மதுப் பிரியர்கள் அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடைகள் மூட மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17.02.2022 முதல் 19.02.2022 மற்றும் 22.02.2022 ஆகிய தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதியினை சுற்றி 5 கீ.மீ சுற்றளவில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டியிருக்கும் –
நகர்புற உள்ளாட்சி தேர்தல்-2022 நடைபெறும் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 (எப்.எல்.6 தவிர) வரையிலான மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மதுபானம் விற்பனை செய்யப்படாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி வாக்குபதிவு நாளான 19.02.2022 அன்று நடைபெறுவதால் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு , 17.02.2022 காலை 10.00 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12.00 மணி வரை நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் அதனை சுற்றி 5 கீ.மீ சுற்றளவில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுகூடங்கள் மூடப்பட்டியிருக்கும். மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியினை சுற்றி 5 கீ.மீ சுற்றளவில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டியிருக்கும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்