அரசியல் காமெடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
வலுத்து வரும் உட்கட்சி மோதல்….
தள்ளாடும் அதிமுக தலைமை….
தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அம்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர்
வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் !
எதிர்ப்பு தெரிவித்த அம்பத்தூர் அதிமுக நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
வலுத்து வரும் உட்கட்சி மோதல்….
தள்ளாடும் அதிமுக தலைமை….
தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அம்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர்
வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் !
எதிர்ப்பு தெரிவித்த அம்பத்தூர் அதிமுக நிர்வாகிகள் சுயேச்சையாக போட்டி!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

தமிழகத்தில் நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் தற்போது அதிமுக &திமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் பல இடங்களில் அதிமுக கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதற்கு அதிமுகவின் நிர்வாகிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் அதிமுக கட்சியில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். முக்கியமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பத்தூரில் 79 இல் இருந்து 92 வரை 13-வார்டு களுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் வேட்பாளர்களை நியமித்து பட்டியலை வெளியிட்டது அம்பத்தூர் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது . முன்னாள் எம்எல்ஏ உன் அதிமுகவின் மாவட்டச் செயலாளரான அலெக்சாண்டர் தற்போது அம்பத்தூர் 89வது வார்டில் வேட்பாளராக களமிறங்குகிறார். இதனால் அனைத்து நிர்வாகிகளும் சேர்ந்து அதிமுக கட்சித் தலைமைக்கு பல குற்றச்சாட்டுகளை கொடுத்துள்ளனர். முக்கியமாக வார்டு கவுன்சிலர் ஸீட் ஒதுக்கியதில் இரண்டு பெண்களுக்கு முக்கியமாக கட்சியில் அனுபவம் இல்லாத அந்த பெண்களுக்கு சீட் கொடுத்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் ஒரு பெண் தன் கணவன் தண்ணீர் கேன் போடுபவர் என்றும் அவருக்கு கட்சியில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றும் அந்தப் பெண்ணுக்கும் மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டருக்கும் என்ன தொடர்பால் இந்த சீட் கொடுத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது !அதுமட்டுமில்லாமல் உமாபதி என்ற ஒரு பெண்ணுக்கும் சீட் கொடுத்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது .அந்தப் பெண்ணுக்கும் மாவட்ட செயலாளர் அலெக்சாண்டருக்கும் என்ன தொடர்பு உள்ளது என்றும் தெரியவில்லை! உமாபதி என்ற பெண் கவுன்சிலராக நிற்பதற்கு பத்து லட்ச ரூபாய் கடனாக மாவட்ட செயலாளர் அலெக்சாண்டரே கொடுத்ததாகவும் தகவல் வந்துள்ளது.அந்த பத்து லட்ச ரூபாய்க்கு உமாபதி என் வீட்டின் பத்திரத்தை வாங்கி வைத்துள்ளார் மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர் என்றும் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது. முக்கியமாக மாவட்டச் செயலாளர் சீட்டு வழங்கியுள்ள இரண்டு பெண்கள் மீதும் அம்பத்தூர் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை என்ற தகவல் வந்துள்ளது. ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் அலெக்ஸ் அவர்களை எதிர்த்து ஒரு கோஷ்டி தனியாக அதிமுக தலைமை கழகத்தில் எம்எல்ஏ சீட் கேட்டதாக தகவல் வந்தது. ஆனால் அம்பத்தூர் மாவட்டச் செயலாளர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கும் நெருங்கிய சொந்தம் என்பதால் ஓபிஎஸ் அவர்கள் மாவட்ட செயலாளருக்கு எதிராக சீட் கொடுக்க மறுத்து விட்டார் என்ற தகவல் வந்தது. ஏனென்றால் அம்பத்தூர் பத்து வருடங்களுக்கு முன்பு பாமகவின் கோட்டையாக இருந்து உள்ளது .அதன் பின் பாமகவின் கோட்டையை உடைத்து அதிமுகவின் கோட்டையாக மாற்றியுள்ளனர். இதற்கு அடிமட்ட தொண்டர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பாடுபட்டு உழைத்து உள்ளதாகவும் தற்போது மாவட்ட செயலாளராக இருக்கும் அலெக்ஸ் அம்பத்தூர் அதிமுகவின் கட்சியில் உள்ள எந்த நபரையும் அழைத்துக் கலந்து சிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அவருக்கு அம்பத்தூரில் எதிர்ப்புகள் வலிக்கிறது என்றும் இப்படியே சென்றால் அம்பத்தூர் திமுகவின் கோட்டையாக மாற வாய்ப்புள்ளது என்றும் ஜெயலலிதா அவர்கள் இருந்திருந்தால் இது போன்ற எதிர்ப்புகளை ஒருபோதும் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்திருக்க மாட்டார் உடனே மாவட்டச் செயலாளரை நீக்கி இருப்பார் என்று ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகின்றனர் அதிமுக நிர்வாகிகள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் எடப்பாடி தரப்பினரிடம் ஒரு பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.!தற்போது அம்பத்தூரில் 13 வார்டுகளிலும் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. எது எப்படியோ தற்போது பாஜக பாமக அதிமுக திமுக நான்குமுனை போட்டியில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர் கட்சிக்கு உழைப்பவர்களை மறந்து செயல்பட்டு வருவது வேதனையாக இருக்கிறது என்று அம்பத்தூரில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது! எது எப்படியோ இரட்டை தலைமை யில் தொங்கிக்கொண்டிருக்கும் அதிமுகவின் பிரச்சனையை தீர்க்க போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வியுடன் அடுத்தப் பதிவில் தொடர்ச்சி

அதிமுக கட்சிக்கு உழைத்தவர் எங்கே??
மக்களுக்கு பணி செய்தவர் எங்கே??
இப்போது ஓட்டு கேட்பவர் யார் இங்கே??
குறுக்கு வழியில் ஓட்டு கேட்டு தேடி வருவார் இங்கே!! என்று
உண்மையை உரக்க சொல்லும் உண்மையான அதிமுக தொண்டன் (செல்வராஜ் அதிமுக)சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த போது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button