திண்டுக்கல் கொடை ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை! மாதம் பல லட்சம் கல்லாக் கட்டும் அம்மைநாயக்கனூர் காவல் நிலையம்! தென் மண்டல ஐஜி நடவடிக்கை எடுப்பாரா!?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட் கோட்டத்தில் அமைந்துள்ள அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொடைரோடு நகரப்பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளா லாட்டரி சீட்டு அமோக விற்பனை!
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை தொடர்ந்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வரும் நபர்களை காவல்துறையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர்.
ஆனால் நூதன முறையில் நான்கு நம்பர் லாட்டரி சீட்டுகளை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்து அதன் பின்பு ஏதாவது ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துமாறு சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கேரளா அரசின் லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக அலுவலகம் போட்டு விற்பனை செய்து வரும் ஆதாரம் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்தில் உட்பட்ட அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் கொடைரோடு நகரப் பகுதிகளில் அலுவலகம் வைத்து கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வருவதாக பல புகார்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்போது வரை கொடை ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் சட்ட விரோதமாக விற்பனை அமோகமாக நடப்பதாக தற்போது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கொடை ரோட்டில் உள்ள டாஸ்மார்க் ஏசி பார் அருகில் அலுவலகம் வைத்து சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் மிகக் குறைந்த தூரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு சான்றாக கேரளா அரசின் 05/07/2023 அன்று குலுக்கல் நடைபெறும் லாட்டரி சீட் விற்கப்பட்ட ஆதாரத்தை சமூக ஆர்வலர்கள் ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிகை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு மாதம் பெரும் தொகையை கப்பம் கட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் அது மட்டும் இல்லாமல் நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தடை செய்யப்பட்ட லாட்டரி கஞ்சா சூதாட்டம் இந்த மூன்றும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதை கண்டு கொள்ளாமல் இருக்க நிலக்கோட்டை காவல் நிலையம் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருக்கும் காவலர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை கப்பம் கட்டுவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.ஆகவே திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேர்மையான அதிகாரிகளை நியமித்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்