திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் இளம் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் திருப்பூர் மருந்து கடைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை பாயுமா!?
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணி செய்யும் பெண்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்! சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் திருப்பூர் மருந்து கடைகள் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை பாயுமா!?
பாலியல் வன்முறை எனப்படுவது பாலியல் வன்புணர்வு, பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழில், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தியை மேற்கொள்ளல், பாலியல் சார்ந்த கேலி,மிரட்டல், கட்டாயக் கருக்கலைப்பு என பல வகைக் குற்றங்கள் அடங்கும். ஒரு பெண் அல்லது ஆண், குடும்பம் விரும்பாத ஒருவருடன் காதல் அல்லது உடலுறவு கொண்டார் என்பதற்காக வன்முறைக்கு உட்படுத்துவதையும் ஒரு வகை பாலியல் வன்முறையே ஆகும்.
திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு இளம்பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு!
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு பல சிறுமிகள் பனியன் கம்பெனிகளில் வேலைக்கு சேருவதும் திருப்பூரில் தீராத கொடுமையாக இருந்து வருகிறது.
திருப்பூர் பனியன் கம்பெனிகளில் தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் உள்ள ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களும், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் மட்டுமல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் என சுமார் 8 லட்சத்திற்கும் அதிமானோர் இங்கு தங்கி பணியாற்றி வருகின்றனர்.
டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் சுற்றியுள்ள இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதில், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு செல்லும் இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, அவர்கள் அனைவரும் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதாலையே அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் திருமணத்திற்கு முன்பே பெண்கள் தங்கள் விரும்புபவர்களுடன் தகாத உறவு வைத்து கொள்வது .தன்னுடன் வேலை பார்க்கும் நபர் தன்னை மூளைச்சலவை செய்து காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை
தகாத முறையில் உடலுறவு வைத்துக் கொள்வதால் கர்ப்பமான இளம்பெண்கள் மனைவியுடன் குடும்பம் நடத்திக்கொண்டே, தன்னை காதலிப்பதாக ஏமாற்றி வருவதை தெரிந்து கொண்ட அந்த இளம்பெண்கள்
பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதிமுறையையும் மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது.
அதன் பின்னர், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து கடைகளில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வந்த கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மருந்தக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது .
.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி தெரிவித்ததாவது, “மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. அதனை பெண்களும் பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆகவே அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.
திருப்பூரில் நடந்தேறும் அவலம் நிலை எப்போதும் மாறும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.