திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு!? அமைச்சர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இந்து சமய அறநிலையத் துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகத் தகவல்!!
கடந்த 5ஆண்டு அதிமுக ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து பல துறைகளில் வேலை வாய்ப்புக்கான அரசு ஆணை பிறப்பித்தது. மருந்தாய்வாளர் ,கால்நடை உதவியாளர்,இந்து சமய நலத்துறை,போக்குவரத்துத் துறை, மின் வாரியத் துறை, கூட்டுறவு துறை, இந்தத் துறைகளில் வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களை அனுப்ப அரசு இணைய தளம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறலாம். அப்படி இணைய தளம் ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்ய அரசுக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் . அதன் பின்பு அந்த நபருடைய இருப்பிடச் சான்றிதழ் காவல்துறை நன்னடத்தைச் சான்றிதழ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இவை அனைத்தையும் வாங்கி விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
அப்படி கடந்த அதிமுக ஆட்சியில் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த படித்த இளைஞர்கள் பல லட்சம் பேர் இருப்பாரகள் என்ற தகவல் வந்துள்ளது.
ஆனல் இன்டர்வியூ என்ற பெயரில் தபால் மட்டும் வரும்.அதில் ஒரு சில துறைகளில் இன்டர்வியூ நடந்துள்ளது. அதன் பின் யாரோ ஒருவர் நீதி மன்றம் செல்வார் உடனே அந்த அரசு ஆணை ரத்து செய்யப் படும். மீண்டும் புது அரசு ஆணை வரும்.மறுபடியும் படித்த பட்டதாரி இளைஞர்கள் புதிதாக வின்னப்பிபர்கள்.அப்படி படித்த பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கும் போது ஆன் லைன் பதிவு கட்டணம் செலுத்தியது மட்டும் அதிமுக ஆட்சியில் சுமார் 100 கோடிக்கு மேல் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. இப்படி படித்த பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை நூதன முறையில் அரசு மோசடி வசூல் செய்தததால் தான் இளைஞர்கள் மத்தியில் ஸ்டாலின் அவர்கள் முதல்வராக வர வேண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற செய்தனர்.
ஆனால் (பழைய குருடி கதவைத் திற) என்ற பல மொழி யைப் போல தற்போது திமுக ஆட்சியிலும் நடக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இதற்கு உதாரணம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த அதிமுக ஆட்சியில் வின்னபித்திருந்த கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அரசு ஆணை பிறப்பித்தது.அதே போல் மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்த நிலையில் இந்த நேர்முகத் தேர்வு நியாயமான முறையில் நடக்க வில்லை என்றும் இந்தப் பணிக்கு தலா 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை அமைச்சர்கள் பணம் பெற்று விட்டார்கள் என்று நீதி மன்றத்தில் பொது நல வழக்கு பதிவு செய்யப் பட்டது. உடனே எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி தமிழக அரசு மறு தேதி அறிவிக்கும் வரை தற்போது நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. நேர்முகத் தேர்வு ரத்து ஆன செய்தி எதிரொலியால் தேர்வுக்கு சென்ற 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் உட்கார்ந்து தர்ணா போராட்டம் செய்ததை அனைவரும் அறிவீர்.
அதன் போல் தமிழகம் முழுவதும் சுமார் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 2000 கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் பணியாளர்கள் எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.அதற்காக பல லட்சம் படித்த இளைஞர்கள் விண்ணப்பித்தார்கள் .அதுவும் நேர்மையான முறையில் நேர்முகத் தேர்வு நடக்க வில்லை என்றும் தலா 10 லட்சம் ரூபாய்அமைச்சர்கள் மற்றும் திமுக மாவடச் செயளாலர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி ஆணை வழங்கியதாக குற்றச் சாட்டுகள் எழுந்த நிலையில் உடனே வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் முதலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா 74 கிராம நிர்வாக அலுவலகம் உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி இருந்ததை ரத்து செய்யுமாறும் பணி நியமன ஆணை உத்தரவையே ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதே போல அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் தெரிவித்ததாகவும் உடனே அந்த பணியும் தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020 செப்டம்பர் மாதம் போட்ட அரசு ஆணையின்படி தற்பொழுது 07/07/2021 அன்று திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சீட்டு விற்பனையாளர் பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தனர். மொத்தம் காலி பணியிடம் 10 இந்தப் பணியில் சேர விருப்புமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ள கோவிலில் வழங்கப் பட்டது. ஒரு விண்ணப்பம் 100 ரூபாய். இந்தப் பணிக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட படித்த இளைஞர்கள் வின்னபித்திருந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்து 10 மாதம் முடிந்த நிலையில் தற்போது இந்த பணிக்கு நேர்முகத் தேர்வு 07/05/2022 அன்று நடக்கும் என்றும் 1/05/2022 அன்று அழைப்பிதழ் அனுப்பப் படுகிறது.அப்படி அனுப்பப் பட்ட அழைப்பிதழ் கிடைத்தவர்கள் காலை 9.00 மணிக்கு வந்து சான்றிதழ் சரிபார்த்து கொள்ள வேண்டும் 10 மணி முதல் நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது என்று தெரிவித்திருந்தது.
○அப்படி நேர்முகத் தேர்வுக்கு வரும் நபர்கள்
படித்த சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் , குற்ற நடவடிக்கையில் ஈடுபடாதவர் என்று காவல் துறை சான்று. பிறந்த தேதி சான்று, ஜாதி சான்று ஆதார் அட்டை,நன்னடத்தை சான்று, உடல் தகுதி சான்று,நன்னடத்தை சான்று, முன் அனுபவ சான்று இவை அனைத்திலும் அரசிதல் அதிகாரியின் சான்றிட்ட நகல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் 7//05/2022 அன்று நடக்க இருந்த நேர்முகத் தேர்வு அழைப்பிதழ் 05/05/2022 அன்றுதான் பெரும்பாலானோருக்கு கிடைத்ததாக தகவல்.அப்படி இருந்தும் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நேர்முகத் தேர்வுக்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்ததாக தகவல்.மாலை வரை நேர்முகத் தேர்வு நடந்ததாகவும் சென்றவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இது எல்லாமே ஒரு நாடகம் தான் என்றும் இந்த 10 காலி பணியிடங்களுக்கு இரண்டு அமைச்சர்கள் கே என் நேரு மற்றும் அன்பில் மகேஷ் தலா ஐந்துபேர் வீதம் பிரித்துக் கொண்டு முன் கூட்டியே தங்களுக்கு வேண்டிய 10 நபர்களுக்கு பணி வழங்க உத்தரவிட்ட தாகவும் தகவல் வந்துள்ளது.
இது சம்மந்தமாக களத்தில் இறங்கி விசாரணை செய்ததில். கல்வி அமைச்சர் 7 கேட்டதாகவும் இதற்கு நகராட்சி அமைச்சர் 10 வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறியதாகவும் உடனே கல்வி ஐந்து அமைச்சர் வைத்துக் கொள்ளட்டும் என்று கூறியதாகவும் தகவல் தெரிவித்தனர்.
அது மட்டுமில்லாமல் எந்த ஒரு நேர்முகத் தேர்வு வைத்து அரசு பணி வழங்க இருக்கும் எந்த ஒரு பணியும் திமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒன்றிய செயலாளர்கள் இவர்களுக்கு மட்டும் தான் என்று அந்தந்தத் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதுவும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கொண்டு செல்ல அவர்கள் உடன் பணி செய்யும் அவர்களது உறவினர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்தப் பணிகள் வழங்கப்படும் என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது. அடிமட்ட கட்சித் தொண்டர்களின் வீட்டில் படித்த இளைஞர்கள் அரசுப் பணிக்காக விண்ணப்பித்தால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை என்றும் விண்ணப்பிக்கும் நேரம் பணம் மட்டுமே விரயம் ஆகும் என்றும் ஆகவே இளைஞர்களின் வருங்கால அரசுப் பணி கனவு கேள்விக்குறியாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது
எது எப்படியோ விண்ணப்பித்து வேலை கிடைக்கும் என்று கனவில் நேர்முகத் தேர்வுக்கு வந்த அப்பாவி படித்த இளைஞர்களை ஏமற்றவதுடன் துரோகம் செய்யும் வகையில் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்கள் நேர்முகத் தேர்வு என்று வைத்து நூதன முறையில் மோசடி செய்து இளைஞர்களின் வாழ்க்கையையே கேள்விக் குறி ஆக்கி விடாதீர்கள்.
எது எப்படியோ ஓராண்டு திமுக ஆட்சி நிறைவடைந்த 07/05/2022 அன்று இளைஞர்களுக்கு கிடைத்த முதல் ஏமாற்றத்தை மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது!
கழக அரசு பொறுப்பேற்ற முதலாமாண்டு முத்தான தொடக்கமாக அமைந்துள்ளது. இரண்டாம் ஆண்டு நிச்சயம் இணையற்ற ஆண்டாக இருக்கும்!
வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து திராவிட மாடல் நமக்கான தமிழ்நாட்டை அமைப்போம்!எந்நாளும் உழைப்பேன்! தமிழ்நாட்டைக் காப்பேன்! என்று திமுக கட்சி தலைவர் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே போல் தமிழகத்தில் படித்த பல லட்சம் இளைஞர்களின் அரசு வேலை கனவு நினைவாக
தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
பொறுத்திருந்து பார்ப்போம்!!