஜெயன் தலைமையில் தாலுகா போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று டிஎஸ்பி தனஜெயன் விசாரணை மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட முதியவர் மாரியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதியவர் மாரியப்பனை மாசிலாமணி எதற்கு கொலை செய்தார் என காவல்துறையினர் விசாரணை செய்தபோது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய உறவினராக மாசிலா மணி என்பவரது குடும்பத்திற்கும், மாரியப்பன் குடும்பத்திற்கு இடையே ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் 14/12/20 சனிக்கிழமை காலை மாசிலா மணியின் தாயாரை கடைவீதியில் வைத்து அநாகரிமாக முதியவர் மாரியப்பன் பேசியதாகவும் இதனால் மனமுடைந்த மகன் மாசிலா மணியிடம் தாய் கூறியுள்ளார். ஏற்கனவே அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில் மேலும் ஆத்திரம் அடைந்த மகன் மாசிலாமணி முதியவர் மாரியப்பன் வீட்டிற்குள் நுழைந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக குற்றவாளியான மாசிலாமணியை பழனி தாலுகா காவல்துறையினர் கைது செய்து கொலை செய்ததற்காக பயன்படுத்திய கத்தியையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மாசிலாமணியின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பழநியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button