பல கோடி மதிப்புள்ள நகை மற்றும் ஒரு கோடி பணம் கொள்ளையடிக்க சதி திட்டம்!?

பல கோடி பணம், நகை இருந்த கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க சதி திட்டம்!? தப்பியது எப்படி!?

ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் பொட்டகவயல் கிராமத்தில்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் Q1266செயல்படுகிறது. இந்த வங்கியில்
32 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர்.அடகு வைத்த 452 பவுன் தங்க நகைகள், பல லட்சம் ரொக்கம் இருந்துள்ளது.. இரவு 10 மணிவரை இருந்த வங்கி செயலாளர் நாகராஜ் வங்கியை பூட்டுமாறு நண்பரிடம் சொல்லியும் பூட்டாமல் சென்றுள்ளதால் இரவு 10:00 மணி வரை வங்கி பூட்டாமல் இருப்பதை பார்த்த பொதுமக்கள் ஊராட்சி தலைவர் முகமது ஹக்கீமிடம் தெரிவித்தனர். உடனே மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனுக்கு தெரிவித்தார். அதன் பின்பு நள்ளிரவு 12:00 மணிக்கு அங்கு வந்த செயலாளர் நாகராஜ் வங்கியை பூட்டினார். அடுத்த நாள் காலையில் வங்கிக்கு சென்று ஆய்வு செய்த .இணை பதிவாளர் முத்துக்குமார். பீரோவில் இருந்த ரூ.88 ஆயிரம் அப்படியே இருந்தாகவும் லாக்கரை தலைவர் வந்தவுடன் லாக்கரை திறந்து ஆய்வு செய்த பின்பு செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்பகுதியில் இருக்கும் ஒரு சில சமூக ஆர்வலர்கள் கூறும் போது வேண்டும் என்று திறந்து வைத்து பணம் முறைகளை கொள்ளையடிக்க சதித் திட்டம் செய்ய கூட்டு மோசடி செய்ய இந்த சம்பவம் நடந்துள்ளதாக சந்தேகத்துடன் கூறுகின்றனர் .
அதற்கு காரணம் வேறு நபர்களை வைத்து பணம் நகைகளை கொள்ளையடித்து செல்ல இந்த சதித்திட்டம் செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டை வைக்கின்றனர். ஆகையால் அதிகாரிகள் இது சம்பந்தமாக புலன் விசாரணை நடத்தி உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் அதுமட்டுமில்லாமல் இதுபோன்ற அலட்சியப் போக்கை கடைபிடித்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் செயலாளர்கள் அனைவரையும் துணை ரீதியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கிறது.