நடை பாதைகளில் கடைகளை மேல் வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக கட்டும் T. நகர் (மண்டலம் 10 ) (பகுதி 30 )( வார்டு 133 (மாநகராட்சி அதிகாரிகள்!?
நடைபாதை கடைகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க தயங்கும் சென்னை மாநகராட்சி ஆணையர்!?
T. நகர் ரங்கநாதன் தெருவில் நடைபாதைகளில் கடைகளை மேல் வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக கட்டும் T. நகர் (மண்டலம் 10 ) (பகுதி 30 )( வார்டு 133 (மாநகராட்சி அதிகாரிகள்!
நடைபாதை கடைகளை அகற்ற
நடவடிக்கை எடுக்க தயங்கும் சென்னை மாநகராட்சி ஆணையர்!?
சென்னையில் உள்ள வணிக பகுதிகளில் தி.நகர் மிக முக்கியமானது. இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. தினசரி லட்ச கணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஒரு நாள் வர்த்தகம் பல நூறு கோடிகளை எட்டும்.
.சென்னையில் உள்ள தி நகர் ரங்கநாதன் தெருவில் வாரந்தோறும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதும் குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் மிக அதிகமான கூட்டம் இருக்கும் என்பது தான் நிதர்சனம்.
எந்நேரமும் கூட்ட நெரிசலாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம்.
கூட்டத்தை கட்டுப்படுத்த தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு, மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாத சாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி ரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு 2023 மே மாதம் 16 ஆம் தேதி
ஆகாய நடை பாதையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்,
நடை மேம் பாலத்திலிருந்து இறங்கி ரங்கநாதன் தெருவில் நடந்து சென்று பொதுமக்களிடம் கை குலுக்கு, செல்பி எடுத்துக் கொண்டார். மேலும், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது முதல்வர் வந்து சென்றதை மாநகராட்சி அதிகாரிகள் மறந்து விட்டதன் காரணத்தால்
ரங்கநாதன் தெருவில் இருந்து ஆகாய நடை மேம்பாலம் சொல்ல முடியாமல்
பொதுமக்கள் மிகவும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு எல்லாம் காரணம் 35 அடி அகலம் கொண்ட ரங்கநாதன் தெருவில் தற்போது 5 அடி பாதையில் தான் பொதுமக்கள் செல்ல முடியும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
35 அடி சாலையின் இரு புறங்களிலும் 30 அடிக்கு நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு தான் முக்கிய காரணமாக இருக்கிறது ! இந்த நடை பாதைகளால் பொதுமக்கள் ஆகாய நடைமேடை மற்றும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுவும் முக்கியமாக ரங்கநாதன் தெருவில்
மாம்பலம் ரயில் நிலையம் மற்றும் ஆகாய நடை மேடை அருகில் மூடி உள்ள சரவணா ஸ்டோர் முன்பு மட்டும் 30 க்கும் மேற்பட்ட நடை பாதை கடைகள் உள்ளன. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர் என
இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் சென்னை மாநகராட்சிக்கு புகார் மனு கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர் மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவில் சென்னை T.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைக்காரர்கள் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையின் இருபுறம் உள்ள கடைக்காரர்கள் ரயில்வே ஸ்டேஷன் முதல் உஸ்மான் சாலை வரை சுமார் 30 அடிக்கு மேல் ஆக்கிரமிப்பு பாதசாரி களை நடக்க விடாமல் இடையூறு செய்து வருவதோடு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து அடாவடித்தனம் செய்து வருகிறார்கள் அதுமட்டும் இல்லாமல் அசிங்கமாகவும் பேசி மோதல் போக்கில் ஈடுபடுகிறார்கள் என்றும் மேற்படி தெருவில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அந்தத் தருணத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. திடீர் என்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் ரங்கநாதன் தெருவிற்கு உள்ளே நுழைவதற்கு நுழையவே முடியாது என்பதுதான் நிதர்சனம். என்றும் மேற்படி ரங்கநாதன் தெருவில் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கடை உரிமையாளர்கள் பூக்கடை, வளையல் கடை, பரிசு பொருள் கடை ,சோடா கடை, கரும்பு ஜூஸ் கடை ,பாப்கான் கடை, சமோசா கடை ,பெல்ட் கடை, வாட்ச் கடை ,மற்றும் செப்பல் கடை ,இன்னும் பல கடைகளை சுய லாபத்திற்காக ஆக்கிரமித்து நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை மேல் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருவதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் கொஞ்சம் கூட மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் தங்கள் சுயலாபத்திற்காக பொது மக்கள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்றி பாதசாரிகள் சிரமம் இல்லாமல் ஆகாய நடைமேடை மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு வழிவகை செய்து தருமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இது சம்பந்தமாக அப்பகுதி சமூக ஆர்வலர்களிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தனர்.
அது என்னவென்றால் ரங்கநாதன் தெருவில் இருபுறமும் நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள் இருக்கின்றன இதில் குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வங்கி சீல் வைத்து மூடி இருக்கும் சரவணா கோல்ட் பேலஸ் கடை முன்பு 30க்கும் மேற்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகளே மேல் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் (மண்டலம் 10)
( வார்டு 133 )(பகுதி 30)
இதனால் மாதம் பல லட்ச ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் நடைபாதை கடைக்காரர்கள் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதாக டி நகர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் அந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இது சம்பந்தமாக மாநகராட்சி அலுவலகங்களில் பணி செய்யும் நேர்மையான அதிகாரிகள் கூறுகையில் ரங்கநாதன் தெருவில் நடைபாதை கடைகளை மேல் வாடைக்கு விட்டு வரும் பல லட்ச ரூபாய் பணத்தில் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கும் பங்கு செல்வதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
எது எப்படியோ ஆகாய நடைமேடை திறந்து வைத்த பின்பு ரங்கநாதன் தெருவில் முதல்வர் நடந்து வரும் அன்று மட்டும் ஏன் நடைபாதை கடைகளை வைக்கவில்லை. அப்படி நடைபாதை கடைகள் இருந்திருந்தால் முதல்வர் ரங்கநாதன் தெருவில் நடந்து வர முடியுமா !? நடந்து வந்திருந்தால் அதிகாரிகளின் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பாரா !?இல்லை நடைபாதை கடைகளை மேல் வாடகைக்கு விட்டு மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சாதகமாக செயல் படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.