காவல் செய்திகள்

நடு ரோட்டில் கஞ்சா போதையில் பெண்ணை சேலையை பிடித்து இழுத்து அத்துமீறலில் ஈடுபடும் நபரின் அதிர்ச்சி வீடியோ! செயலிழந்து காணப்படும் நிலக்கோட்டை காவல்துறை!?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சமீப காலமாக இளைஞர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் வசிக்கும் குறிப்பாக பெண்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து மட்டுமே நடப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் அத்துமீறி நடக்கும் கஞ்சா போதை ஆசாமிகள் மீது பல புகார்கள் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது தான் வழக்கு பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நிலக்கோட்டையில் பெண்கள் மீது இது போன்று அத்துமீறல் செயல்களில் கஞ்சா போதையில் பல நபர்கள் தொடர்ந்து செய்து வருவதாகவும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் முருகனிடம் வாட்ஸ் அப் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை அனுப்பினால் அதைப் பற்றி கவலையே படாமல் அவருடைய வசூல் வேட்டையில் மட்டுமே கவனமாக இருக்கிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமில்லாமல் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் அவர்களிடம் நேரில் புகார் கொடுத்தாலும்அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ள நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தாலும் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் துணை காவல் கண்காணிப்பாளர் இருக்கிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது எப்படியோ விபரீதங்கள் நடக்கும் முன்பு காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பது தான் நிதர்சனம். ஆகவே தென்மண்டல ஐஜி அசரா கார் அவர்கள் உடனடியாக நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்தில் நடக்கும் கொலை கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மற்றும்கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யும் சமூக விரோதிகளின் கூடாரங்களை ஒட்டுமொத்தமாக ஒலுத்துக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Related Articles

12 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button