மாவட்டச் செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் தீ !குலசேகரன் கோட்டை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!மாவட்ட நிர்வாகம் நடவைக்கை எடுக்க வேண்டி வாடிப்பட்டி பேரூராட்சியில் தர்ணாவில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!

குலசேகரன் கோட்டை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!

திடக்கழிவு மேலாண்மை கிடங்கில்  தீ !
குலசேகரன் கோட்டை

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டி கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
வாடிப்பட்டி பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்தால் குலசேகரன் கோட்டை பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்!மாவட்ட நிர்வாகம் நடவைக்கை எடுக்க வேண்டி வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணாவில்

வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணாவில்


கடந்த அதிமுக ஆட்சியில்   சோழவந்தான்  அதிமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மாணிக்கம் (தற்போது பிஜேபி கட்சியில் ) ஒப்பந்தம் எடுத்த 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  கட்டி முடிக்கப்பட்ட வாடிப்பட்டி  குப்பை கிடங்கு பேரூராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

05/06/23 அன்று திறந்த முதல் நாளே மர்ம நபர்கள்
குப்பை கிடங்கில் தீ  வைத்தால் பொதுமக்கள் அவதி!
மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி பேருராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுவதால் மலைபோல் சேர்ந்து உள்ளது. கோடை வெயில் அதிகரித்து காணப்படும் இந்த நிலையில்  குப்பை கிடங்கிற்கு மர்ம நபர் தீ வைத்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனம் உடனடியாக வரவழைக்கப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குகுள் கொண்டு வந்துள்ள நிலையில்


அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டிகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் என அனைவரும் கண் எரிச்சல், மூச்சு தினறல், வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் சுமார் 2 கோடி மதிப்பிலான ,மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கழிவு மேலாண்மைக் கிடங்கை தீ வைத்து நாசமாக்கியதால் தற்போது வரை அணைக்க முடியாத நிலை…
மதுரை மாவட்ட நிர்வாகம் தீ வைத்த மர்ம நபர்கள் மீது  உடனடியாக நடவடிக்கை எடு..
பட்டியலின மக்கள் வாழும் பகுதியான குலசேகரன்கோட்டை பகுதியில் இருக்கும் திடக் கழிவு கிடங்கில் நடந்த  தீ விபத்து குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக பேரூராட்சி அலுவலகம் முன்பு  கவுன்சிலர்கள்  தர்ணாவில் ஈடுபட்டனர்.

உடனே சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷன் நேரில் வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். அப்போது கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பாதாக கூறிய பின்பு தர்ணாவை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகளை திடக் கழிவு கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றது.

திடக் கழிவு மேலாண்மை கிடங்கில்  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ..
அரசு சாரா அமைப்புகளின் பங்கு
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள்.
வீட்டு உபயோகம் திடக்கழிவுகளை அக்கம்பக்கத்திலோ, தெருக்களிலோ, திறந்த வெளியிலோ, காலியாக இருக்கும் நிலங்களிலோ, கழிவு நீர் சாக்கடைகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ தூக்கி எறிதல் கூடாது.உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ள பொதுவான குப்பைத்தொட்டிகளில் உணவு கழிவு/மட்கும் கழிவுகளைப் போட வேண்டும்
கடைகள், அலுவலகங்கள் வணிக வளாகங்களில் அமைந்திருந்தால் நிறுவனங்கள், முதலியவை பேரூராட்சி நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ள பொது குப்பைத் தொட்டியில் கொட்டலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button