தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் குதிரை சிலை என்று
நந்தி சிலையை வைப்பதா !? தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா நிர்வாகிகள் புகார்!

குதிரை சிலை என்று
நந்தி சிலையை வைப்பதா !? சிலையை அகற்ற தேனி மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சி கோரிக்கை!
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி அல்லி நகரத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் ஆலயம் தோன்றியதாகவும் தற்போது அந்த ஆலயம் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் அல்லிநகர கிராம அய்யனார் காவல் தெய்வத்தை வணங்கி வருகின்றனர். முக்கியமாக, கருவரைக்கு மேற்புறம் திறந்தவெளியில் தான் வணங்கி வருவதாக கூறப்படுகிறது தற்போது முன்னோர்கள் பின்பற்றிய வழக்கப்படி வழி நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதை பின்பற்றியே இந்து கடவுள்களை வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு தேனி-அல்லிநகரம் கிராம கமிட்டியால் சுவாமி வீரப்ப அய்யனாரின் கருவறைக்கு எதிரே நந்தி பீடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நந்தி பீடம் சுமார் 70 லட்ச ரூபாய் செலவு செய்து மிக பிரம்மாண்டமான முறையில் வீரபாண்டி அருகே இருந்து மேளதாளங்களுடன் கொண்டு வந்து வீரப்ப அய்யனார் கோவிலில் அமைக்கப்பட்ட பீடத்தின் மேலே கிரேன் மூலம் தூக்கி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் வீரப்பா அய்யனார் ஆலயத்தில் குதிரை வாகனம் வைப்பதற்கு பதிலாக நந்தி சிலையை வைத்துள்ளதாகவும்.

உடனே நந்தி சிலையை அகற்றி அந்த இடத்தில் குதிரை சிலையை வைக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.


இதுகுறித்து, ஜோதிட வல்லுனர்களிடமும் ஆன்மீக குருமார்களிடமும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க வீரப்ப அய்யனார் கோவிலில் நந்தி சிலை வைப்பது குறித்து சிவசேனா சார்பாக ஆன்மீக பெரியோர்களிடம் கருத்து கேட்ட பொழுது, அய்யனார் என்பவர் பாதுகாவலர் என்றும், அவரின் முக்கியமான வாகனம் என்பது ( வாஜி ) அதாவது குதிரை வாகனம், இது மக்களின் பாதுகாப்பிற்கும் ஊர் பாதுகாப்பிற்கும் பாதுகாக்கும் பாதுகாவலர் வீரப்ப அய்யனார்சாமி. அதனால்தான் வீரப்பஅய்யனார் என்று கூறப்படுகிறது. காத்தல் தெய்வம் மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றுதான் வீரப்ப அய்யனார் காவல் தெய்வம் முன்னால் நந்தி அமைப்பது தவறுஎன்றும் இது ஆகம விதிமுறைக்கு முரணாக இருப்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே இந்த ஸ்தலம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தலமாகும்.
இந்த ஸ்தலத்தின் வளர்ச்சிப் பணிக்கு எந்த ஒரு முயற்சி மேற்கொண்டாலும் விதிமுறைகள் உள்ளது என்பதை கடைப்பிடிக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவ சேனா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் போது இந்தக் கோயிலின் செயல் அலுவலர் அனுமதி இல்லாமல் எப்படி நந்தி சிலை வைக்கப்பட்டது. கோவில் நிர்வாக செயல் அலுவலரின் கவனக்குறைவால் நடந்ததாக இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோவிலில்
நந்தி சிலையை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை முடிவெடுத்த நிலையில் கிராம கமிட்டி மற்றும் கிராம பொதுமக்கள் கோவிலில் நிறுவிய நந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று கிராம கமிட்டி மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதன் பின்பு அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு வட்டாட்சியர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் கிராம கமிட்டி யினரை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் கிராம கமிட்டியினர் தற்போது நந்தி சிலையை அகற்ற வேண்டாம் அந்த சிலையை சுற்றி பதாகைகள் வைத்து மறைத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் அதன் பின்பு இந்து சமய அறநிலைத்துறை வல்லுநர்களை அழைத்து வந்து ஆகம விதிகள் படி நன்றி சிலை வைக்கப் பட்டிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளட்டும் அதுவரை நாங்கள் நந்தி சிலைக்கு எந்தவித பூஜையும் மேற்கொள்ள மாட்டோம் . அதையும் மீறி யாராவது நந்தி சிலைக்கு பூஜை செய்வதாக வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அல்லிநகரம் கிராம கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பாக காவல் நிலையத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டது.

எது எப்படியோ இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வீரப்ப அய்யனார் கோவிலில் பக்தர்கள் நிம்மதியாக வந்து வழிபடுவதற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் நந்தி சிலையா!? குதிரை வாகனமா!? இந்து சிவனடியார்கள் அமைப்பா சிவ சேனா கட்சி அமைப்பா!? என்பதை பொதுமக்கள் முன்னிலையில் விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வல்லுநர்கள் முடிவெடுப்பார்கள் என்பதை நம்பி பொறுத்திருந்து பார்ப்போம்!