நீதிமன்றத்தில் ஆஜராக ஜோசியரிடம் நேரம் பார்க்க சொல்லும் அமைச்சர்!!!
அதிமுக ஆட்சியில்போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்து தற்போது மின்சாரத் துறை அமைச்சர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்போது அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது
தன்மீது தொடரப்பட்டிருக்கும் மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வாய்தா வாங்கிக் கொண்டு வந்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி என்று கூறப்பட்டது.
ஏற்கெனவே பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்த செந்தில் பாலாஜி, கடந்த ஜூலை 27-ம் தேதியும் ஆஜராகாததால், `அமைச்சர் என்பதற்காக கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது’ என்று கண்டித்து, விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.
அமைச்சர் ஏன் ஆஜராகவில்லை என்று விசாரித்தால், ஜூலை 27-ம் தேதி உங்கள் கிரகத்துக்கு நாள் நன்றாக இல்லை. அன்றைய தினம் கோர்ட்டில் ஆஜரானால் சிக்கல் ஏற்படலாம்’ என்று ஜோதிடர்கள் தரப்பில் சொன்னதால்தான், அன்றைய தினம் அமைச்சர் ஆஜராகவில்லை என்று கிசுகிசுகிறார்கள் கிரீன்வேஸ் ரோடு வட்டாரத்தில். இதையடுத்து,ஆகஸ்ட் 6-ம் தேதி நாள் நன்றாக இருக்கிறதா…’ என்று ஜோசியர்களிடம் கேட்டிருக்கிறதாம் அமைச்சர் தரப்பு!