மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்ட காவல்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் சவாலாக இருக்கும் கந்துவட்டி கும்பல்!!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி அதிர்ச்சி சம்பவம்!

தேனி மாவட்ட காவல்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் சவாலாக இருக்கும் கந்துவட்டி கும்பல்!!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி அதிர்ச்சி சம்பவம்!

தேவாரம் கிணற்றில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தற்கொலை முயற்சி!தேனி மாவட்டம், தேவாரம் ஓட்டிய பொட்டிபுரம் கிராமத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்துவிட்டதாக பொது மக்கள் தகவல் கொடுத்து உள்ளனர்.

தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி காப்பாற்றும் முயற்சியில்


உடனே சம்பவ இடத்திற்கு சென்ற, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்டுத் துறையினர் மற்றும் 108 அவசர ஊர்தி துறையினரின் பெரும் முயற்சியால், சுமார் ஒரு மணி நேர மீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, கிணற்றில் விழுந்தவர்கள் ஐவரையும் மீட்டு, போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஐவரில் கணவன், மனைவி, ஆறு வயது மகனும் உயிருடன் மீட்கப் பட்டதாகவும், 3 வயது, 2வயது பச்சிளம் பெண் குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தொடர்பாக, போடிநாயக்கனூர் புறநகர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீஸார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததற்கான காரணம் குடும்பப் பிரட்சனையா?, அல்லது கடன் பிரட்சனையா??, கந்துவட்டி கும்பலின் தொல்லையா???, அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம்???? என்பது, முறையான, முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும். எது எப்படியானாலும், தமிழ்நாடு அரசும், தேனி மாவட்ட ஆட்சித்துறை நிர்வாகமும், தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகமும், மாவட்டத்தில் பரவலாக நிலவி வருகின்ற கந்துவட்டி பிரட்சனை தொடர்பாக, துரித நடவடிககை எடுத்திட, சட்டம்&ஒழுங்கு காவல் நிலையங்களின் அலுவலர்களிடம் அறிவுறுத்திடவும், குடும்பப் பிரட்சனை தொடர்பாக, அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் அலுவலர்களிடம் அறிவுறித்திடவும், துரிதப்படுத்திடவும் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும், உள்ளது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button