தொழிற்சாலை அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்!
மதுரை மாவட்டம்
T. வாடிப்பட்டி வட்டம்
செமினிப்பட்டி கிராமத்தில் இயற்கைக்கு மாறான தொழிற்சாலைக்கு போடப்பட்டக் கட்டிட ரசீதை பொதுமக்கள் எதிர்ப்பு
தெரிவித்தக் காரணத்தினால் ஊராட்சி சிறப்புக் கூட்டத்தில் ரசீதை ரத்துசெய்து தீர்மானம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஏற்றப்பட்டது .
அதை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் T.வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்
அவர்களிடம் நேரிலும் பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கப்பட்டது .
கிராமத்தின் சார்பாக அந்த தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி மூன்றாம் கட்ட போராட்டத்தை கிராம பொதுமக்கள் சார்பாகவும் மற்றும் இயற்கை பாதுகாப்பு குழுவினர் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் ,மற்றும் மாவட்ட வருவாய்அலுவலர் அவர்கள்,
வாடிப்பட்டி வட்டாட்சியர் அவர்கள், வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி துறை அலுவலர் அவர்கள், ஆகிய அரசு அதிகாரிகளை நேரில் சந்தித்து
மக்கள் கோரிக்கையை முன்வைத்தார்கள்.
கோரிக்கையை பெற்றுக் கொண்ட அதிகாரி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
செமினிப்பட்டி கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி இயற்கைக்கு மாறான தொழிற்சாலைக்கு அனுமதிப்பது இல்லை என்று
கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர் .
தமிழக அரசும் , சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மற்றும் அமைச்சர் அவர்கள் கூடுதல் கவனம் எடுத்து கிராம பொதுமக்கள் அச்சத்தை நீக்கி விடியல் தரும் நல்லாட்சியை உறுதி செய்ய வேண்டும் என்று கிராமத்தின் சார்பாக கேட்டுக்கொண்டனர்
○reportervision@gmail.com
○www.reportervision.com
○ஜூலை19/07/21