திரைப்பட தயாரிப்பாளரிடம்நெருக்கமாக பழகி நூதன முறையில் 10 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இளம் பெண்!?
நெருக்கமாக பழகி நூதன முறையில் பணத்தை திருடிச் சென்ற இளம் பெண்!
சென்னை கில்டு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும்
(உறுப்பினர் எண்13378 ) ஜேபி என்ற ஜெயராம் பாண்டியன் தற்போது ஒரு திரைப்படம் தயாரித்து வருவதாகவும் திருச்சி அரியமங்கலத்தில் வசித்து வருகிறார். ஜெயராம் பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியில் மண்டல பொறுப்பில் இருக்கிறார். இவர் எடுக்கும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஜெயராம் பாண்டியன் அப்பாவின் நெருங்கிய நண்பர் குடும்பம்
திருச்சி பொன்மலை செஞ்சிலியபுரத்தில் வசித்து வருவதாகவும் ஜேபி என்ற ஜெயராம்பாண்டியன் அப்பாவின் நண்பரின் மகள் மைதிலி புருசோத்தமன் சினிமா ஆசையில் ஜெயராம் பாண்டியனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். ஜெயராம் பாண்டியன் வீட்டில் மைதிலி புருஷோத்தமனும் வந்து சென்றுள்ளார்.
சென்னை வடபழனியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் நடிகர் ஜெய் வைத்து ஒரு கிலோமீட்டர் என்ற திரைப்படத்தினியக்குனராக இருப்பதாகவும் மைதிலி புருஷோத்தமன் ராம்குமார் உடன் நெருங்கி பழகி வந்துள்ளதாக ஜெயராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ராம்குமார் இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங் செலவிற்கு பணம் தேவைப்படுகிறது என்று மைதிலி புருஷோத்தமனிடம் கூறியதாகவும் மைதிலி புருஷோத்தமன் ஜெயராம் பாண்டியன் அலுவலகத்தில் இருந்த மூன்று லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ராம்குமார் இடம் கொடுத்ததாகவும் அதன் பின்னர் ஜெயராம் பாண்டியன் ராம்குமார் இடம் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியது 3 லட்சம் பணத்தை திருப்பி தருவதாகவும் ராம்குமார் பேசிய ஆடியோவை ஜெயராம் பாண்டியன் வெளியிட்டுள்ளார்.
ராம்குமார் மைதிலி புருஷோத்தமனும்
சென்னையில் ஒன்றாக தங்கி வந்துள்ளதாகவும் ராம்குமார் மைதிலி புருஷோத்தமனிடம் அவ்வப்போது பணம் வாங்கி வரச் சொல்லி சண்டை போடுவது வழக்கமாம். அப்படி ஒரு முறை சண்டை நடந்ததில் மைதிலி புருஷோத்தமனை ராம்குமார் அடித்து துன்புறுத்துவதாகவும் தன் உடம்பில் இருக்கும் காயங்களுடன் போட்டோ எடுத்து ஜெயராம் பாண்டியனுக்கு அனுப்பி வைத்ததாகவும்
உடனே ஜெயராம் பாண்டியன் ராம்குமார் இடமிருந்து மைதிலி புருஷோத்தமனை திருச்சிக்கு அழைத்து வந்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்ததாகவும் மைதிலி புருஷோத்தமனின் பெற்றோர்கள் தனியாக ஒரு வீடு எடுத்து தங்க வைக்க ஜெயராம் பாண்டியனிடம் கூறியதாகவும் அதன் பின்பு தனியாக ஒரு வீடு எடுத்து மைதிலி புருஷோத்தமனை தங்க வைத்துள்ளார் ஜெயராம் பாண்டியன். இந்த நிலையில் 29/01/23 அன்று மைதிலி புருசோத்தமன் தங்கிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார் வீட்டில் மைதிலி புருஷோத்தமமன் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் . அதன் பின்பு வீட்டில் உள்ளே பணம் நகையை இருக்கிறதா என்று தேடிப் பார்த்ததில் 10 லட்சம் பணம் மற்றும் நகைகள் காணவில்லை என்றும் மைதிலி புருஷோத்தமன் நகை பணத்துடன் காரில் தப்பி சென்றுவிட்டார் என்றும் ஜெயராம் பாண்டியன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக ஜேபி என்ற ஜெயராம் பாண்டியன் கூறிய போது ராம்குமார் இயக்கும் திரைப்படத்திற்கு பணம் தேவைப்படுவதால் மைதிலி புருஷோத்தமனிடம் பணம் தேவைப்படுகிறது என்று கூறியிருப்பார் அதனால் இந்த பணத்தை எடுத்து ராம்குமார் வசம் கொடுத்து இருப்பாரோ என்ற சந்தேகம் இருக்கிறது என்றும் இதற்கு முன்பு மைதிலி புருஷோத்தமன் மூன்று லட்சம் பணம் எடுத்துக் கொண்டு ராம்குமார் இடம் தான் கொடுத்தார் ஆகையால் தான் தற்போது இந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும் ராம்குமார் இடம்தான் கொண்டு போய் கொடுத்திருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று இளம்பெண்கள் திரைப்படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்களை குறி வைத்து பழகி அதன் பின்னர் நூதன முறையில் பணத்தை எடுத்துச் செல்வது வாடிக்கையாக இருப்பதாகவும் ஆகையால் திரைப்படத்துறையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் கவனமாக இருக்கவும் ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக காவல்துறையில் புகார் கொடுத்திருப்பதாகவும் ஜெயராம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் கூறும் குற்றச்சாட்டு மீது காவல்துறை உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை என்ன என்று தெரிய வரும்.