நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?
கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா அண்ணா பல்கலைக்கழகம் !
நன்கொடை என்ற பெயரில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாய் நூதன மோசடி !?
கோவை ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்குமா உயர்கல்வித்துறை!
செங்கோட கவுண்டர் தொண்டு அறக்கட்டளை பெயரில் கோயமுத்தூரில் ஸ்ரீ சக்தி இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியர் அண்ட் டெக்னாலஜி கல்லூரிக்கு சேர்மேனாக தங்கவேலு என்ற செங்கோட கவுண்டர்இருக்கிறார்.
ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் & டெக்னாலஜி கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பொறியியல் நிறுவனம் ஆகும். இந்தக் கல்லூரி 2006 இல் நிறுவப்பட்டது, இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, அதன் நான்கு திட்டங்கள் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகாரம் பெற்றவை என்று கல்லூரியின் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி,
எல்&டி பைபாஸ், சின்னியம்பாளையம், கோயம்புத்தூரில் அமைந்துள்ளது.)
ஸ்ரீ சக்தி கல்லூரி ஆரம்பிப்பதற்கு செங்கோட கவுண்டர் தங்கவேலு கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தனாட்சி பொறியியல் கல்லூரியின் சேர்மேனாக உள்ளார்.Sheelan Thangavelu
Joint Secretary யாக உள்ளார்.
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம்: உயர் நீதிமன்றம்
கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.
ஸ்ரீ சக்தி கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் படிக்க நினைக்கும் சப்ஜெக்ட் காலியாக இருப்பதாக மூளைச்சலவை செய்து இலட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு வாங்கிய பணத்திற்கு உண்டான ரசிதை கொடுக்காமல் 300 ரூபாய்க்கான அப்ளிகேஷன் கட்டணத்திற்கு மட்டும் ரசீது கொடுத்துவிட்டு டொனேஷன் என்ற பெயரில் மாணவரிடம் வாங்கும் லட்சக்கணக்கான பணத்திற்கு ரசீது வழங்காமல் நூதன மோசடி செய்து அப்படி நன்கொடையாக வாங்கும் பல கோடி ரூபாய் பணத்துக்கு வரி கட்டாமல் மோசடி செய்து வருவதாக ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஹாஸ்டலில் போதுமான வசதிகள் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மட்டும் இல்லாமல் இந்த கல்லூரியை பற்றி 40 சதவீதம் தான் நன்மதிப்பு கொடுத்துள்ளார்கள் இரண்டு ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்துள்ளார்கள்.
இதனால் பல மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல மறுத்து கட்டிய பணத்தை திருப்பி கேட்டு வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
ஆனால் அப்படி திருப்பி கேட்கும் மாணவர்களுக்கு பணத்தை தராமல் பணம் கட்டிய மாணவர்களின் பெற்றோர்களை கல்லூரி நிர்வாகத்தில் இருப்பவர்கள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என்றால் ஒரு சில ஆளும் கட்சி அமைச்சர்களிடம் கல்லூரியின் சேர்மேன் செங்கோடைய கவுண்டர் தங்கவேல் அவர்களுக்கு தொடர்பு வைத்து உள்ளதாகவும் தேர்தல் நேரத்தில் தேர்தல் செலவுக்காக ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு ஒரு பெரும் தொகையை கொடுத்துள்ளார் என்றும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியாளர்களிடம் புகார்! ஸ்ரீ சக்தி கல்லூரியில் சேர்வதற்கு இரண்டரை லட்சம் பணம் கட்டிய மாணவரின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் சம்பந்தமாக களத்தில் இறங்கி விசாரித்த போது அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளது
தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்கண்ணன் என்பவர் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.தன் மகன் நாகராஜன் பொறியியல் கல்லூரி படிக்க ஆசைப்பட்டதால் குடும்ப பொருளாதார சூழ்நிலையில் கோவையில் உள்ள ஸ்ரீ சக்தி கல்லூரிக்குச் சென்று கல்லூரியில் சேர 29/06/22 விண்ணப்பம் வாங்கியுள்ளார்.அப்போது தன் மகன் படிக்க விரும்பும் கம்ப்யூட்டர் சப்ஜெக்ட் வேண்டும் என்றும் அதற்கு கல்லூரி நிர்வாகம் தற்போது காலியாக இல்லை என்றும் காத்திருந்தால் ஒரே ஒரு சீட் தருகிறேன் என்றும் அதற்கு 2.5 லட்சம் நன்கொடை பணம் கட்ட வேண்டும் அதுவும் இன்றே கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். உடனே அந்த மாணவனின் பெற்றோர் முத்து கண்ணன் பணத்தை கட்டியுள்ளார்.
அதன் பின்பு மாணவர் நாகராஜ் தனக்குத் தெரிந்த மாணவர்களிடம் கல்லூரியைப் பற்றி விசாரித்துள்ளார் அப்போது அந்தக் கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லை என்றும் அந்தக் கல்லூரக்கு கூகுளில் குறைவான மதிப்பு வழங்கி இருப்பதையும் தெரிந்து கொண்ட அந்த மாணவன் தன் வருங்கால பெற்றோரிடம் அந்த கல்லூரியில் நான் படிக்க விரும்பவில்லை கூறியுள்ளார்.
அதன் பின்பு அந்த மாணவனின் தந்தை முத்துக்கண்ணன் ஸ்ரீ சக்தி கல்லூரி நிர்வாகத்திடம் தன் மகன் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கு வந்து படிக்க இயலாது என்றும் நான் தற்போது பெங்களூரில் பணி செய்கிறேன் அதனால் அடிக்கடி வர முடியாத சூழ்நிலையால் எங்கள் குடும்ப சூழ்நிலை கருதி மகன் படிக்க கட்டிய இரண்டரை லட்சம் பணத்தை கேட்டுள்ளார்.
ஆனால் பலமுறை அவரை வரவழைத்து பணம் தர மறுப்பதுடன் பள்ளி நிர்வாகம் மிரட்டும் தோணியில் பேசுகிறார்கள் என்றும் அதன் பின்பு செய்வதறியாது கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஸ்ரீ சக்தி கல்லூரியில் கட்டிய இரண்டு லட்சம் பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு புகார் அளித்துள்ளதாக பணம் கட்டிய மாணவனின் தந்தை முத்து கண்ணன் கூறினார்.
ஆனால் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் இருந்து என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என்றும் மாணவனின் தந்தை கூறினார்.
எப்படியோ கல்லூரியின் சேர்மன் செங்கோட கவுண்டர் தங்கவேல் அவர்கள் வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தவர் .ஆகவே மாணவர்களின் நலன் கருதி அவர்கள் குடும்ப சூழ்நிலையை கருதி நன்கொடையாக பெற்ற 2.50 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருவதற்கு முன்வர வேண்டும் .
நன்கொடை இல்லாமல் மாணவர்களுக்கு சேர்க்கை வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். நன்கொடை வசூலை தடுக்கும் வகையில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதளத்தை உருவாக்கி, எந்தெந்த கல்லூரிகள் நன்கொடை வசூலிக்கின்றன என்பதை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த இணையதளம் தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். அந்த விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது மாநில அரசுகள் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிகளில் நன்கொடையாக பெரும் பல லட்ச ரூபாய் பணங்களை பெற்றுக் கொண்டு வாங்கும் பணத்திற்கு ஆதாரமாக கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு ரசிதும் தராமல் நூதன மோசடி செய்து வருவதால் இந்தக் கல்லூரி நிர்வாகம் மீது உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கல்லூரியின் நிர்வாகம் பற்றி இன்னும் பல அதிர்ச்சி தகவலும் வந்துள்ளது. விரைவில் அந்தத் தகவலை ரிப்போர்ட்டர் விஷன் இதழில் விரைவில் வெளியிட உள்ளோம்.
கல்வி போதித்தல் என்பது ஒரு புனிதமான சேவை. கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் தொழில் அல்ல என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.