திருச்சி சிறப்பு முகாமில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் சிறப்பு முகாம் சிறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல்!
திருச்சி சிறப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு.
திருச்சி ( அயல் நாட்டவர்களை சிறை வைக்கும்) சிறப்பு முகாம்.
புலம்பெயர் ஈழத்தமிழர் ஆனந்தராசா இலங்கையில் விடுதலைப் புலிப் போராளி என்று கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் பல ஆண்டுகள் இருந்தவர். இலங்கையில் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் உயிர் தப்பி 2009 இல் உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பித்து வந்தவர்.
2019 இல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அயல்நாட்டு சட்டப் படி 3/2 E பிரிவில் Q branch சிறப்பு பிரிவு காவல்துறையினர் திருச்சி சிறப்பு முகாம் அயல் நாட்டவர் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்துள்ளார். ஆகையால் சிறையில் இவருக்கு உளவியல் ரீதியாக சித்திரவதை செய்தார்களா என்று தெரியவில்லை. ஏற்கனவே ஆனந்தராசா புழல் மத்திய சிறையில் தான் இருந்தார் அப்போது இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்ததாக தகவல். மனநிலை பாதிக்கப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மனநிலை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அயல்நாட்டவர் குற்றப்பிரிவு படி திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். தற்போது அவருக்கு வழக்கு தண்டனை முடிந்த நிலையிலும் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த 20 நாட்களாக அவருக்கு உணவு தண்ணீர் இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் தமிழக அரசின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுகிறது. இந்த சிறப்பு முகாம் வருவாய்த்துறை மற்றும் Q பிரிவு பாதுகாப்பு போலீஸ் பிரிவு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழக அரசு திருச்சி சிறப்பு முகாமில் தனி கவனம் செலுத்துவதில்லை. திருச்சி சிறப்பு முகாம் நிர்வாகம் மிகவும் கொடுமையாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சிறையிலிருக்கும் நபரின் பெற்றோர் உறவினர் வழக்கறிஞர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருச்சி சிறப்பு முகாம் சிறையல்ல என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது திருச்சி சிறப்பு முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவரது கட்டுப்பாட்டின் கீழ் துணை வட்டாட்சியர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமின் முழு நிர்வாகத்தை வருவாய் ஆய்வாளர் ரவி என்பவர் தான் கவனித்துக் கொண்டு வருகிறார். ஆனால் உடல் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் ஆனந்தராசா என்பவரை இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் ஆனந்தராஜன் வழக்கறிஞராக நான் விசாரணை செய்தபோது இவ்வளவு குற்றச்சாட்டுகள் அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர் ஆகையால் இந்தக் குற்றச்சாட்டுகளை அனைத்தையும் மனித உரிமை மீறல்கள் ஆக கருதி மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரித்து ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம் அந்த மனு வழக்காக மாறும் பொழுது சிறப்பு முகாமை நிர்வாகிக்கும் அனைவரும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். என்று பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பெயர் தமிழ் பேரவை தலைவர் ஜான்சன் தெரிவித்தார்.
திருச்சி சிறப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் மனித உரிமை நிழலில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு.
திருச்சி ( அயல் நாட்டவர்களை சிறை வைக்கும்) சிறப்பு முகாம்.
புலம்பெயர் ஈழத்தமிழர் ஆனந்தராசா இலங்கையில் விடுதலைப் புலிப் போராளி என்று கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் பல ஆண்டுகள் இருந்தவர். இலங்கையில் பெரும் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் உயிர் தப்பி 2009 இல் உயிர் பிழைக்க இந்தியாவிற்கு தப்பித்து வந்தவர்.
2019 இல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அயல்நாட்டு சட்டப் படி 3/2 E பிரிவில் திருச்சி சிறப்பு முகாம் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் படைக்கப்பட்ட நாளிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்துள்ளார். ஆகையால் சிறையில் இவருக்கு உளவியல் ரீதியாக எந்த வித சித்திரவதை செய்தார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே ஆனந்தராசா புழல் மத்திய சிறையில் தான் இருந்தார் அப்போது இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்ததாக தகவல். மனநிலை பாதிக்கப்பட்டவர் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு மனநிலை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்காமல் அயல்நாட்டவர் குற்றப்பிரிவு படி திருச்சி சிறப்பு முகாமில் அழைத்துள்ளனர். தற்போது அவருக்கு வழக்கு தண்டனை முடிந்த நிலையிலும் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைத்துள்ளனர். கடந்த 20 நாட்களாக அவருக்கு உணவு தண்ணீர் இல்லாமல் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் தமிழக அரசின் நிதியில் இருந்து செலவு செய்யப்படுகிறது இந்த சிறப்பு முகாம் .வருவாய்த்துறை மற்றும் Q பிரிவு பாதுகாப்பு போலீஸ் பிரிவு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் தமிழக அரசு திருச்சி சிறப்பு முகாமில் தனி கவனம் செலுத்துவதில்லை. திருச்சி சிறப்பு முகாம் நிர்வாகம் மிகவும் கொடுமையாக செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது. சிறையிலிருக்கும் நபரை பார்ப்பதற்கு அவரது பெற்றோர் உறவினர் வழக்கறிஞர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருச்சி சிறப்பு முகாம் சிறையல்ல என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது திருச்சி சிறப்பு முகாம் திருச்சி மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் இருக்கிறது அவரது கட்டுப்பாட்டின் கீழ் துணை வட்டாட்சியர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாமின் முழு நிர்வாகத்தை வருவாய் ஆய்வாளர் ரவி என்பவர் தான் கவனித்துக் கொண்டு வருகிறார். ஆனால் உடல் பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருக்கும் ஆனந்தராசா என்பவரை இதுவரை கண்டு வருவாய் ஆய்வாளர் ரவி கண்டுக் கொள்ளாமல் இருக்கிறார். சமீபத்தில் ஆனந்தராஜன் வழக்கறிஞராக நான் விசாரணை செய்தபோது இவ்வளவு குற்றச்சாட்டுகள் அங்கு இருந்தவர்கள் கூறுகின்றனர் ஆகையால் இந்தக் குற்றச்சாட்டுகளை அனைத்தையும் மனித உரிமை மீறல்கள் ஆக கருதி மனித உரிமை ஆணையம் தலையிட்டு விசாரித்து ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம் அந்த மனு வழக்காக மாறும் பொழுது சிறப்பு முகாமை நிர்வாகிக்கும் அனைவரும் இந்த மனித உரிமை மீறல்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். என்று பத்திரிகையாளர் சந்திப்பில் புலம்பெயர் தமிழ் பேரவை தலைவர் ஜான்சன் தெரிவித்தார்.