மது போதையில் ஓட்டிச் சென்ற வர்களின் இரு சக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சோக சம்பவம்!டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி ஊராட்சிக்குட்பட்டு டாஸ்மார்க் கடை என் 85 26 அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக்கில் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு மதுப்பிரிவீர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதால் அவ்வழியில் செல்லும் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படதாவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூலித் தொழிலாளி நடந்து சென்ற போது மது போதையில் வாகனத்தை ஒட்டி வந்த நபர்கள் அவர் மீது மோதிவிட்டு தப்பி சென்றதாகவும் இரண்டு சக்கர வாகன மோதியதில் படுகாயம் அடைந்த அந்த கூலித் தொழிலாளி உயிரிழந்ததாகவும். உயிரிழந்த கூலித் தொழிலாளி மனைவி மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
உயிரிழந்த கூலித் தொழிலாளியின் மனைவி கண்ணீர் மல்க பேசிய போது என் கணவர் கூலி வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது மது போதையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர்கள் மோதி விட்டு தப்பிச் சென்று விட்டார்கள் பலத்த காயம் அடைந்த என் கணவர் உயிரிழந்து விட்டதாகவும்
என் கணவரும் நானும் கூலி வேலை செய்துதான் எங்கள் குடும்பத்தை கவனித்து வந்தோம் என்றும் எங்கள் குடும்பம் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் எனது கணவர் உயிரிழந்து விட்டதால் எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது என்றும் எங்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கூறினார். உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டாஸ்மார்க் கடையை அகற்ற பெண்கள் பெண்கள் விடுதலை பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி தமிழரசி உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் சேர்ந்து டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் இந்த டாஸ்மார்க் கடை இப்பகுதியில் இருப்பதால் சாலைகளிலே அமர்ந்து மதுபானங்களை அருந்துவதாகவும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக இப்பகுதி அமைந்து விட்டதாகவும் ஆகையால் மது போதையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் சென்று வருவதாகவும். இப்பகுதி முழுவதும் மது அருந்திவிட்டு மது போதையில் வழியில் செல்பவர்களை தகாத வார்த்தையில் பேசி வருவதாகவும் இதனால் அப்பகுதியில் செல்லும் கூலி இதனால் அப்பகுதியில் பள்ளி மாணவிகள் மாணவர்கள் கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அச்சத்துடன் இருப்பதாகவும் ஆகவே உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற சாலை மறியலில் ஈடுபட்டனர். அது மட்டும் இல்லாமல் உயிரிழந்த குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்கவும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பெண்கள் விடுதலைக் கழகம் தமிழரசி போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
எது எப்படியோ உயிரை பணயம் வைத்து ஒரு சில டாஸ்மாக் கடையினால் ஒரு சிலர் தன்னுடைய சுயநலத்திற்காக சுய லாபத்திற்காக ஆதாயம் தேடி வருவதால் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆகவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் தேனி மாவட்ட ஆட்சியரின் செயல்பாட்டை!