தேனி கைலாசநாதர் கோயிலில் தீபம் ஏற்றுவதில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் ஓபிஎஸ் மகன் இடையே மோதலால் அரசியல் களமாக மாறிய கோவில் வளாகம்!

கைலாநாதர் திருக்கோவிலில் தீபத்திருநாள் விழாவில் https://youtu.be/nKxMshDWm3c ஓபிஎஸ் மகன் பிரதீப்புக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே மோதல் வீடியோ!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் தீபத் திருவிழாவில் அரசியல் கட்சியினர் அரசியல் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கைலாசபட்டியில் கைலாசநாதர் கோயிலில் ஊர்ப் பொதுமக்கள் மற்றும் பராமரிப்பு குழுவினர், பல ஆண்டுகளாக
நடத்தி வருகின்றனர். நேற்று கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வில் தீபத்தை ஏற்ற சென்ற ஓபிஎஸ் மகன் பிரதீப் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் அங்கு ஓபிஎஸ் மகன் பிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை அர்ச்சகர் இடம் கையில் கொடுத்து ஏற்றச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்ததாகவும் இதனால் இரண்டு வேரின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டவுடன் திமுக நிர்வாகி அர்ச்சகரின் வேஷ்டியை பிடித்து இழுத்ததாகவும், அதிமுகவினர், திமுகவினரை வசைபாடுவதும், அரசியல் களமாக மாறியது.

ஊர் பொதுமக்கள் சாதி வேறுபாடு இல்லாமல் வழிபடும் தீபத்திருநாள் அன்று அரசியலாக்கப் பட்ட சம்பவம் பெரியகுளம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதி வேறுபாடு இல்லாமல் இறைவனை வழிபட்டு வருகின்றனர் .ஆனால் இங்கேயும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் நான் சொல்வதை தான் செய்ய வேண்டும் என்று அரசியல் செய்யும் காரணத்தினால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பது வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.