மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்! தினந்தோறும் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்வாரா?

தேனி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வளாகத்தில் இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்வாரா?

தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்தேனி மாவட்ட ஆட்சியராக சாஜிவனா பொறுப்பேற்று ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது தேனி மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

02/03/2023 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் தேனி மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கை வசதி மற்றும் கழிவறை சுற்றுப்புற சுகாதாரம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு போதுமான வசதி இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டார்

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியர்


ஆனால் மாவட்ட ஆட்சியர் இருக்கும் அலுவலக வளாகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறைகளில் பல மாதங்களாக பயனற்று கிடக்கும் டேபிள் சேர் மற்றும் கொரோனா காலத்தில் பயன்படுத்தும் சேனிடசர் பாட்டில்கள் அது மட்டும் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த வைத்திருக்கும் குடிநீர் ஆட்சியாளர் வளாகத்தில் பல மாதங்களாக பராமரிப்பு இன்று இருக்கும் செயற்கை நீரூற்று மற்றும் தீ விபத்து ஏற்படும் போது பயன்படுத்தும் கேஸ் இல்லாத சிலிண்டர் அது மட்டும் இல்லாமல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செல்ல வழி இல்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அரசு வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனியார் வாகனத்தை நிறுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து உள்ளனர். பல நாட்களாக சுகாதாரமற்ற நிலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர் இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கொசு அதிகமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியிலுக்கு வரும் பொதுமக்களுக்கு கொசு கடிப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இது சம்பந்தமாக இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியாளரும் சரி தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் இந்த அவல நிலையை பற்றி கவலைப்படாமல் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் நியாய விலைக்கடை கடைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொள்வது

ஆண்டிபட்டி நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியாளர் ஆய்வு மேற்கொண்ட போது

புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது இது அனைத்தும் ஒரு கண்துடைப்பு என்றும் தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அவல நிலையை புகைப்பட ஆதாரங்களுடன் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தேனி மாவட்ட ஆட்சியர்

சில தினங்களுக்கு முன்பு
தேனி புதிய பேருந்து நிலையத்தை திடீரென ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அப்புறப்படுத்தவும் பேருந்து நிலையம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டது. தேனி பேருந்து நிலையத்தை சுகாதாரமான முறையில் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையிலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஆக்கிரமிப்பிலும், பூங்கா பராமரிப்பு இல்லாமலும் காணப்பட்டது.வாகனங்களை அப்புறப்படுத்தி பேருந்து நிலையத்தில் துப்புரவு பணிகளை துரிதப்படுத்தி பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். மேலும் பேருந்து நிலைய கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுப் பொருட்கள் திறந்த நிலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடை உரிமையாளர்களிடம் உணவு பொருட்களை மூடி வைத்து விற்பனை செய்யவும் ஆட்சியர் அறிவுறுத்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ மாவட்ட ஆட்சியாளர் இருக்கும் வளாகம் மற்றும் அறைகள் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை வைத்து தேனி மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button