தேனிமாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் 50 லட்சம் ஒப்பந்தம் வழங்க 15 லட்சம் லஞ்சம் கேட்டு பொறுப்பு உதவி பொறியாளர் பேசிய அதிர்ச்சி ஆடியோ!வேடிக்கை பார்க்கும் தேனி மாவட்ட நிர்வாகம்!?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் 50 லட்சம் ரூபாய் ஒப்பந்த பணிக்கு 30 சதவீதம் 15 லட்சம் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியாளரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார்!! தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி இரவு நேரங்களில் தேனி மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்திக்க காரணம் என்ன!?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், கடந்த மாதம் ஆதிதிராவிடர் நல மாணவ மாணவியர் விடுதிகளை பராமரிப்பதற்காக, தேனி மாவட்டத்தில் உள்ள ஒன்பது விடுதிகள், பராமரிப்பு மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தேனியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிட நலத் துறையில், கூடுதல் பொறுப்பு உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் மூலம், ஒப்பந்தங்கள் கோரப்பட்டு ஒப்பந்ததாரருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஒப்பந்தம் நடைபெற்றதாகவும், மேலும் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் யார் யாருக்கு எவ்வளவு வேலை எவ்வளவு ஒதுக்கீடு என பகிர்ந்து வழங்கப்பட்டதாகவும், மேலும் ஒப்பந்தங்கள் அனைத்தும் மதுரை திருமங்கம் அதிமுக பிரமுகர் ஒருவர் தான் பகிர்ந்து அளித்ததாகவும்,இந்த ஒப்பந்தங்களில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த இந்த முறைகேடான ஒப்பந்தத்திற்கு தேனி ஆதிதிராவிடர் நலத்துறையில் பொறுப்புப் பணி வகித்து வரும், அரசு உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் தான் காரணம் என்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்றும் முறைகேடாக ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
யார் அந்த அதிமுக பிரமுகர் ?இவருக்கும் தேனி மாவட்ட ஆதிதிராவிட நலத்துறைக்கும் என்ன தொடர்பு??
தேனி மாவட்ட நிர்வாகமும், இந்த 50 லட்சம் ரூபாய் டெண்டரின் உண்மைநிலையினை ஆய்வு மேற்கொண்டு, முறையான ஒப்பந்ததாரர்களுக்கு தான் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட, பள்ளி மாணவ,மாணவியர்களின் விடுதிகளை களஆய்வு செய்திட முன்வரவேண்டும் என்பது அப்பகுதிவாழ் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் அப்பகுதிவாழ் பிற ஒப்பந்தாரர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
முறைகேடாக டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, நான்கு ஒப்பந்ததாரர்கள் ஆதாரத்துடன் முறையான விசாரணைக்காகவும், துரித நடவடிக்கைக்காகவும், தேனி மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை முறைகேடாக நடந்த ஒப்பந்தத்தின் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு கொடுத்த ஒப்பந்ததாரர்கள்புலம்பித் தவிக்கின்றனர், புகார்தாரர்கள்….. நடவடிக்கை எடுக்காத மர்மம் என்ன? திமுக கட்சி கொடியிடன் காரில் பயணிக்கும் தேனி பொறுப்புப் பணியில், இருந்து வரும் அரசு அலுவலரான, உதவிப்பொறியாளரின் பவர்புல்லான ஆக்டிவ்வா?! அல்லது ….., தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரின் ஆசி, மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு கிடைக்கவில்லையா? தேனி மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநரின் கடைக்கண் பார்வை பட்டால் தான், ஆதிதிராவிடர் நலத்துறை வளர்ச்சிக்கான திட்டப்பணிகளையும், ஆய்வுப்பணிகளையும், முறைகேடு தொடர்பான புகார் மீதும்,, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா?? ஆய்வு மேற்கொள்வாரா???என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்கின்றனர் ஒப்பந்ததாரர்களும் சமூக ஆர்வலர்கள்.
. தேனி மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிந்தவுடன் தினந்தோறும் இரவு 9 மணிக்கு மேல் தனது எந்தெந்த கோப்புகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கையெழுத்து இட வேண்டும், எந்தெந்த பணிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும், எந்தெந்த அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும், எந்தெந்த இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தகுந்த அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கி வருவதாகவும், அதன்படியே, மாவட்ட ஆட்சித்தலைவர், மறுநாள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
நேர்மையான அமுதா ஐஏஎஸ் நேரடிப் பார்வையில் விசாரணை நடத்தி தமிழக முதல்வருக்கு அறிக்கை அனுப்பினால் மட்டுமே தேனி மாவட்டத்திற்கு டெண்டர் முறைகேடு தொடர்பாக, முறையான நடவடிக்கை எடுத்திட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு உரையில் இரண்டு கத்தி போல் தேனியில்…… ஆக்டிங் ஆட்சியராகும், மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் உச்சத்தில்…..
இரட்டைத் தலைமை, அச்சத்தில்….. அதிகாரிகள் என்ற அவலநிலையினை போக்கிட, தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை, சமூக ஆர்வலர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.