நிலத் தகராறு காரணமாக துப்பாக்கி சூடு !

இராசிபுரம் அருகே நிலத் தகராறு காரணமாக, மாமனார் மீது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் பலத்த காயத்துடன் மாமனார் மருத்துவமனையில் அனுமதி!மருமகன் கைது!

நாமக்கல் ஜன 05.நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த
ஆர். புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன் (வயது60.) திருமணம் ஆகாதவர்
இவரின் அண்ணன் மகளான குப்பாயி என்பவரை வளர்த்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனை என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
சௌந்தர்ராஜன் புதுப்பட்டி பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
வெள்ளையன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு பத்திரத்தை அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமான நிலத்தை செளந்தர்ராஜன் மீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.
எனது காட்டு பத்திரத்தை நீ எதுக்கு வாங்கினாய் எனக் கூற வெள்ளையனுக்கும், சௌந்தர்ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இராசிபுரம் அடுத்த ஆர். புதுப்பட்டி அடிவாரப்பகுதியில் உள்ள தனது அரளித் தோட்டத்தில் வெள்ளையன் வேலை செய்து கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செளந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில் வெள்ளையனின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் வெள்ளையனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த சௌந்தர்ராஜனை போலீசார் கைது செய்தனர்.