Uncategorizedகாவல் செய்திகள்

திருமண விடுப்பு கேட்கும் ஆயுதப்படை காவலரை திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தகாத வார்த்தையில் பேசும் அதிர்ச்சி ஆடியோ!?


மேலதிகாரிகளை அனுசரித்துப் போகாதவர்கள் தொடங்கி குற்றப் புகார்களில் சிக்குபவர்கள் வரை காவல்துறைக்குள் ஒதுக்கப்படுபவர்கள் பணிமாற்றம் செய்யப்படுவது முதலில் ஆயுதப்படைக்குத்தான். சுருக்கமாக ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `பனிஷ்மென்ட்டா’ என மக்கள் முணுமுணுத்துவிடுகிறார்கள். ஆயுதப்படையின் பணி என்ன, காவல் அதிகாரிகளின் சிறைச்சாலையாக இப்பிரிவு ஏன் மாற்றப்பட்டுள்ளது?

இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல தற்போது திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் துணைக் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் விநாயகம். ஆயுதப் படையில் உள்ள காவலர்களிடம் சர்வாதிகாரியாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு !

ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம்

திருப்பத்தூர் ஆயுதப்படை காவலர்களின் ஆதாங்கம்!

நாங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆயுதபடையில் காவலராக பணிபுரிந்து வருகிறோம் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை காரணம் ஆயுதப்படைக்கு புதியதாக பொறுப்பேற்று உள்ள துணை காவல் கண்கணிப்பாளர் விநாயகம் அவர்கள் திருமணத்திற்கு எங்களது ஈட்டிய விடுப்பு 30நாட்கள் கேட்டால் 7நாட்கள் தருவது மருத்துவ சிகிச்சை எடுக்க 30நாட்கள் கேட்டால் 2நாட்கள் தற்செயல் விடுப்பு தந்து Guard பணிக்கு அனுப்புவது வாரந்திர ஓய்வு கேட்டால் இல்லை என்று வாரந்திர ஓய்வு மனுவை முகத்தில் தூக்கி வீசி இல்லை என்று சொல்கிறார் அதற்கு மேல் எங்கள் விடுப்பை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கும் காவலர்களை Memoகுடுத்து சம்பளம் வராமல் promotion வராமல் செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.மேலும் இவர் அவரது ஜாதி காவலர்களுக்கு மட்டும் கேட்கும் விடுப்பை அப்படியே தந்து விடுகிறார்.ஆயுதபடையில் அடிப்படை வசதியான தங்கும் இடம் கழிவறை எதுவும் இல்லை இருந்தாலும் பணி முடித்து மாலை வரும் காவலர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே தங்க வைக்கிறார். ஆயுத படையில் பணி புரியும் காவலர்கள் 90% பேர் கல்யாணம் ஆனவர்களே.இதனால் மிகுந்த மனஉளைச்சளுக்கு ஆளாகி உள்ளதால் எந்த நேரத்திலும் எந்த காவலரும் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்புண்டு. அப்படி எதாவது தற்கொலை நிகழ்ந்தால் அதற்கு காரணம் DSP விநாயகம் அவரே முழு பொறுப்பு. மேலும் தமிழ்நாட்டிலயே எந்தவொரு DSP-யும் தங்களது சொந்த மாவட்டத்தில் பணி புரிவதில்லை. இவர் மட்டும் எப்படி இங்கு பணி மாற்றம் செய்து வந்தார் என்பது மேல் அதிகாரிகளுக்கு தெரியவில்லையோ. இவர் சொந்த ஊரு ஆலங்காயம் அருகில் உள்ள மிட்டூர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமில்லாமல் தற்போது அவர் ஆசிரியர் நகரில் புதியதாக வீடுகட்டி வசித்து வருகிறார்.இதற்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஒவ்வொரு ஆயுத படை காவலரும் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்பி உங்களிடம் எங்களுது கஷ்டங்களை முறையீடுகிறோம்.
Copy to,
1. பத்திரிக்கை நண்பர்கள்
2. காவல் கண்கணிப்பாளர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம்
3.காவல் துறை துணை தலைவர் ( வேலூர் சரகம் )
4. காவல் துறை தலைவர் அவர்கள் (வடக்கு மண்டலம் )
5. காவல் துறை இயக்குனர் அவர்கள் (சென்னை )
6. முதலமைச்சர் தனி

சுருக்கமாக ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாலே, `பனிஷ்மென்ட்டா’ என மக்கள் முணுமுணுத்துவிடுகிறார்கள். ஆயுதப்படையின் பணி என்ன, காவல் அதிகாரிகளின் சிறைச்சாலையாக இப்பிரிவு ஏன் மாற்றப்பட்டுள்ளது?பிரிவு.காவல்துறையை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை தாலுகா காவல்துறையினர். இவர்கள்தான் சட்டம் ஒழுங்கு, குற்ற வழக்குகளை விசாரிப்பார்கள். போலீஸ் ஸ்டேஷன் மூலமாக மக்களோடு நேரடித் தொடர்பில் இருப்பார்கள். சி.பி.சி.ஐ.டி., சிவில் சப்ளைய்ஸ், பொருளாதாரக் குற்றப்பிரிவு என இதில் பல பிரிவுகள் உண்டு.இரண்டாவது வகை ஆயுதப்படை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆயுதப்படைப் பிரிவு இருக்கும். இப்பிரிவை தேவைக்கேற்ப மாவட்ட எஸ்.பி. பயன்படுத்திக்கொள்ளலாம். கோயில் விசேஷங்கள், திருவிழாக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, முக்கிய வி.ஐ.பிக்கள் வரும்போது பாதுகாப்புக்காகச் செல்வது, சிறைக்கைதிகளைப் பாதுகாப்பாக நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து வருவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதன்மூலமாக அவ்வப்போது பொதுமக்களோடு நேரடித் தொடர்பில் ஆயுதப்படையினர் இருப்பார்கள். இங்கு பணிபுரிபவர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு மாற்றப்படுவார்கள். இன்ஸ்பெக்டர் ரேங்கிற்கு மேல் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்பவர்கள், பெரும்பாலும் அங்கேயே பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள்.
காவல்துறை பணிக்கு ஆள் எடுக்கும் பொழுது, ஆயுதப்படை மற்றும் பட்டாலியன்ஸ் மூலமாகத்தான் ஆள் எடுக்கப்படும். இதில் இருந்துதான் பதவி உயர்வு அடிப்படையில் தாலுகா காவல்துறைக்கு அவர்கள் மாறுவார்கள். இதில் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) தேர்வு என்பது தனி. தேர்ச்சி பெறும் எஸ்.ஐக்கள் மார்க் ரேங்க் அடிப்படையில், தாலுகா காவல், ஆயுதப்படை, பட்டாலியன் என மூன்று வகையிலும் பிரித்து அனுப்பப்படுவர். இந்த மூன்றுவகை காவல்பணியிலும் மூன்றாவது வகையான பட்டாலியன்களின் வாழ்க்கைதான் மிகவும் சிரமத்திற்கு உரியது

இந்தியா முழுவதும் ஆயுதப்படை இப்படித்தான் செயல்படுகிறது. இதில் சீர்த்திருத்தம் வரத் தேவையில்லை. ஆனால் நான் நீண்ட நாள்களாக ஒருவிஷயத்தைக் கூறிவருகிறேன். 1991 முதல் 2010 வரை பட்டாலியன் மூலமாக மட்டுமே காவல்துறைக்குள் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இதனால் பட்டாலியன், ஆயுதப்படை, தாலுகா காவல் என அனைத்திலும் அனுபவம் பெற்றவர்கள் காவல்துறையில் இருந்தார்கள். 2010-க்குப் பிறகு, போலீஸ் கமிஷனின் பரிந்துரைப்படி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் (பட்டாலியன்) மற்றும் ஆயுதப்படை மூலமாக காவல்துறைப் பணிக்கு ஆள் எடுப்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறையை மாற்றி பழைய நடைமுறையில், பட்டாலியன் மூலமாகவே காவல்துறைக்கு ஆள் எடுக்கும் பணியைத் தொடங்க வேண்டும். இதுதான் காவல்துறைக்குச் சிறப்பானது” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button