மாவட்டச் செய்திகள்

தேனி மாவட்ட புதிய ஆட்சியாளராக பொறுப்பேற்ற முதல் நாளே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்க சுணக்கம் காட்டியதாக குற்றச்சாட்டு!

பொறுப்பேற்ற முதல் நாளிலே பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுப்பதில் சுனக்கம் காட்டிய தேனி மாவட்ட புதிய ஆட்சியாளர்!

தேனி மாவட்ட புதிய ஆட்சியாளர் ஷஜீவனா ஐஏஎஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 மாவட்ட ஆட்சியாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில் முக்கியமாக தேனி மாவட்ட ஆட்சியாளராக இருந்த முரளிதரன் இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியாளராக பணிபுரிந்த ஷஜிவனா IAS பதவி உயர்வு பெற்று தேனி மாவட்ட ஆட்சியராக அறிவிக்கப்பட்டார்.


தேனி மாவட்ட ஆட்சியராக ஆர்.வி. ஷஜீவனா ஐ ஏ எஸ் 5/02/2023 அன்று மதியம் 1.35 மணி அளவில் தேனி  மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்தார் .
தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன், புதிதாக பொறுப்பேற்க இருந்த மாவட்ட ஆட்சியாளருக்கு புத்தகம் பரிசளித்து வரவேற்று மாவட்ட ஆட்சியாளரின் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பின் நல்ல நேரம் பார்த்து சரியாக  1.37 மணிக்கு தேனி மாவட்டத்தின் 19 வது ஆட்சியாளராக  பொறுப் பெற்றுக் கொண்டார்.

புதிய மாவட்ட ஆட்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட சஜீவனா ஐ ஏ எஸ்


அதன் பின் தேனி மாவட்ட முக்கிய அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளரிடம் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வாழ்த்துக்களை  கூறுவார்கள்.
ஆனால் தேனி மாவட்டத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் முன்பே அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.அதில் முக்கியமாக
திமுக கட்சியின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ் செல்வன் பூங் கொத்து தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் புதிய மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து வாழ்த்து கூறியபோது.
தேனி மாவட்ட தேனி பிசி பட்டி பேரூராட்சி தலைவர் மாவட்ட ஆட்சியாளருக்கு  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த போது

முறைப்படி மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள  மினி மீட்டிங் காலில்  பத்திரிகையாளர்களை சந்தித்து தேனி மாவட்ட வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் செயல்பட போகிறோம்  என்பதை தெரிவிப்பார்கள்.

ஆனால் புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியாளர் ஷஜிவனா பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியாளரிடம் பத்திரிகையாளர்கள் நீங்கள் பத்திரிககையாளர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளனர். அந்த நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் மாவட்ட ஆட்சியாளர் பேட்டி அளிப்பது பற்றி இரு வேறு கருத்துக்களைத் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
அதன் பின்னர் வேண்டா வெறுப்பாக புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட தேனி மாவட்ட ஆட்சியாளர் பத்திரிகையாளருக்கு ஒரு சில நிமிடங்கள் பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது பேசிய புதிய மாவட்ட ஆட்சியாளர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டங்களும் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கள ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்,  தகுதியான எந்த ஒரு பயனாளியும் விடுபடாமல் அனைவருக்கும் திட்டங்கள் சென்றடையும் வகையில் அனைவரும் முனைப்புடன் பணிபுரிய வேண்டும் எனவும் முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அரசின்  திட்டங்கள் உரியவர்களுக்கு கிடைத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்களையும் ஓருங்கிணைத்து பணிபுரிய செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும், தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் சென்றடையும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அரசின் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி  சக பணியாளர்களையும் களத்திற்கு அனுப்பி, திட்டங்களை  சிறப்புடன் செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்வது தனது முதற்பணி எனவும் தெரிவித்தார்.
எது எப்படியோ தேனி மாவட்டத்தில் இதுவரை அடித்தட்டு  மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே பொறுப்பேற்ற முதல் நாளிலே பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி கொடுப்பதில் சுனக்கம் காட்டிய மாவட்ட ஆட்சியாளரின் செயல்பாடு வருந்தத் தக்கதாக அமைந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தேனி மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பொது மக்களின் பிரதிநிதிகளாக பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் சொல்லும் மாவட்ட ஆட்சியாளராக இருக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button