நிர்வாகம் சீர்கெட்டாலும் பரவாயில்லை தேனி மாவட்ட ஆட்சியரின் கார் கதவுகளை திறந்து விட்டால் போதும் டபுள் புரமோஷன்!? மாதம் 15 லட்சம் வரை கல்லா கட்டும் பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம்!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களில்
கிராம ஊராட்சியை பொறுத்த வரை நிர்வாக அதிகாரம் மிக்கவர் ஊராட்சி தலைவராக இருந்தாலும் அவர் அரசு ஊழியர் அல்ல.
ஊராட்சி செயலார் (ஊராட்சி எழுத்தர்) பொறுப்பான அலுவலர் ஆவார்.
ஊராட்சி ஒன்றிய அளவில் கிராம ஊராட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர் வட்டார வளர்சி அலுவலர்.
மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர் உதவி இயக்குனர்
மாநில அளவில் கிராம ஊராட்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவர் ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர்
இவர்கள் ஊரக வளர்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் அரசு செயளார் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் ஆவார்கள் . இப்படித்தான் சட்டம் சொல்கிறது.
தேனி மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 130 கிராம பஞ்சாயத்து இருக்கிறது. 130 கிராம பஞ்சாயத்தில் நடக்கும் மக்கள் நலத் திட்டப்பணிகளை ஆய்வு செய்தால் ஒரு ஊராட்சிக்கு 15,000 வீதம் மாதம் குறைந்தது 130 கிராம பஞ்சாயத்து ஊராட்சிகளில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் அலுவலகம் கல்லாகட்டி வருவதாக அதிர்ச்சி தகவல்.
தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளில் இலஞ்சம் ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்கள் கொடுத்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேனி மாவட்ட ஆட்சியர் கண்டும் காணாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊராட்சியில் நடக்கும் மக்கள் நல திட்ட பணிகளில் ஊழல் நடப்பதால் அரசிற்கு பெறும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேனி மாவட்ட நிர்வாகத்தின் மீது சுமத்தும் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு மௌனம் மட்டுமே தேனி மாவட்ட ஆட்சியரின் பதிலாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
இதற்குக் காரணம் தேனி மாவட்ட ஆட்சியருக்கு சேர வேண்டியதை மாதம் மாதம் சேர வேண்டிய நேரத்தில் சேர வேண்டிய இடத்தில் சரியாக சேர்ந்து விடுவது தான் என்று ஆட்சியாளர் அலுவலகத்தில் பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் ஒரு சில பேசியபோது காத்து வாக்கில் நமக்கு கிடைத்த தகவல்.
தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் ஊழல் முறைகேடுகள் நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் வழக்குத் தொடர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (கே. அன்பழகன்) இருந்தபோது அலுவலகத்தில் பராமரிக்கும் வரவு செலவு கணக்குகளை கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டு மனு அனுப்பினால் பதில் தர வேண்டிய பொது தகவல் அலுவலர்( மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் k.அன்பழகன்) உதாசனப்படுத்தும் வகையில் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு உதாரணம் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி சௌந்தர பாண்டியன் என்பவர் தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் பராமரிக்கும் OSR (old settlement register)RSR.( Recovery settlement register)SLR (settlement land register) இந்த மூன்று ஆவணங்களை கள ஆய்வு செய்தது நகல் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு அனுப்பி இருந்தார். அந்த மனுவிற்கு தேனி மாவட்ட ஆட்சியரின் முன்னால் நேர்முக உதவியாளர் (அப்போது பணியில் இருந்த கே.அன்பழகன் )அலுவலகத்திலிருந்து 05/04/2023 அன்று காலை 11 மணிக்கு கள ஆய்வு செய்ய வரும்படி மனுதாரருக்கு பதில் மனு அனுப்பி இருந்தார்கள். 28/02/23ஆம் தேதி அனுபியதற்கு ஒரு மாதத்திற்கு பின்பு பதில் பதில் அனுப்பி உள்ளனர் . ஆனால் அதில் 25/03 23 அன்று 05/04/23 அன்று கள ஆய்வு செய்து கொள்ளுமாறு தேனி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் k. அன்பழகன் கையொப்பம் இட்டுள்ளார். ஆனால் தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் அலுவலகத்தில் இருந்து 05/04/23 அன்றுதான் மனுதாரருக்கு விரைவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தபால் 06/04/23 அன்று மதியம் தான் மனுதாரரின் கையில் கிடைக்கப்பெற்றது. 6/04 23 ஆம் தேதி கையில் வாங்கிய மனுதாரர் 05/04/23 அன்று கள ஆய்வுக்கு எப்படி செல்ல முடியும். மனுதாரருக்கு அனுப்பியதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த அன்பழகன் பல கோடி ஊழல் முறைகேடு செய்ததை மறப்பதற்காக நூதன முறையில் மோசடி செய்து உள்நோக்கத்துடன் செயல்பட்டு வந்து இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
ஏனென்றால் மனுதாரர் கேட்ட கோப்புகளை கலாய்வு செய்தால் மனுதாரர் கேட்கப்பட்டுள்ள நடந்த பணிகளில் ஊழல் முறைகேடுகள் நடந்த உண்மை வெட்ட வெளிச்சத்திற்கு வந்து விடும் என்றும் இதுபோன்று நூதன முறையில் மனுதாரர்களுக்கு பதில் மனு அனுப்பி நடந்த ஊழல் முறைகேட்டிலிருந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அன்பழகன் தப்பித்து வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு இழந்துள்ளது.
ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் இது போன்ற நேர்முக உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் வரும்பொழுது அவர்களின் கார் கதவுகளை திறந்து விட்டு ஊளை கும்பிடு போடுவது தான் இவர்களின் வழக்கமாகும். அப்படி ஊளை கும்பிடு போட்டுக் கொண்டு இரட்டிப்பு பதவி உயர்வு பெற்றுக்கொண்டு சென்றுள்ளார் இதற்கு முன்பு இருந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் .
இவர்கள் மீது தேனி மாவட்ட ஆட்சியர் இதற்கு முன்பு இருந்தவர்களும் சரி தற்போது இருக்கும் மாவட்ட ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை .ஏனென்றால் மாவட்ட ஆட்சியருக்கு மாதம் மாதம் சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான தொகையை சரியாக சேர்த்து விட்டு ஆட்சியருக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொழுது ஆட்சியரின் கார் கதவுகளை திறந்து விடுவதும் அவர்களுக்கு ஊளை கும்பிடு போடுவதும் பார்க்கும் மக்களுக்கு ஏதோ அப்பாவிகள் போல இரக்கம் காட்டத் தோன்றும் விதத்தில் நடந்து கொள்வது. இது எல்லாம் மக்களை ஏமாற்ற நினைக்கும் நாடகம் என்றும் மக்கள் ஏமாளிகள் தான் ஆனால் முட்டாள்கள் அல்ல . ஆட்சியரின் கார் கதவை திறந்து விட்ட முன்னாள் நேர்முக உதவியாளர் கே.அன்பழகனுக்கு இரட்டிப்பு பதவி உயர்வு ( DRO பதவி)வழங்கி வழி அனுப்பி வைத்து உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாற்றுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் இருக்கும் முக்கியத் துறையில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் மீது தொடர்ந்து வரும் லஞ்ச ஊழல் முறைகேடு புகார்கள் மீது உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் , தமிழ்நாடு தலைமைச்செயலாளர் இறையன்பு அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக சென்றடையும் .
அதுமட்டுமில்லாமல் தற்போது நடந்து கொண்டு இருக்கும் திமுக ஆட்சி மற்றும் கட்சி மீது உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த முக்கியத்துறையில் இருந்த உயர் அதிகாரிகள் தற்போதும் திமுக ஆட்சி வந்த பிறகும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து களை எடுக்க வேண்டும் . அது மட்டும் இல்லாமல் தேனி மாவட்ட நிர்வாகத்தின் மீது வரும் ஊழல் குற்றச்சாட்டு புகார் மற்றும் விமர்சனங்களை முற்றிலும் போக்க தமிழக முதல்வர் அவர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே தற்போது செயல்பட்டு வரும் ஆட்சிக்கும் கட்சி மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று சமூகஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.
ஆட்சி மாறினாலும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிகள் மாறவில்லை என்றும், எதிர் வருங்காலங்களிலாவது தேனி மாவட்டத்தின் அவலநிலை மாறுமா? என்று
பொறுத்திருந்து பார்ப்போம்