திறந்தவெளி கழிப்பிடமாக தற்போது மாறிவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் !??
கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம் .
தொற்றுநோய் பரவும் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள் .
நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!?
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .
மாநகராட்சி மையப்பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் உள்ளது சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் அருகே மாவட்ட ஆட்சியர் இல்லம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அரசு அதிகாரிகள் சங்க கட்டிடம் என பல்வேறு அரசு அலுவலகங்களும் உள்ளன .பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் பயன்படுத்துவதற்காக இலவச கழிப்பறை சுமார் ஐந்து உள்ளது. மேலும் தொண்டு நிறுவனத்தால் கடந்த சில வாருடங்களுக்கு முன்பு பெண்களுக்காக மட்டுமே கட்டப்பட்ட கழிப்பறை இரண்டு உள்ளது அதே போல் கட்டண கழிப்பறைகளும் உள்ளன . திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் வெளியூர் பயணிகள் வந்து செல்கின்றனர் . திண்டுக்கல் மாவட்டத்தில் உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானல்,தமிழக மக்கள் இஷ்ட தெய்வமான பழனி முருகன் கோயில் அதேபோல் திண்டுக்கல் அருகிலேயே சிறுமலை என சுற்றுலாத் தலங்களும் வழிபாட்டு தலங்களும் அமைந்துள்ளது. கொடைக்கானல் சுற்றுலா செல்பவர்களும் பழனி கோவிலுக்குச் செல்பவர்களும். தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய காய்கறி சந்தையான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை சந்தை. நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூக்கள் சந்தைக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திண்டுக்கல் பேருந்து நிலையம் வருவது வழக்கம் .
மேலும் கர்நாடகா ஆந்திரா உட்பட வட மாநிலங்களில் இருந்தும் சென்னை,சேலம், திருச்சி போன்ற வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்றாலும் அதேபோல் கம்பம் ,போடி,பெரியகுளம், கூடலூர் ,ராஜபாளையம்.,கொடைக்கானல்,கேரளா மாநிலம் மூணார். சபரிமலை, குமுளி தேக்கடி , இடுக்கி போன்ற பகுதிகளுக்கு பேருந்து மூலம் வந்தால் பேருந்து நிலையம் வந்து தான் பயணிகள் செல்ல முடியும் .
இப்படி அனைத்து பகுதியில் உள்ள பொது மக்களும் வந்து செல்லும் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பேருந்து நிலையம் துர்நாற்றம் தொற்று நோயை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது .
அதேபோல் பயணிகள் மாஸ்க் அணியாமல் முகத்தை கையால் மறைத்துக் கொண்டு செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை கட்டண கழிப்பறை பராமரிப்பு திண்டுக்கல் மாநகராட்சியால் சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் கழிவறைகள் அனைத்தும் துர்நாற்றம் வீசுகின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் இலவச கழிப்பறை பயன்படுத்துவது கிடையாது .அதேபோல் மாநகராட்சி சார்பாக மூன்று கட்டணக்கழிப்பறைகளும் ஏலம் விடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
ஆனால் அந்த கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த கட்டண கழிப்பறையில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் கழிவு நீர் வாய்க்காலில் அப்படியே திறந்து விடுவதால் கழிவுநீர் வாய்க்கால் முழுவதும் பேருந்துநிலையம் முன்பாகவே குளம்போல் தேங்கி உள்ளது .
கரூர் சேலம் காரைக்குடி நத்தம் போன்ற பகுதிகளுக்கு பேருந்து மூலம் வருபவர்கள் மற்றும் செல்பவர்கள் சிறுநீரால் கழிவுநீர் தேங்கி இருக்கும் இடத்தில் இறக்கி விடப்படுகின்றனர் .
அதேபோல் வெளியூர்களுக்கு பேருந்தில் செல்ல இதே இடத்தில் நின்று பேருந்தில் ஏற வேண்டிய அவல நிலை உள்ளது .
மேலும் பேருந்து நிலையம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பேருந்து பயணிகளால் கழிப்பறையாக பேருந்து நிலையம் பயன்படுத்தி வருகின்றனர் .
அதிலும் நீண்ட பயண பேருந்துகளில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பேருந்தை விட்டு இறங்கிய உடன் நடந்துசெல்லும் பகுதியில் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துவதால் ஆங்காங்கே குளம் போல் சிறுநீர் தேங்கி சுகாதாரமற்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆனால் இதை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது கிடையாது .பல்வேறு அதிகாரிகள் வெளியூரிலிருந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்களில் பணி செய்கின்றனர் .அதேபோல் தற்போது மாணவ மாணவிகளுக்கும் பள்ளிகள் திறந்து உள்ளதால் மாணவ மாணவிகளும் கிராமப்புறங்களில் இருந்து பேருந்து நிலையம் வந்து இறங்கி செல்கின்றனர் .இப்படிப்பட்ட சூழ்நிலையில் பேருந்து நிலையம் பகுதிகளில் குளம் போல் தேங்கி நிற்கும் சிறுநீர் மற்றும் அதேபோல் கட்டண கழிப்பறை மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் போன்றவைகளால் பேருந்து நிலையம் முழுவதும் மிகப்பெரிய அளவில் துர்நாற்றம் வீசுகிறது இதுபற்றி சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் கூறும்போது திண்டுக்கல் சுற்றிலும் மலைகள் சூழ்ந்த பகுதி ஆகும் அழகான பகுதியாகவும் உள்ளது ஆனால் அதை கெடுக்கும் வண்ணம் திண்டுக்கல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையம் சுகாதாரமான முறையில் கழிப்பறைகள் கிடையாது. இதன் காரணமாகவே பொது மக்களால் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர் அருகிலேயே புதிதாக கழிப்பறை ஒன்றும் கட்டப்பட்டு உள்ளது .
தற்போது வரை திறக்கப்படாமல் நான்கு வருடங்களாக பூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது வைரஸ் தொற்று காலகட்டமான இந்த சூழ்நிலையில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி பேருந்து நிலையத்தை தூய்மையாக வைக்காமல் நோய்களை உருவாக்கும் பேருந்து நிலையமாக தற்போது மாற்றியுள்ளது மிகப்பெரிய கவலையளிக்கிறது ஆகவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தை பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் சுத்தமாகவும் அதேபோல் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கூறினார்
ஆட்டோ ஓட்டுனர் கூறும்பொழுது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சியால் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றது ஆனால் விரிவாக்கம் செய்யப்பட்ட பேருந்து நிலையம் தற்போதுவரை திறக்கப்படாமலும் அதேபோல் கழிப்பறைகளும் திறக்கப்படாமல் உள்ளது இங்கு உள்ள கழிப்பறை இழுத்துச் சென்றால் கண்டிப்பாக பேருந்து பயணிகள் மட்டுமல்லாமல் யார் சென்றாலும் நோய்த் தொற்று ஏற்படுவது உறுதி இங்குள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குளம்போல் தேங்கி உள்ளது இதை எந்த ஒரு மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் ஆய்வு செய்வது கிடையாது கட்டண கழிப்பறை என்ற பெயரில் கட்டணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு கட்டணக் கழிப்பறையின் சுகாதாரமான முறையில் உள்ளது பேருந்து நிலையத்தில் சுற்றி பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கழிப்பறை ஆகவே பேருந்து நிலையம் முற்றிலுமாக மாறிவிட்டது இதை எந்த ஒரு அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பது கிடையாது பல்வேறு அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர் அதேபோல் மாநகராட்சி அதிகாரிகள் வருகின்றனர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அலுவலகம் பேருந்து நிலையத்தினுள் உள்ளது அப்படி இருந்தும் எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்ளாததால் பேருந்து நிலையம் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையமாகும் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பேருந்து நிலையமாக உள்ளது இங்கு மாலை நேரங்களில் யாரும் இருக்கவே முடியாது அந்த அளவிற்கு கொசுக்கள் தொல்லை உள்ளது இதற்கு முக்கிய காரணமும் இங்கு தேங்கும் கழிவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தான் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் நடத்துநர் என அனைவரும் பேருந்து நிலையம் பகுதிகளை கழிவறையாக மாற்றி உள்ளனர் ஆனால் இங்கு அனைத்து அதிகாரிகளும் வருகின்றனர் இதனால் தற்போது பேருந்து நிலையம் நோயை உண்டாக்கும் பேருந்து நிலையமாக உள்ளது மேலும் தொண்டு நிறுவனத்தால் இரண்டு கழிப்பறைகள் பெண்களுக்காக கட்டப்பட்டது இந்த கழிப்பறைகள் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வினை அவர்களால் திறந்து வைக்கப்பட்டது ஆனால் ஒரு சில தினங்களில் மூடப்பட்ட கழிப்பறைகள் தற்போது வரை திறக்கப்படவில்லை இதற்கு முக்கிய காரணம் கட்டண கழிப்பறை ஏலம் எடுத்தவர்கள் புதிதாக பெண்கள் கட்டிய கழிப்பறைகளை திறக்க விடாமல் பூட்டு போட்டு வைத்துள்ளனர் மாநகராட்சி அதிகாரிகளால் பேருந்து நிலையம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் கழிவு நீர் ஆக்கிரமிப்பு தூய்மை என்பது கேள்விக்குறியாகும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் என ஒட்டுமொத்த சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கி பேருந்து நிலையம் உள்ளது .ஆகவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநில அரசும் உடனடி நடவடிக்கை எடுத்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அனைவரும் எந்த வித அச்ச மின்றி தொற்று நோய் ஏற்படாது என்ற எண்ணத்துடன் தூய்மையாக புதுப்பொலிவுடன் பேருந்து நிலையத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.